பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 ஏப்ரல், 2013

அமைச்சர் வளர்மதியின் கவித பேச்சும், மோகனின் கண்ணியப் பேச்சும்...


மனதார பாராட்ட விரும்புகிறேன், அதிமுக அமைச்சர் மோகன் அவர்களை. ஊரகத் தொழில் துறை அமைச்சரான இவர், தனது துறை மானியக் கோரிக்கை மீது இன்று பதிலளித்து பேசும் போது, மிக கண்ணியமாக தனது துறை குறித்து மட்டும் பேசினார்.

மூன்று முறை மைனாரிட்டி திமுக அரசு என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டார்.

ஆனால் சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, துறையை அம்போ என்று விட்டுவிட்டு, டெசோவை பிடித்துத் தொங்கினார். சண்டை வளர்த்தார். நாங்கள் வெளியேற உழைத்தார்.

# அவரவர் குணம்....
                      ***************************
சபையில் அமைச்சர் வளர்மதியின் கவித பேச்சு...

அம்மா
சட்டசபையில் நீங்கள் பவுர்ணமி
அதனால் தான் அமாவசை வருவதில்லை
வந்த அமாவசையும் வராண்டாவோடு போய்விட்டது...

எந்த சிற்பியும் வடிக்காத அம்மன்
நீங்கள் சுயம்பு தெய்வம்

இன்று காவிரியாறு
நாளை முல்லைபெரியாறு
இதுவே உங்கள் வரலாறு...

அம்மா
சட்டமன்ற தீர்மானமே
உலக நாடுகளின் பார்வையை ஈர்த்தது
ஹிலாரி உங்களை சந்தித்ததே
அமெரிக்காவின் மாற்றம்...( இந்த இடத்தில் எனக்கு காது வலி ஏற்பட்டதால் பேசியது புரியவில்லை )

முக்கி
முனகி
திக்கி
திணறி – இந்த வார்த்தைகளை போட்டு ஒரு "பிட்டு" கவிதை படித்தார் தலைவர் கலைஞரை பற்றி, அதை போட்டால் மாநகராட்சி லாரி வரணும் உங்க கமெண்ட அள்ள ....

வாழ்க அக்கா வளர் !

                       ************************************************

ஜெயலலிதா இல்லாத சபை இன்று ஆரோக்கிய விவாதகளமாகியது....

சமூக நலத்துறை மீதான விவாதம்...

மாற்று திறனாளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் அய்ந்து லட்சம் ஒதுக்கப்படும். ஆனால் அது எந்த வகையில் செலவு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை என்பது உறுப்பினர்களுடைய புகார்.

அதை பேச விடாமல் சிறிது நேரம் அமைச்சர்கள் போராடி பார்த்தார்கள். உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமி அந்த நிதி முறையாக செலவு செய்யப்படுகிறது என பூசி மெழுகினார்.

மார்க்சிஸ்ட், இ.கம்யூ போன்ற கட்சிகளுக்கு இதன் மீது கருத்து சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டு, டாக்டர்.கிருஷ்ணசாமி அவர்களுக்கு நீண்ட நேரம் வாய்ப்பு மறுக்கப்பட கோபத்தின் எல்லைக்கே போய்விட்டார். தவிர்க்க முடியாமல் வாய்ப்பு வழங்கினார்கள்.

Dr.
கிருஷ்ணசாமி : இரண்டு ஆண்டுகளுக்கு 10 லட்சத்தோடு, கூடுதலாக 10 லட்சம் ஒதுக்கி, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனத்திற்காக, முகாம் நடத்தி பயனாளிகளை தேர்வு செய்து பட்டியலையும் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தேன். இரு வருடங்களாக வழங்கவில்லை.

ரெங்கராஜன் (காங்) : யார் யாருக்கு வழங்கப்பட்டது எனவும் தெரியவில்லை, வழங்கப்பட்டதா எனவும் தெரியவில்லை. முறையான தகவல் இல்லை.

தங்கம் தென்னரசு : வருடத்தின் நடுவில் தொகுதி மேம்பாட்டு நிதியில் அங்கன்வாடிக்கு கேஸ் அடுப்பு வழங்க ஆணை வழங்குகிறீகள். ஏற்கனவே நடைபெறுகிற வேலைகளை நிறுத்தமுடியுமா ? செய்வதை வருட ஆரம்பத்தில் செய்யுங்கள்.

அஸ்லம் பாஷா (ம.ம.க) : இரண்டு ஆண்டுகளாக நிதி செலவு செய்யப்படவில்லை. நேற்று கூட மாவட்ட மறுவாழ்வு அலுவலரை சந்தித்தேன், மேலிருந்து உத்தரவு வரவில்லை என்கிறார்கள். நீங்கள் உத்தரவிட்டு விட்டதாக சொல்கிறீர்கள். இடையில் இருக்கும் தடையை கண்டுபிடித்து நீக்குங்கள்.

இந்த விவாதம் வரை இடைமறித்து மறுத்து வந்த அமைச்சர் முனுசாமி இறங்கி வந்தார்.

முனுசாமி : உறுப்பினர்களுடைய வருத்தம் புரிகிறது. வருத்தம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி மாற்று திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்ற விபரம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

இது போன்ற விவாதம் நடந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக