பிரபலமான இடுகைகள்

புதன், 4 செப்டம்பர், 2013

அடிச்சும் சாப்பிட சொல்வாங்க...

தஞ்சை புறவழிச்சாலையில் இருந்து புதுக்கோட்டைக்கு திரும்பும் போதே நண்பகல் 2.00. காலையில் பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு திருமணங்களில் அண்ணன் ஆ.ராசா அவர்களோடு கலந்து கொண்டதால், காலை பாசறை வகுப்புகளை கட் அடிக்க மாவட்ட செயலாளர் அண்ணன் அரசு அவர்களிடம் ஏற்கனவே அனுமதி பெற்றிருந்தேன். உணவுக்கு நிறுத்தினால் தாமதமாகிவிடும் என்று யோசித்து, புதுக்கோட்டையில் பார்த்துக் கொள்ளலாம் என விரைந்தோம். பயிற்சி பாசறையில் கலந்து கொண்ட எங்கள் மாவட்டத்து நண்பர்கள் மதிய உணவு முடித்து வகுப்புக்கு திரும்பி விட்டோம் என தெரிவித்தனர். "பிரியாணி சாப்பிட்டோம், புதுக்கோட்டை மாவட்டமே இருந்து உபசரித்தார்" என்றனர். அண்ணன் பெரியண்ணன்.அரசு எப்போதுமே அப்படிதான். அன்பில் திக்குமுக்காட செய்வார். ஹோட்டலில் சாப்பிட்டால் கூட, அருகில் இருப்பவரை உபசரிக்கும் பழக்கம் உள்ளவர்.

பெண்ணாகரம் இடைத்தேர்தல் போது, நாங்கள் அருகில் இருந்த ஊர்களில் தேர்தல் பணியாற்றினோம். ஒரு நாள் எங்களை விருந்துக்கு அழைத்திருந்தார். ஊர்வன, பறப்பன அத்தனை ஐட்டங்களாலும் நிரம்பியிருந்தது இலை. அவரே நின்று பரிமாறுவதை கண்காணித்து கொண்டிருந்தார். "சிவசங்கருக்கு இன்னொரு மீன் வை, இது காலையில் எங்கள் மாவட்டத்திலிருந்தே ஸ்பெஷலா கொண்டு வந்தது. ருசியா இருக்கும் சாப்பிடுங்க".

300 கி.மீக்கு அப்பாலே அப்படி கவனிச்சுக்கிடவர், சொந்த ஊர்ல எப்படின்னு சொல்லவா வேண்டும். அவரது அன்பில் அனைவருமே அசந்து போயிருந்தனர். போறாததுக்கு அவரோடவே ரெண்டு பேரு அப்துல்லாவும், தமிழ்ராஜாவும். அவர் கண்ணசைவில் செயல்படுபவர்கள். அடிச்சும் சாப்பிட சொல்வாங்க.

அப்துல்லா அண்ணே, "என்னண்ணே" அப்படிங்கும் போதே மயக்கிடுவார். சிரிப்பு ஆன் மோட்லேயே இருக்கும். அவர் ஸ்பெஷாலிட்டியே யார பாத்தாலும் "அண்ணே"ன்னு கூப்பிட்டு, அவங்களுக்கு இவரப் பார்த்தாலே "அப்துல்லாண்ணே" அப்படின்னு தான் ஞாபகம் வரும். 
அப்புறம் இன்னொரு விஷயம், எந்த ஊரா இருந்தாலும் நம்ம ஊர்னே சொல்லுவாரு. அந்த அளவுக்கு உலகம் சுற்றும் வாலிபன்.


தமிழ்ராஜா, இவரு தான் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர்களில் இளையவரா இருப்பாரு. புன்னகை மன்னன். எத கேட்டாலும் சிரிச்சிக்கிட்டு தான் பதில் சொல்வார். கோபப்பட்டாலும் சிரிச்சிக்கிட்டு தான் கோபப்படுவாரான்னு வீட்ல கேக்கனும். கழகப் பணிகளில் கில்லி. 

அரசு அண்ணனும், அப்துல்லாவும், தமிழும் பேண்ட், ஷர்டில் போனால் கல்லூரி பி.ஜி ஸ்டூடண்ட்ஸ் மாதிரி தான் இருப்பாங்க. இப்படி இளைஞர்களால் நிரம்பிய மாவட்டக் கழகம். அதனால் தான் இளைய சிந்தனையோடு இணைய பயிற்சிப் பாசறையை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

காலை நிகழ்வே களை கட்டியதை சொன்னார்கள், அலைபேசியில் அழைத்த தோழர்கள். தமிழ்ராஜா வரவேற்புரையாற்ற, அரசு அண்ணன் தலைமையுரையாற்ற நிகழ்வு துவங்கியிருக்கிறது. இணையத்தில் கழக வரலாறு என்ற தலைப்பில் அப்துல்லா பேசியிருக்கிறார், அருமையாக. பொருத்தமானவர், பிளாக்கில் கழகத்திற்காக வாதிட்ட முதல் நான்கைந்து பேரில் ஒருவர்.

"நவீன ஊடகங்களில் திராவிட இயக்கம்" என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் அண்ணன் கோவி.லெனின் பேச்சு அனைவரையும் வசப்படுத்திவிட்டது. திராவிட உணர்வு கொண்ட பத்திரிக்கையாளர் என்பதை தாண்டி, இன்றும் திராவிடம் குறித்து எழுதுவதற்கு இருக்கின்ற எழுத்தாளர். “இணையமும் கழகமும்” என்ற தலைப்பில் கொக்கரக்கோ சௌமியன் பேசியிருக்கிறார். சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர் ஆயிற்றே, பேச்சும் அப்படியே இருந்திருக்கிறது.

கந்தர்வக்கோட்டையை தாண்டும் போதே, மாலை நிகழ்வு துவங்கியது என செய்தி....