பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பொதுக் கூட்டத்தில் எனது உரை

அரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது.


 Displaying MURASOLI - 09.08.2014.jpg


வியாழன், 7 ஆகஸ்ட், 2014

“ஏ, பொறம்போக்கு..இன்னா வண்டி ஓட்டுற”...

கிடைத்த இண்டு இடுக்குகளில் பைக்குகள் புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தன. கார்கள் லேசாக அசைந்துக் கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் டிராபிக் கூடுதலாகிக் கொண்டே இருந்தது. இன்ச் இன்சாக வாகனங்கள் நகர்ந்தன.

       

அது அடையாறு பாலம் கடந்து ஆந்திர மகிள சபாவுக்கு சற்று முன்பு. அகலமான பாலம் முடிந்து சாலை சட்டென்று குறுகும் இடம் அது. அதனால் அது வரை எளிதாக வந்த வாகனங்கள் அங்கே ஒருவரை ஒருவர் முந்துவதற்கு நெருக்கியடிப்பர்.

நானும் ரயிலை பிடிக்கும் அவசரத்தில் இருந்தேன். டிரைவரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு நான் ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நெருக்கடியில் அவரால் நுழைந்து வர இயலாது, அதனால்.

ஆந்திர மகிள சபா வாயிலில் நிற்கும் போது சிக்னல் சிகப்பு விழுந்து விட்டது. மொத்த சாலையும் ஸ்தம்பித்தது. ஆனால் இரு சக்கர வாகனங்கள் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தனர்.

எனது ஸ்விப்ட் காருக்கு இருபுறமும் அதேபோல பைக்குகள் நகர்ந்தன. இடது பக்கம் பின்புறமிருந்து ஒரு பெண்மணி ஸ்கூட்டியில் சற்றே ஆடி ஆடி வந்தார். டிராபிக் நகராததால் நின்றார்.

சிக்னல் மாறியது. பைக்குகள் வேகமாக நகர முயன்றார்கள். அந்தப் பெண்மணியும் தடுமாறி நகர முயன்றார். கார்களும் லேசாக நகர நானும் நகர்த்தினேன், பைக்குகள் இடித்து விடாமல் மெல்லமாக.

கார்கள் நகர ஆரம்பிக்க பைக்குகள் ஹார்ன் அடித்தவாறு ஆக்சிலேட்டரை முறுக்கினார்கள். இப்போது ஸ்கூட்டி பெண்மணி காரின் சைட்வியூ மிர்ரரை கடந்தார். ஆனால் லேசாக ஆடியவாறு நகர்ந்தவர் காரின் மட்கார்டில் உரசினார். தடுமாறி காலை ஊன்றினார்.

நான் காரின் இடதுபுற முன்புற கண்ணாடியை இறக்கினேன். நடுத்தர வயதை கடந்த பெண்மணி. சற்றே நாகரிகமாகத் தெரிந்தார். “பொறுமையா போங்கம்மா” என்றேன். அவ்வளவு தான்.

“ஏ, பொறம்போக்கு..இன்னா வண்டி ஓட்டுற” என்று ஆரம்பித்தவர். வார்த்தைகள் எல்லையை கடக்க ஆரம்பித்தன. கூவம் நதியை பம்ப் செய்து காருக்குள் விட்டது போல இருந்தது. “இரும்மா. உங்க வண்டி தான் இடிச்சுது” என்றேன்.

உடனே மீண்டும் கூவ(ம்) ஆரம்பித்தார். சுற்றிலும் பைக்கில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். பி.பி எகிறியது. கண்கள் சிவந்தது. என்னை மீறி வெடித்தேன். “எவன்டி பொறம்போக்கு?”. அடுத்த செகண்ட் ஸ்கூட்டி வேகமாக நகர ஆரம்பித்தது.

நான் இன்னும் திகைப்பிலிருந்து மீளவில்லை. கொஞ்சம் முன்னால் போன ஸ்கூட்டி பெண்மணி திரும்பிப் பார்த்து, வேகம் பிடித்தார். சிக்னலை நெருங்கினார். அங்கிருந்த போலீஸ்காரரிடம் புகார் செய்தால், பதில் சொல்லலாம் என பார்த்தேன்.

ஆனால் நிற்கவில்லை. சந்து பொந்துகளில் நுழைந்து என் கண்ணில் இருந்து மறைவதே நோக்கம் போல சென்றார். அந்த இடத்தில் ஒரு முக்கோணப் பூங்கா இருக்கும். அதை தாண்டியவர் ஒரு சந்தில் நுழைந்து மறைந்தார்.
வெகு நேரம் மனம் சங்கடமாக இருந்தது, தேவை இல்லாமல், ஒரு பெண்மணியிடம் சூடாக வார்த்தையை பயன்படுத்தி விட்டோமோ என. ஆனால் யோசித்தால் சரி போலவும் தோன்றியது, தவறு போலவும் தோன்றியது.

# ஆயுதங்களை எதிரிகளே திணிக்கிறார்கள் நம்மிடம், நம்மை அறியாமலே…

புதன், 6 ஆகஸ்ட், 2014

ஆப் கி பார் டிராமா சர்க்கார்....

அண்ணன் மோடியின் அடுத்த ஜீபூம்பா….
          

ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... 

அங்க கோயிலுக்கு போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா ? செண்டிமெண்டா அடிச்சாரு.

எம்.ஜி.ஆர் நடிச்ச “நாளை நமதே” படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.

அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.

அவன அவங்கக குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டு போனாரு. “பிரியா” படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிகிட்டே போனாரு. அவங்க குடும்பத்த கண்டு பிடிச்சாரு.

அவங்க கூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. “நாளை நமதே இந்த நாளும் நமதே” பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. 





You are here: Home » All India »

Reunion Between Parents, Son to be Highlight of PM Modi's Nepal Visit








ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல…. ஏன் ?
அங்க தான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23-லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல படமா போட்டுட்டான். இது அண்ணனுக்கு தெரியாமலே இருந்துடுச்சி. லிங்க் இதோ :
https://www.facebook.com/photo.php?fbid=358925130853407&set=a.108835615862361.17959.100002077698317&type=1&relevant_count=1

அதுக்கு முன்னாடி 17-ந் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ் :
Hey Fri Gm 
Bye bye India.
 19-ந் தேதி போட்ட ஸ்டேடஸ் :

Hey Fri 
Today is I m v happy 
Bcos I m my home (Nepal)

23-ந் தேதி படமும் போட்டாச்சி :


     Photo  

இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு “ட்வீட்டு”ம் போட்டுட்டாரு.





          

அப்ப நம்ம வேல... ம், பாடுங்க….

# நாளை நமதே, இந்த நாளும் நமதே. 

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

நலிவு நீங்கி வாழ்க கவிப்பேரரசே !

நோய் வந்தால் முடங்கிப் போவோம் அல்லது புலம்பி தீர்ப்போம். இங்கொருவர் கொண்டாடித் தீர்க்கிறார். நோய் தன்னை வாட்டி, மருத்துவமனையில் தள்ளி வதக்கியதை “கொண்டாடிவிட்டுப் போகிறது நோய்” என்று இலக்கியப்படுத்திவிட்டார்.

           

வேறு யார், கவிப்பேரரசு வைரமுத்து தான். நோயை கொண்டாடி மூன்று பக்கத்திற்கு ஆனந்தவிகடனில் கட்டுரை எழுத அவரால் தான் முடியும். “இடுப்பில் சூல் கொண்டது வலி” எனும் போதே கட்டுரையை தொடர்ந்து படிக்க வைக்கிறார்.

இயற்கையாகவே அறிவியலை சற்று ஆழ்ந்து உள் வாங்கி தன் கவிதைகளில் கையாள்பவர் கவிப்பேரரசு. அதிலும் தன்னையே பீடித்த நோய் எனும் போது, தன் அனுபவத்தை அப்படியே பதிவு செய்திருக்கிறார்.

“வலி சிரித்தது; சிரிப்பு வலித்தது” படிக்கும் போதே நமக்கு வலிக்கிறது. இரண்டு வார்த்தைகளை மாத்திரம் கொண்டு ஒட்டு மொத்த உணர்வையும் சொல்லிவிட்டார்.

“என் வலி மீது புன்னகையை அள்ளி அப்பி ஒப்பனை செய்தேன். தமிழ் நடைக்குப் புறப்பட்டேன்” ஒவ்வொரு வரியும் வலியை ரசிக்க வைக்கிறது. அது தான் கவிஞரின் தமிழ்.

மயக்க மருந்து கொடுத்து அறுவைசிகிச்சை முடித்த போது நினைவு வருகிறது கவிஞருக்கு. இப்படி சொல்கிறார், “இன்னொரு கிரகத்தில் இருந்தேன். என் உடலும் உயிரும் என் வசம் இருப்பதை உணர்ந்தேன்”.
வழக்கமாக காதலை வர்ணிக்கும் போது, கழியும் நிமிடங்கள் கணங்களாகும் என்பார். இங்கு “ஒவ்வொரு கணமும் ஓராண்டின் கனத்தில் கழிகிறது”. சிறுநீர் கழிக்க அவர் பட்ட சிரமத்தை விளக்கும் போது, நாமே உணர்கிறோம்.

