பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

நாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள்....

மருதையாற்றில் புதிய நீர் தேக்கம் மக்கள் கருத்து -3...

" நாங்க இருக்கோம், ஜெயலலிதாவிற்கு பயப்படாதீர்கள். துணிச்சலா எங்களுக்காக சட்டமன்றத்தில் பேசுங்க"

இது ஆதனூர் குரல். வெள்ளந்தியாய், இயல்பாய் சொன்னார்கள். ஆனால் உறுதியாய் சொன்னார்கள். ஒரிருவர் மாத்திரம் சொல்லவில்லை, பேசிய அனைவருமே வலியுறுத்தினர்.

யாரும் நிலச்சுவான்தார் இல்லை. எல்லோருக்கும் இருப்பதே ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் தான். அதனால் தான் இந்த கோபம்.

ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் என மக்கள் பிரதிநிதிகளும் மக்களோடு இருக்கின்றனர். மொத்தத்தில் திட்டத்திற்கு எதிர்ப்பே வலுவாக உள்ளது.

                                              


சட்டை போடாத உடல், கலைந்த காய்ந்த தலை, போட்டிருக்கும் உடையும் பழைய உடை, காலை முதலே காட்டில் உழைத்த களைப்போடே வந்து தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டி கொள்வது பாவம். இவர்கள் வாழ்க்கையோடு விளையாடுவது கொடூரம் என்ற எண்ணமே எங்களுக்கு ஏற்பட்டது. அரசுக்கும் ஏற்பட வேண்டும்...

மக்கள் கருத்தை அரசு நேரிடையாக அறிந்து செயலாற்ற வேண்டும், அது வரை மட்டுமல்ல.... கடைசி வரை உடன் இருப்போம்.

# ஆதனூர் மக்கள் அளித்த துணிச்சலோடு...