பிரபலமான இடுகைகள்

புதன், 6 நவம்பர், 2013

சட்டமன்ற விமர்சனம் (28,29-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை

28.10.2013 திங்கட்கிழமைசபை ஆரம்பிக்கும் போதே அமர்களமாய் ஆரம்பித்தது. முதல் ஓவர் முழுதும் சிக்ஸராய் அடிக்கும் பேட்ஸ்மேன் கணக்காய் சுழற்றினார் ஆண்டிபட்டி ச.ம.உ தங்க.தமிழ்செல்வன் .

அரியதாய்பெரியதாய்வலியதாய் என்று ராகம் போட ஆரம்பித்தார்.


இப்படியாக சபை போய் கொண்டிருந்த போது தான் எழுந்தார் செ.கு.தமிழரசன். எந்த விதிமுறையும் இல்லை. அவருக்கு பேச அனுமதி கொடுத்தார் சபாநாயகர். ஏதோ வம்பு என்று மட்டும் உணர்ந்தோம்,  செ.கு.த ஒரு குறீயீடு. ஆளுங்கட்சி நேராக பேச முடியாததை பேசக் கூடியவர். எதையும் பேசுவார்எப்படியும் பேசுவார்அது தனிக் கலை.

"சென்னையில் சில நாட்களுக்கு முன்பு அம்மா சிறிய பேருந்துகளை துவக்கி வைத்தார். அந்த பஸ்ஸின் படங்களை சபையில் தூக்கிக் காட்டி அரசு பஸ்ஸா அதிமுக பஸ்ஸா என்று திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்" என்று துவங்கினார். ஜெ.அன்பழகன் எழுந்து "சபையில் எங்களை பேச விடவேயில்லை. அது குறித்து எப்படி இவர் பேசலாம் ?" என்று கேட்டார். சபாநாயகர்,"தமிழரசனை நான் அனுமதித்திருக்கிறேன். நீங்க உக்காருங்க" என்று உட்கார வைத்தார்.

"பஸ்ஸில் இரட்டை இலை இருப்பதாக சொல்கிறார்கள்அது நான்கு இலை. சின்னம் என்று பார்த்தால் பஸ்ஸே சின்னம் தான். கை சின்னம் இருக்கிறது. மாம்பழம் இருக்கிறது. இலைக்கு தமிழ்நாட்டில் பாரம்பரியம் உண்டு. பச்சிலை உயிர் காக்கும் மருந்து." என்ற போது பின் வரிசை திமுக உறுப்பினர்களிடமிருந்து தொடர்ந்து குரல் வந்து கொண்டு இருந்தது. "தமிழ்நாட்டில் இலைக்கு அமோக வரவேற்பு உள்ளது. டெல்லியிலும் பெரும் வரவேற்பு உள்ளது" என்று தொடர்ந்து பேசிக் கொண்டே போனார். நாங்கள் அனைவரும் எழுந்தோம். "விளக்கமளிக்க எங்கள் கட்சிக்கு வாய்ப்பு தர வேண்டும்" என்றோம். அப்போது முன்னாள் அமைச்சர் வேலு குரல் கொடுத்தார்.

உடனே துள்ளி எழுந்த அமைச்சர் கே.பி.முனுசாமி,"இரட்டை இலை பற்றி பேச ஏ.வ.வேலுக்கு தகுதியில்லை. அவர் எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு வந்தார். வேண்டுமானால் மு.க.ஸ்டாலின் பேசலாம்அவருக்கு தகுதி உள்ளது." என்று சொல்லஎங்கள் தரப்பில் கோபம் அதிகமானது. ‘தேவையில்லாத வார்த்தைகளை அமைச்சர் பேசுகிறார் என குரல் கொடுத்தோம். இந்த நேரத்தில் செ.கு.தமிழரசன் தொடர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். 

மறுபடியும் முனுசாமி பேச எழஅனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவிக்கமுனுசாமி ஆவேசமாக அருள் வந்தவர் போல் சிலுப்பினார். " வேலுஅரசியல் அநாதைகேவலம்பஸ் கண்டக்டர்அ.தி.மு.கவியர்வை" என்று குரல் உயர்த்தி ஏதேதோ பேசிக் கொண்டே போனார். இவை அத்தனையையும் அமைதியின் உருவமாக ஜெ ரசித்துக் கொண்டிருந்தார். மற்ற சப்ஜெக்ட்டாக இருந்தால் முந்தி வந்து பதில் சொல்லக் கூடியவர்"ஸ்மால் பஸ்" மேட்டரில் ஏனோ ரிவர்ஸ் கியர் தான். 


இருபத்தைந்து நிமிடத்திற்கும் மேலாக இதே வாக்குவாதமான நிலவரமே நீடித்துக் கொண்டிருந்தது. சபாநாயகர் நிலை மாறவேயில்லை. ஐந்து நிமிடத்திற்கு மேலாக தளபதி அவர்கள் நின்று கொண்டு வாதாடிக் கொண்டிருந்தார். அவர் இயல்பை தாண்டி குரல் உயர்த்தி பேசினார். ஒரு கட்டத்தில் லால்குடி சௌந்தரபாண்டியன்கூடலூர் திராவிடமணிநான் மூவரும் சபாநாயகர் இருக்கைக்கு முன் சென்று நியாயம் கேட்டோம். அவர் எங்களை எச்சரிப்பதில் தான் குறியாக இருந்தார்எங்கள் கோரிக்கைகளுக்கு காது கொடுக்க தயாராக இல்லை. மூவரும் தரையில் அமர்ந்து கோஷம் போட்டோம். மற்றவர்களும் எங்களை வந்து சூழ்ந்து நின்று கோஷம் போட்டனர். இதை தொடர்ந்து தி,மு.க உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டார். எங்களை குண்டுகட்டாக தூக்கி கொண்டு வந்து வெளியில் விட்டனர். 

பேட்டியளித்த தளபதி அழகாக சொன்னார்," செ.கு.தமிழரசனுக்கு நன்றி. நாங்கள் பதிவு செய்ய நினைத்ததை எளிதாக அவையில் பதிவு செய்து விட்டார். சிற்றுந்துகளில் அதிமுக சின்னம் இருக்கிறது என்று நாங்கள் பேசியதை சபாநாயகர் நேற்று அனுமதிக்கவிலலை. இன்று அதை அவர் பேசி விட்டார்". "முனுசாமிஏ.வ.வேலு அவர்களை கேவலம் கண்டக்டராக இருந்தவர் என்று குறிப்பிட்டார். கண்டக்டர் என்றால் கேவலமா சூப்பர் ஸ்டார் ரஜினியே கண்டக்டராக இருந்து வந்தவர் தானேஎன்று பன்ச் வைத்தார்.

முனுசாமி புலி வாலை பிடித்ததை போல்கண்டக்டர் விசிலை பிடித்திருக்கிறார்......

29.10.2013 செவ்வாய் கிழமை. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

கே.பி.முனுசாமி," நான் நேற்றைய தினம் பேசியதை பேட்டியில் மாற்றி கூறி என்னுடைய உரிமையை மீறி இருக்கிறார்கள் மு.க.ஸ்டாலினும்துரைமுருகனும். உரிமைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்" எனக் கோரஅதனை அனுமதித்தார் சபாநாயகர். அதனை ஆட்சேபித்து தி.மு.க உறுப்பினர்கள் எழுந்தோம். ஆனால் தளபதி அமைதிப்படுத்திஅமர சொல்லி விட்டார்.

விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தபோது திடீரென அ.தி.மு.க சார்பாக விராலிமலை ச.ம.உ விஜயபாஸ்கர் எழும் போதே தெரிந்து விட்டதுஇன்றும் திட்டத்தோடு தான் வந்திருக்கிறார்கள். கடந்தக் கூட்டத் தொடரிலும் இவரை கொண்டு எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சிக்க வைத்தனர் ஆளுங்கட்சியினர்.

"வடக்கு வாகை சூட்ட காத்திருக்கும் வரலாற்றுத் தாயேதமிழகத்தின் வளம் காக்கும்நலம் காக்கும் பேரோளியேஉயிர்பிக்க வந்த பரம்பொருளேஎம்பாட்டுடைத் தலைவியே" என ஜெ-வுக்கு நிமிடம் அர்ச்சனை மேற்கொண்டவர் சர்ச்சைக்கு வந்தார். "முன்னர் பேசிய தே.மு.தி.க உறுப்பினர் தவறாக பேசினார். காரணம் அவர் வந்த வழி அப்படி. துக்க வீட்டிற்கு சென்று "ஆழ்ந்த இரங்கல்" என்று சொல்ல வேண்டிய இடத்தில் "ஆழ்ந்த நன்றிகள்" என்று சொன்னவர் தானே" என்றவுடன் தே.மு.தி.க உறுப்பினர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பினர். முதலமைச்சர் ஜெயலலிதா குலுங்கி,குலுங்கி சிரித்து ரசித்துக் கொண்டிருந்தார். அந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் சபாநாயகர் எழுந்து நின்று அவர்களை அமர சொல்லி சொன்னார். ஐந்து நிமிடம் போராடிப் பார்த்தவர்கள் உட்கார்ந்தனர். 

அடுத்து தி.மு.க பக்கம் வந்தார். "புத்தூர் ஆப்பரேஷன் செய்த காவலர்களுக்கு பரிசுகளை வாரி வழங்கினார் அம்மா. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் அப்படி இல்லை. ஒரு தள்ளுவண்டிக்கு இதில்...." என்றவுடன் தி.மு.க உறுப்பினர்கள் வெகுண்டு எழுந்தோம். தகாத வார்த்தைகள் பேச அனுமதிக்க முடியாது என்றோம். கிருஷ்ணகிரி செங்குட்டுவன்,"உங்களுக்கும் இது போல தள்ளுவண்டி காலம் வராமல் போய்விடுமா ?" என்று கோபமாக குரல் கொடுத்தார். தி.மு.க உறுப்பினர்கள் ஆட்சேபித்துக் கொண்டிருக்கும் போதேஈழப்பிரச்சினையை இழுத்து இன்னும் கடுமையான வார்த்தைகளை சொன்னார். 

இந்த நேரத்தில் தளபதி ஸ்டாலின்துரைமுருகன் ஆகியோரும் எழுந்தனர். அவர் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்பதை சொல்லுங்கள் என்று கேட்டனர். சபாநாயகர் எழுந்து நின்று கொண்டார். மறுபடியும் "அவர் யாரையும் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லையேயாரையும் சொல்லவில்லையே" என்று திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தார்.

பதினைந்து நிமிடத்திற்கும் மேலாக இந்த நிலையே நீடித்தது. சபாநாயகர் நின்று கொண்டே,"உட்காருங்கஉட்காருங்க" என்று சொல்லிய படியே இருந்தாரே ஒழியபிரச்சினையை தீர்க்க முனையவில்லை. விஜயபாஸ்கரின் தரக்குறைவான வார்த்தைகளை நீக்கி இருக்க வேண்டும்குறைந்தப் பட்சம் தி.மு.க சட்டமன்ற தலைவர் என்ற முறையில் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு மறுக்க வாய்ப்பளித்திருக்கலாம் சபாநாயகர். ஆனால் எதிர்கட்சிகள் வாய் திறக்கக் கூடாதுஆளுங்கட்சியினர் எவ்வளவு தரக்குறைவாகவும் பேசலாம் என்பதிலேயே பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில் சபாநாயகரை நோக்கி ஜெ.அன்பழகன் முன்னேறஅனைவரும் முன்புறம் வந்தோம். சபாநாயகரிடம் வாதிட்டு பார்த்தோம். 

எங்கள் கருத்தை கேட்க தயாராக இல்லாத அவர் சபைக் காவலர்களை அழைத்தார். முன்னாள் அமைச்சர் மைதீன்கானும் நானும் தரையில் அமர்ந்து கோஷமிட்டோம். எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். எங்களை தூக்கி அவையிலிருந்து வெளியேற்றினர்.  அனைத்து தி.மு.க உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்டோம். " நியாயம் வழங்குநியாயம் வழங்குஜனநாயகத்தை காப்பாற்று" என லாபியில் கோஷம் எழுப்பியவாறு வெளியேறினோம். "ஏற்கனவே இவர்கள் முறை வெளியேற்றப்பட்டு விட்டனர். தற்போது 3வது முறையாக வெளியேற்றப்பட்டுள்ளதால் இந்த தொடர் முடிய கூட்டத்தில் பங்கேற்க முடியாது" என்று சபாநாயகர் அறிவித்திருக்கிறார். 


எங்களுக்கு பின்னாலேயே தே.மு.தி.க-வினர் கோஷம் எழுப்பிக் கொண்டு வந்தனர். திமுக உறுப்பினர்களை வெளியேற்றிய பிறகும்விஜயபாஸ்கர் தனது தாக்குதலை நிறுத்தவில்லையாம். விஜயகாந்த் குறித்தும் பர்சனலாக தாக்கி பேச தே.மு.தி.கவினர் சபாநாயகரை முற்றுகையிட்டு நியாயம் கேட்டிருக்கின்றனர். அவர்களையும் காவலர்களை விட்டு வெளியேற்றி இருக்கிறார் சபாநாயகர். 

ஒலிப்பெருக்கியில் சபை நடவடிக்கைகள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. விஜயபாஸ்கர் தொடர்ந்து கொண்டிருந்தார். " டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமிக்கு அம்மா கொடுத்த பேட்டியில் சொன்னார்கள்,"எனக்கு தேசிய அளவில் இலக்கு கிடையாதுஆனால் இந்தியாவிற்கு இருக்கிறது. அதை நிறைவேற்றும் கடமை இருக்கிறது." 


ஜெயலலிதாவுக்கு கடமை இருக்கிறதுவிஜயபாஸ்கருக்கு இலக்கு இருக்கிறது. ஆனால் சட்டப்பேரவையில் தான் ஜனநாயகமும் இல்லைநாகரிகமும் இல்லை.