“நிமிர்தல், குனிதல், கழித்தல், குளித்தல், படுத்தல், புணர்தல், நகைத்தல், அழுதல், நட்த்தல், ஓடுதல், அமர்தல், எழுதல்..என்று உடம்பின் ஒவ்வொரு வினையும் ஒட்டு மொத்த உடம்பின் சம்மதமின்றி முற்றிலும் நிகழ்வது இல்லை, முழுமையும் அடைவது இல்லை”

இதை படிக்கும் போது கவிஞர் மேடைகளில் அடுக்கும் வார்த்தைகள் போல் தோன்றினாலும் உணர்ந்து படித்தால் அப்படியே உண்மை.

கடைசியாக நமக்கு சில அறிவுரைகள் போல் தான் கற்றுக் கொண்டவைகளை சொல்கிறார். "வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று. உலகம சிறிது; பேரன்பு செலுத்து".

படித்து, வலியை ரசியுங்கள்.

# உன் தமிழ் உன்னை குணப்படுத்தும். நலிவு நீங்கி வாழ்க கவிப்பேரரசே !

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பெங்களூரு வழக்கும்.... தில்லி வழக்கும்....

அங்கும் ஒரு வழக்கு நடக்கிறது, இங்கும் ஒரு வழக்கு நடக்கிறது…

ஆனால் தாம் கண்ணை மூடிக் கொண்டதால், உலகம் இருண்டு போகும். அந்த இருட்டில், இது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும் எனபது பூனைகளின் நினைப்பு. 

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எப்படி, எத்தனை வருடமாக இழுத்தடிக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. வாய்தா வாங்குவதிலேயே கின்னஸ் சாதனை படைக்கும் கட்டத்தில் ஜெ.

2ஜி வழக்கில், தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2011 ஏப்ரல் 2-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை முழு ஒத்துழைப்பு கொடுத்து தன் மீதான வழக்கை நடத்தி வருகிறார் அண்ணன் ஆ,ராசா.

           

வழக்கை இழுத்தடிப்பதற்காக, சி.பி.ஐ தான் நேற்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குறிப்புரையையும், நீதிமன்ற உத்தரவையும் படித்தால் புரியும்.

நீதிமன்றக் குறிப்புரை :
கேட்ட கேள்வியையே வெவ்வேறு வகையில் கேட்டும், சுற்றி வளைத்து கேட்டும், ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என மூத்த அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

நீதிமன்ற உத்தரவு :
“ஏற்கனவே 17-07-2014 அன்று, மூத்த அரசு வழக்கறிஞர், ”இது பெரிய வழக்கு என்ற அடிப்படையில் குறுக்கு விசாரணைக்கு தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நாட்கள் வேண்டும்” என்று கோரியதின் அடிப்படையில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன.

ஆகவே, 18-07-2014 மற்றும் 19-07-2014 ஆகிய வேலைநாட்களில் வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, இன்று 21-07-2014 எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது மேலும் நாட்கள் கேட்கிறார்.

07-07-2014-ல் குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் முடிவை எட்டவில்லை. முடிவுத் தேதி(கட்-ஆப் டேட்) குறித்து குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் அதே முடிவுத் தேதி குறித்தே விசாரணை நீடிக்கிறது, பல நாட்களுக்குப் பிறகும்.

இதனடிப்படையில் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டியது. ஆனால் எனது விருப்பமின்மைக்கு இடையிலும், வழக்கு விசாரணை தாமதப்படாத வகையில் குறுக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்ற உத்தரவோடு, வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மூத்த அரசு வழக்கறிஞரின் வேண்டுதலுக்காக குறுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது”

வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கை இழுத்தடிப்பார்கள், ஜெயலலிதாவைப் போல. ஆனால் இங்கே அரசுத் தரப்பு இழுத்தடிக்கிறது. இதன் காரணமாக, மூத்த அரசு வழக்கறிஞரை இந்த அளவிற்கு கண்டித்திருக்கிறார் நீதிபதி,

அதே போல நேற்றைய விசாரணையில் பிரதமரின் ஒப்புதல் பேரிலேயே அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று அண்ணன் ஆ.ராசா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

தானே வாதாடி, இப்போது தானே சாட்சியமும் வழங்கி அரசுத் தரப்பை திணறடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஆ.ராசா.
ஆனால் இது எதுவும் உலகின் கண்களுக்கு தெரியக்கூடாதென கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளன, சில பத்திரிக்கைப் பூனைகள்.

# உதயசூரியனும் உதிக்கையிலே… !

சனி, 2 ஆகஸ்ட், 2014

அறிவார்ந்த செ.கு.தமிழரசன் அவர்களுக்கு...

அறிவார்ந்த செ.கு.தமிழரசன் அவர்களுக்கு

           ,

தங்களது அறிவு முதிர்ச்சியான பேட்டியை, ஜூனியன் விகடன் இதழில் கண்டு ரசித்தேன். உங்களை போன்ற அறிவார்ந்தோர் அதிமுகவில் இல்லையே என முதல்வர் கூட வருத்தப்படுவார்.

மூன்று பக்கத்திற்கு பேட்டி கொடுத்து சபாநாயகர் நடவடிக்கையை சிலாகித்தவர், அமைச்சர் வைத்தி அவர்களுடைய நல்ல தமிழ் வார்த்தை ”ஓடுகாலி”யை பாராட்டத் தவறி விட்டீர்களே என்பது தான் எனக்கு வருத்தம்.

வைத்தி கூற தயாராக இருந்ததை திமுக கேட்காமல் போய் விட்டார்கள் என்பதை குறிப்பிட்டு சொன்ன நீங்கள், ஏன் போனார்கள் ? ஏன் வெகுண்டெழுந்தார்கள் என்பது குறித்து பேசவில்லையே ?

மவுலிவாக்கம் பிரச்சினை மக்கள் பிரச்சினை இல்லையா ? அங்கே இறந்தவர்கள் எல்லாம் மாக்களா ? அவர்கள் பிரச்சினையை தானே திமுகவினர் எழுப்ப முயன்றது.

அடுத்து சட்டபேரவையின் தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். திமுகவினரை பார்த்தால் மட்டும் எரிந்து விழுபவர் நடுநிலையாளரா ? எதிகட்சியினரை பேச விடாமல் அடக்கி ஆள்பவர் பொதுவானவரா ?

எங்கள் தலைவர் சபைக்கு வராதது குறித்து பேசும் நீங்கள், அவரது சக்கர நாற்காலி வருவதற்கு பாதை அமைத்து தராத சபாவின் நடவடிக்கையையும் சற்று சீர் தூக்கிப் பாருங்கள்.

சட்டசபையில் நடுவில் செல்லும் பாதையில் ஒருவர் தான் நடந்து செல்ல இயலும். இருவர் ஒரே நேரத்தில் செல்ல இயலாது. அடுத்து அந்தப் பாதை படிக்கட்டை போல் படிப்படியானது. அதில் அவரது சக்கர நாற்காலி செல்ல இயலுமா ?

அதே போல நாற்காலியில் சென்று அமர்வதற்கு, இரண்டு வரிசைகளுக்கு இடையில் சென்று அமர்வதும் நெருக்கடியானப் பாதை. உட்கார்ந்திருப்பவர் எழுந்து வழி விட்டால் தான் மற்றவர் உள்ளே சென்று அமர முடியும். இதில் எங்கள் தலைவர் சக்கர நாற்காலி செல்லுமா ?

இதெல்லாம் உங்களுக்கு தெரிய நியாயம் இல்லை தான். உள்ளே நுழைந்தால் உங்கள் கண்ணுக்கு தெரிவதெல்லாம் அம்மா மாத்திரம் தானே. காதில் விழுவதெல்லாம் அம்மா மந்திரம் தானே.

இதற்கு தான் விசாலமான, புதிய சட்டமன்ற வளாகம் கட்டினோம். ஆனால் உங்கள் தலைவி மீண்டும் இந்த நெருக்கடியான இடத்திற்கே கூட்டி வந்து விட்டார். முதலில் அவரிடம் நியாயம் கேளுங்கள்.

நாங்கள் பொதுக் கூட்டம் நடத்தி மக்களை சந்திப்பதை கேலி செய்திருக்கிறீர்கள். சட்டசபையில் பேச விடாத போது, எங்களை சட்டசபைக்கு அனுப்பிய மக்களிடத்தில் செல்வது தானே நியாயம்.

உங்களுக்கென்ன கூட்டணி வெற்றி பெற்றால், அடிக்கிற காற்றில் மேலே பறப்பீர்கள், இல்லை என்றால் இருக்கிற இடம் தெரியாது. எந்த மக்களையும் சந்திக்க வேண்டிய அவசியமும் இல்லை.

