பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

காஷ்மீரில் ஏற்படும் மாற்றம் !


காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் அரசியல் நடவடிக்கைகளில் பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் தற்போதைய அவரது அரசியல் முயற்சி பாராட்டுக்குரிய நடவடிக்கை. இது குறித்து தெஹல்கா இதழ் செய்திகட்டுரை வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் கட்சிக்கு மாணவர
ணி அமைத்திருக்கிறார்.

நமக்கெல்லாம் மாணவர்கள் அரசியலில் ஈடுபடுவது சாதாரணமானது. ஆனால் காஷ்மீரில் , பல ஆண்டுகளாக மாணவர் சக்தி என்பது தீவிரவாத பாதையில் திரும்பியிருந்தது. 1960 களில் காஷ்மீர் விடுதலை என்ற நோக்கில் போரட்டப்பாதையில் மாணவர்கள் திரும்பினர்.

ஒமரின் தாத்தா ஷேக் அப்துல்லாவின் அரசு 1953ல் கலைக்கப்பட்ட பிறகு தனி காஷ்மீருக்காக போராடத் துவங்கினார். மீண்டும் 1975ல் அன்றைய பிரதமர் இந்திராவும் , ஷேக் அப்துல்லாவும் போட்ட ஒப்பந்தப்படி ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலைக்கு திரும்பினார். 1980களில் தனிக் காஷ்மீருக்கான தீவிரவாத நடவடிக்கைகளில் இறங்கிய காரணத்தால் மாணவர் அமைப்புகள் தடை செய்யப்பட்டன.

தற்போது மாணவர் அமைப்புகளை ஏற்படுத்தி அரசியல் நீரோட்டத்தில் அவர்களை கொண்டு வருகிற பணியை முதல்வர் ஒமர் துவங்கியுள்ளார். எதிர்கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் மாணவர் அமைப்புகளை அமைக்கும் பணியை துவங்கியுள்ளது. கணிசமான ஓட்டு உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில், ராகுல்காந்தியும் பல்கலைக்கழகங்களுக்கு சென்றது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக ஒவ்வொரு புதிய தலைமுறையும் தீவிரவாத தலைமுறையாக உருவெடுத்தது தற்போது புதிய கோணத்தில் திரும்பியுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் பொதுவாழ்க்கைக்கு விருப்பப்படுகிற நிலையில் காஷ்மீர் பாதை மாறுகிறது.

மாணவர் அமைப்புகள் வெற்றி பெறும் நிலையில், காஷ்மீரில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும் என தெஹல்கா இதழ் நம்பிக்கை தெரிவிக்கிறது. ( படத்தில் மாணவர் தலைவர்களுடன் ஒமர் அப்துல்லா )

# இளையோர் சக்தி வன்முறை தவிர்த்து நன்முறைக்கு திரும்பட்டும்...
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக