பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 5 நவம்பர், 2013

ஃபேஸ்புக் பதிவு பாப்புலர் ஆச்சு ....

                                 

ஏற்கனவே சக எம்.எல்.ஏக்கள் எல்லோரும் என்னை கிண்டல் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. "என்னவோ ஃபேஸ்புக்காமே, அதுல எழுதியிருக்கியாமே, இளைஞரணி பையன் சொன்னாப்ல" இது ஒரு எம்.எல்.ஏ. "ஒரு நிருபர் சொன்னாரு, கலக்குறீங்களாம்" இன்னொரு எம்.எல்.ஏ.

தலைவர் கலைஞர் ஃபேஸ்புக்ல இணைஞ்ச பிறகு கிண்டல் கொஞ்சம் குறைஞ்சுது. அப்புறம் பார்வை மாறுச்சு. இணைய நிகழ்ச்சிகள் குறித்து முரசொலியில் வந்த பிறகு நிலைமை வேற.

இந்த கூட்டத் தொடர்ல ஃபேஸ்புக் இன்னும் பாப்புலர். அண்ணன் தங்கம். தென்னரசு எழுதிய பதிவுகள தினமலர்ல எடுத்துப் போட்டுட்டாங்க. அதனால மிச்சம் இருந்தவங்களும் அத பத்தி பேச ஆரம்பிச்சிட்டாங்க.

"ஸ்மால் பஸ்" பிரச்சினை எழுப்பிய போது எங்களை வெளியேற்றினார்கள். அப்போது வெளியில் வந்து பேட்டிக் கொடுத்தார் அண்ணன் துரைமுருகன்.

"ஸ்மால் பஸ்ஸில் ரெட்டைஇலைய போட்டிருக்காங்க. ஏற்கனவே அந்த அம்மா படத்த எல்லாத்துலயும் போட்டுகிட்டு இருக்காங்க. அம்மா உணவகம், பசுமை வீடு, தண்ணி பாட்டில்லலாம் ஜெயலலிதா படத்த போட்டிருக்கீங்களே, ஏன் குவாட்டர் பாட்டில்லயும் போட வேண்டியது தானேன்னு, இளைஞர்கள் ஃபேஸ்புக்ல கேக்கறாங்க ?" (வெறும் அக்கவுண்ட் மட்டும் இருக்குன்னு நினைச்சேன். பார்க்கிறார் போல)

அண்ணன் தங்கம் தென்னரசை பார்த்தேன். சிரிப்பாலேயே லைக் போட்டார். நான் உங்ககிட்ட ஷேர் பண்ணிட்டேன்.
# சபாநாயகர் சார் கமெண்ட் பண்ணுங்க....