பிரபலமான இடுகைகள்

திங்கள், 29 ஏப்ரல், 2013

அனைத்தும் வசப்படும் - தளபதி மு.க.ஸ்டாலினுக்கு....

மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எனது அப்பா எஸ்.சிவசுப்ரமணியன் ( கழக சட்ட திருத்தக் குழு உறுப்பினர் ) அவர்களை இன்று காலை, சென்னையில் சந்தித்து நலம் விசாரித்தார். 

வரவேற்று வேட்டி அணிவித்த அப்பா, "உங்கள் பிறந்த நாளில் அணிவிக்க வாங்கிய வேட்டி, உடல்நலக் குறைவால் வர இயலாமல் அப்படியே இருந்தது" என சொல்ல, " அதனால் தான் நானே வந்து வாங்கிக் கொண்டேன்" என தளபதி அவர்கள் கூற அப்பாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி.

தளபதி அவர்கள் தனக்கு வழங்கிய அவருடைய மணிவிழா மலரில், அப்பா கையொப்பம் கேட்க, உணர்வு கண்டு மகிழ்வுடன் கையொப்பமிட்டு அளித்தார் தளபதி அவர்கள்.

உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். உடன் இருந்த உறவினர்கள் தளபதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பப்பட, அன்புடன் இசைந்து அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

          தளபதி அவர்கள் எளிமையாக பழகியதையும், பேசியதையும் கண்டு, அங்கு வந்திருந்த அப்பாவின் நண்பர் ஓய்வு பெற்ற முதன்மை கல்வி அலுவலர் திரு.குப்புசாமி அவர்கள், " நான் நினைத்ததை விட எளிமையாக இருக்கிறார். மாநில அளவில் ஒரு தலைவர், எதிர்காலத்தில் முதல்வராக இருப்பவர் இவ்வளவு அன்பாக பழகுகிறாரே" என வியந்தார்.

              


அரசியல் சார்பற்ற அவர் மனதிலும் உயர்ந்த இடத்தை பிடித்து விட்டார் தளபதி அவர்கள், அங்கிருந்தோரை எல்லாம் வசப்படுத்தி விட்டார்.


# அனைத்தும் வசப்படும் !