பிரபலமான இடுகைகள்

சனி, 30 மார்ச், 2013

இணையத்தில் நடுநிலை - கஷ்டந்தான்...




நடுநிலய மெயிண்டெயின் பண்றது ரொம்ப கஷ்டம் தான் போல.... 

* முதல்ல திராவிடத்தை ஒழிப்பது டார்கெட்
* உடனடியாக திமுகவை ஒழிக்கனும், அதுக்காக இன்னொரு திராவிடக் கட்சிய ஆதரிக்கலாம்...

* ஈழப்பிரச்சினைக்கு திமுக,அதிமுக தான் காரணம்
* ஆனால் ஈழத்தில் திமுக தான் படைகளை அனுப்பி போரிட்டது...

* தமிழகத்தின் பின்னடைவுக்கு திராவிடக் கட்சிகளே காரணம்
* முக்கியமாக திமுக தான் தமிழுக்கு எதிரி...

* காங்கிரஸ் கூட்டணிய விட்டு திமுக உடனே வெளியே வரனும் சொல்லனும்
* வந்துடுச்சா..... இது லேட்டு..... நாடகம்....


* சிபிஐ ரெய்டா.... இது சின்னது தான்... அடுத்து மதுரை குலுங்கும்....

* சிபிஐ ரெய்டே நாடகம், அனுதாபம் கிளம்பி திமுக செயிச்சு, காங்கிரஸோட சேந்துரும்...


* அமெரிக்கா தீர்மானம் வேஸ்ட்

* அமெரிக்கா தீர்மானத்த வலுப்படுத்த காங்கிரஸ் கூட்டணியிலயே இருந்திருக்கனும்...வந்துடுச்சா.........

*
நைஸா ஈழத்தாய ஆதரிக்கனும்
*
எதிர்ப்பு வந்தா, அவங்க எதிரி தான், துரோகிய தான் ஒழிப்போம்னு சொல்லனும்...

*
கெரண்டு, பஸ்ஸு, பாலு எது எங்க போனாலும் பல்ல கடிச்சிகிட்டு இருக்கனும்
*
அவுரு டிவில மானாடு மயிலாடுன்னா, காளியாட்டம் போடனும்...

*
அவுரு அறிக்கய தெனைக்கனும் படிக்கனும், கிழிக்கனும்
*
அம்மா வருசம் ஒரு அறிக்க விட்டாலும் அன்னைக்கு பேப்பர் படிக்கக் கூடாது...

ஸ்ஸ்ஸ்சப்பா.... ரொம்ப கஷ்டந்தான்....

#
விடாத.... ஓடு,ஓடு.... அவுரு அறிக்க வுட்டுட்டாரு....

வெள்ளி, 29 மார்ச், 2013

அன்புள்ள விகடன் உரிமையாளர் அவர்களுக்கு



அன்புள்ள ஆனந்த விகடன் உரிமையாளர் அவர்களுக்கு, வணக்கம்.

எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவே தாங்கள் பத்திரிக்கைகளை நடத்தி வருவதற்கு மிக்க நன்றி. 

வாராவாரம், ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடனின் கவர்ஸ்டோரிகளை திமுகவிற்கே ஒதுக்குவது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கவே இந்தக் கடிதம்.

அதிலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட திமுக இழந்ததற்கு தங்களது பத்திரிக்கைகளே காரணம் என்ற பெருமிதம் உங்கள் மனதில் இருந்தாலும், திமுகவை மக்கள் மறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு செயல்படுவது தங்கள் பெருந்தன்மை.

ஜெயலலிதா ஆட்சி அமைந்து தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் சூழலில் அவர்களை விமர்சிப்பது இயலாத காரியம்.

தமிழக மக்களும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருப்பதால், மக்களுக்கு பிரச்சினையுமில்லை, அது குறித்து எழுத வேண்டிய தேவையும் இல்லை.

நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் மக்களிடம் சென்று, மக்களோடு வாழ்ந்து, மக்கள் மொழியில் பேசி, மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் சூழலில், திமுக-வை வழிநடத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது, மறுக்க முடியாது.

அதிலும் கலைச்சேவை புரிய ஆரம்பிக்கப்பட்ட "டைம்பாஸ்" இதழையும், பசுமை விகடனையும் கூட இந்தப் பணியில் ஈடுபடுத்தும் போது தான் தாங்கள் மிக உயர்ந்து நிற்கிறீர்கள்.

இன்னும் "சுட்டி விகடன்" மட்டுமே பாக்கி என நினைக்கிறேன்.

இந்த வார ஆனந்தவிகடனில் கட்டுரை வெளியிட்டு "திக்குத் தெரியாதக் காட்டில் தவிக்கும் திமுக"விற்கு கலங்கரை விளக்காய் மாறியமைக்கு மனமார்ந்த நன்றி.

நான் முதலில் விளித்துள்ள " அன்புள்ள" என்பது, சிறு வயதில் படித்த "சிரிப்புத்திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு" போன்றவர்களால் ஏற்பட்ட அன்பு.

அதுபோல, மதிப்பிற்குரிய வாசன் அவர்களுக்காக வணக்கம். எங்கள் தலைவர் கலைஞரைப் போல் நாங்களும் பழைய நினைவுகளை மறக்காதவர்கள்.

வாரம் தவறாமல், கழகத்தவர்கள் படம் மட்டுமே அட்டையை நிறைக்க வேண்டும். அட்டை டூ அட்டை கழகமே கண்ணில் பட வேண்டும்.

உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். DMK will take it.

நன்றி
அன்புடன்
திமுக தொண்டன்
சிவசங்கர்.

சனி, 16 மார்ச், 2013

சட்ட மன்றம் - நாளைய அமைச்சர்கள் - ஓர் கண்ணோட்டம் !


( இந்தக் கட்டுரை 2011 டிசம்பரில் முகநூலில் எழுதியது...
தற்போது உங்கள் பார்வைக்கும், சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில். அவை கூடிய உடன் Update உண்டு.  )


தலைவர் கலைஞர் அவர்களின் செயற்குழு தீர்மானத்தின் நிர்பந்தம் காரணமாக முல்லை பெரியார் பிரச்சினையில் சட்டமன்றம் கூட்டப்பட்டது உங்களுக்கு தெரிந்த செய்தி. 

சட்டமன்றத்தில் ஜெ-வால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டது, தளபதி அவர்களின் உரை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது பத்திரிக்கை வாயிலாக வெளி வந்த செய்தி.

தளபதி அவர்களின் உரையை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் , சிறு சலசலப்பும் இல்லாமல் கூர்ந்து கவனித்தது பத்திரிக்கைகளில் வராத , நாங்கள் நேரடியாக கண்ட காட்சி.

கட்டுரையின் செய்தி அதுவல்ல.....

கம்யூனிஸ்டுகள், த.மு.முக வரை விவாதம் சரியாக போனது.

சரத்குமார் தொடங்கி தனியரசு, கதிரவன், தமிழரசன் போன்ற இன்னும் "மிக" ஆதரவு கட்சி   ச.ம.உ-க்களின் --------சத்தம் தாங்காமல் கொட்டாவி வர ஆரம்பித்தது.

அப்போது எதிர் புற கடைசி வரிசை  கண்ணில் பட்டது. ஒரு நபர் நெருக்கடிக்கு இடையில் குறுகி உட்கார்ந்திருந்தார். அவர் இசக்கி சுப்பையா... முன்னாள் சட்ட அமைச்சர். ஏன் பதவி போனது என்று தெரியாமல் இன்னும் சஸ்பென்ஸ்.

நம்ம பக்கத்து மாவட்டத்துக் காரர் பரஞ்ஜோதி எங்கே என்று பார்த்தேன்.  நாலாவது வரிசை...
அப்புறம் என்ன..., எண்ண ஆரம்பித்தேன் எத்தனை முன்னாள் அமைச்சர்கள் என.

இதிலேயே இரண்டு வகை. முன்னாள்-முன்னாள் அமைச்சர்கள், இன்னாள்-முன்னாள் அமைச்சர்கள்.

 இன்னாள்- முன்னாள் அமைச்சர்கள் மட்டும் 9 பேர், இதில் சிலரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, இரண்டாம் முறை எம்.எல்.ஏவாக இருந்தும் . மா.கம்யு -வின்  டெல்லிபாபு-வின் உதவியை நாடினேன், அவரும் இரண்டாம் முறை .

அப்படியும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பெயர் தெரியவில்லை., எங்கள் வரிசையில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.

மீண்டும் விட்ட இடத்தில் கணக்கை ஆரம்பித்திருந்தேன்.

முன்னாள்- முன்னாள் அமைச்சர்கள் - 9 பேர், பொள்ளாச்சி ஜெயராமனில் ஆரம்பித்து....

மொத்த முன்னாள் அமைச்சர்கள் - 18 பேர்.

தற்போதைய அமைச்சர்கள் - 33 பேர். 

சபாநாயகர், துணை, கொரடா - 3 பேர்.

எனவே மிச்சம்  'வருங்கால அமைச்சர்கள்'  91 பேர் மிடுக்காக அமர்ந்திருந்தனர். 

அம்மா மனசு வைங்கம்ம்மா......
மியுசிகல் சேர்... 
மியூசிக் ஸ்டார்ட்ஸ்.....
ரபப்ப ப, ரபப்ப ப, ரபப்பரபப்ப......

புதன், 13 மார்ச், 2013

சாவோஸ் - நீ சாக்காடு செல்லாய்...

சேகுவேரா 
கடாபி
அடுத்தொருவன் 
இல்லையென
மூர்ச்சித்த
புரட்சியை
உயிர்பித்தாய்...

வல்லான் 
வகுத்ததேயென
சுருண்ட
நேரத்தில்
இல்லான்
உடைப்பானென
நிறுவினாய்...

பொதுவுடைமை
மண்மூடிப்
போனதாய்
தனியுடமை
துள்ளாடிய
போதினிலே
மீட்டெடுத்தாய்...

சாவோஸ் - நீ
சாக்காடு
செல்லாய்
மக்கள்
மனம்
வாழ்வாய்.....

ஏகாதிபத்தியத்தின்
எதிரியாய்...

ஞாயிறு, 3 மார்ச், 2013

ஒரு ரயில்பயணம் - இரு அமைச்சர்கள்


 
கடந்த வருடத்தில் ஒரு நாள், சட்டமன்ற கூட்டத் தொடர் அன்று ஒரு வெள்ளிக் கிழமை. மதியம் பல்லவன் விரைவு தொடர் வண்டியை பிடித்தேன்.
 
வழக்கம் போல் ரயில்பயணத்திற்காக பேண்ட், டி-சர்ட்ல் இருந்தேன். மூன்று இருக்கை வரிசையில் நடு இருக்கை எனக்கு. இரண்டு புறமும் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள்.

ஒருவர் மூத்த வயதான எம்.எல்., இன்னொருவர் புதிய எம்.எல்.. இருவரும் ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூர் அரசியல் பேச ஆரம்பித்தார்கள். நான் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

இடையில் உட்கார்ந்திருந்த நான் இடைஞ்சலாக இருந்தேன். மூத்தவர் என்னை " தம்பி, எந்த ஊர் போறிங்க ?" என்றார். " அரியலூர் அய்யா" என்றேன். " பிஸினஸ் பண்றீங்களா ?" கேட்டார். " இல்லிங்க " என்றார்.

புதியவர் கேட்டார் " எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ". " ஆமாண்ணே, இன்னைக்கு சபையிலேருந்து தூக்கி வெளியில போட்டாங்களே, அது நான் தான்" என்றேன். அவ்வளவு தான் புதியவர் ஒரு நாளிதழை விரித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தார்.

மூத்தவர் " எந்த தொகுதி, யார் " என்ற விபரங்களை கேட்டுக் கொண்டு வந்தார். புதியவர் என் பக்கம் திரும்பவே இல்லை.

அவர் சங்கடம் உணர்ந்து, அவர்கள் இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து, நான் ஓர இருக்கைக்கு மாறினேன்.

மூத்த எம்.எல். : முன்னாள் அமைச்சர் குளித்தலை பாப்பா.சுந்தரம், புதியவர் : இன்றைய அமைச்சர் பூனாட்சி.

# ஜாக்கிரதையா தான் இருந்திருக்காரு....

                                           **************************************

வழக்கம்மா அதிமுக நண்பர்களை கிண்டல் செய்து பதிவு போடறேன்னு சில நண்பர்களுக்கு வருத்தமா இருக்கு. நான் புகழ்ந்து போட்டா அவங்க பதவி போயிடுமேன்னு தான் பார்க்கறேன்

இருந்தாலும் இதை பதிவு செய்திடுறேன்.

அதுவும் ஒரு ரயில் பயணம் தான். அந்த அதிமுக அமைச்சர் வந்து உட்கார்ந்தார். மூன்று தோழர்கள் பைகளை கொண்டு வந்து வைத்துவிட்டு விடை பெற்றனர்.

அவர் சட்டசபையில் திமுகவை கடுமையாக தாக்கி பேசக்கூடியவர். நான் எப்போதும் எதிர்குரல் கொடுப்பவன் அவருக்கு. பேண்ட், டிசர்ட்ல் அடையாளம் தெரியப் போகிறதா என நினைத்து -பேடை துழாவிக் கொண்டிருந்தேன்.

" என்ன சார் தீவிர ஆராய்ச்சியா" என அவரிடமிருந்து குரல். நிமிர்ந்து பார்த்தேன், என்னை பார்த்து தான் கேட்டார். வணக்கம் சொன்னேன்.

" உங்க கட்சிக்காரங்க திமுகவினரிடம் பேச தயங்குவார்களாயிற்றே என்று தான் தவிர்த்தேன்" என்றேன். " அட இதில என்னங்க இருக்கு, என் கட்சிக்காக நான் பேசறேன், உங்க கட்சிக்கு நீங்க பேசறீங்க " என்றார்.

பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு அதிமுக ..உமவும் முன்னாள் ..உவும் அங்கு வந்தனர். அவர்கள் என்னை கவனிக்கவில்லை. என்னை காட்டி கேட்டார் "தெரியுதா ?"

.. என்னை பார்த்து, " இப்ப தான் உங்களைப் பற்றி சொல்லிகிட்டு இருந்தேன், சபையில ரொம்ப திமிறா நடந்துக்கறீங்கன்னு, ஆனாலும் எதிர்கட்சின்னா அப்படி தான் இருக்கனும் தில்லா " என்றார்.

அமைச்சரை பார்த்து சொன்னார்," இப்படி ஆளுங்க இருந்தா தான் சபை கலகலப்பா இருக்கு அண்ணே ".

முன்னாள் .. " ஆளுங்கட்சியா இருக்கும் போது ஆள் இருக்கறதே தெரியாது ? " என்று கேட்டார்.

" எதிர்கட்சியாக இருக்கும் போது தானே வேகமா இருக்கணும் " என்றேன். அமைச்சர் தட்டிக் கொடுத்தார்.

அரிதாக இருந்தாலும் இப்படியும் இருக்கிறார்கள் தான். என்ன, நான் பாராட்டினா பதவி போயிடும் !
 
( ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் என்னோடு நின்ற காரணத்தினால் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு பதவி போச்சு. நான் தங்கியிருந்த அரசு விடுதியில் தங்கியிருந்ததால் மாவட்ட செயலாளருடைய பொறுப்பு பறிக்கப்பட்டது. )