நீங்கள் உங்கள் பணியை பாருங்கள், எங்கள் தலைவருக்கு அறிவுரை கூறுவதை எல்லாம் நிறுத்திக் கொள்ளுங்கள். என்ன பணி என்று கேட்கிறீர்களா ? வள்ளுவரே சொல்லியிருக்கிறார் உங்களுக்காக ஸ்பெஷலாக…

ஊதல் இசைபாடி வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு”


தங்களன்புள்ள
தங்கள் அளவுக்கு இல்லாவிட்டலும் சிறிதளவு அறிவுள்ள
சக சட்டமன்ற உறுப்பினர்
சிவசங்கர்.எஸ்.எஸ்.

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மக்கள் கூடி எடுத்த விழா - மாமன்னனுக்கு !


மக்கள் கூடி எடுத்த விழா, மாமன்னன் இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா. கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஏழு கிராமத்து மக்கள் கூடி விழா எடுக்க முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர் அண்ணன் கோமகன்.

சரியாக ஒரு மாதம் முன் தான் முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அதற்கு பிறகு ஊர் கூடி பேசி, கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். முகநூல் பதிவுகள் மூலம் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இதற்கிடையில் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரையா, மார்கழி திருவாதிரையா என்ற சர்ச்சை வேறு. இதனை தீர்க்க கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களோடு திருவாரூர் பயணம் செய்தார் அண்ணன் கோமகன்.

                 

அங்கு தியாகராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனே செதுக்கி வைத்த கல்வெட்டை ஆதாரமாக உறுதிப் படுத்திக் கொண்டு விழா ஏற்பாடுகள் ஆரம்பமானது.

விழாவில் பங்கேற்ற அறிஞர்கள், சான்றோர்கள் தேதிகளை, நேரத்தை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை திட்டமிட்டு, அழைப்பிதழ் தயாரிப்பதற்குள் நாட்கள் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டன. அண்ணன் கோமகனும் குழுவினரும் பம்பர வேகத்தில் இயங்கினர்.

அரசு ஆதரவு இல்லாதது ஒரு புறம், நிதி நெருக்கடி ஒரு புறம், நேர நெருக்கடி இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து விழா மிக, மிக சிறப்பாக நடந்தேறியது. திட்டமிட்டப்படி துல்லியமாக நடைபெற்றது அடுத்து குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் ஊடகத்துறை மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகப் பெரிய வெற்றியாக்கினர்.

உள்ளூர் இளைஞர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது. தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்தி பெரும் இளைஞர் கூட்டம் இருசக்கர வாகனங்களில். தவறாமல் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்கு இராஜேந்திர சோழ மண் சார்பாக நன்றி. நான் பார்வையாளனாக சென்று கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.


கருத்தரங்கில் பேசிய சான்றோர்கள் அனைவருமே அண்ணன் கோமகன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தையும் நன்றியையும் சொன்னார்கள். இதற்கு எல்லாம் உச்சம் நிகழ்வுகளின் கடைசியாக நடைபெற்றது.

ஒரு பெரும் இளைஞர் கூட்டம் திடுமென மேடையில் ஏறினார்கள். கையில் ஆளுயர ரோஜா மாலை. மேடைக்கு பின்புறமிருந்து அண்ணன் கோமகனை அழைத்து வந்தார்கள். அதற்கு முன் மேடையில் அதிகம் தலைகாட்டாமல் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு ரோஜா மாலையை சூட்டி கையில் ஒரு வாளை வழங்கினார்கள்.

              Photo: மக்கள் கூடி எடுத்த விழா, மாமன்னன் இராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா. கங்கைகொண்ட சோழபுரத்தை சுற்றியுள்ள ஏழு கிராமத்து மக்கள் கூடி விழா எடுக்க முடிவு எடுத்தார்கள். அவர்களுக்கு தூண்டு கோலாக இருந்தவர் அண்ணன் கோமகன்.

சரியாக ஒரு மாதம் முன் தான் முடிவெடுத்திருப்பார்கள் என எண்ணுகிறேன். அதற்கு பிறகு ஊர் கூடி பேசி, கங்கை கொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுமம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார்கள். முகநூல் பதிவுகள் மூலம் பார்த்துக் கொண்டே வந்தேன்.

இதற்கிடையில் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடித் திருவாதிரையா, மார்கழி திருவாதிரையா என்ற சர்ச்சை வேறு. இதனை தீர்க்க கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களோடு திருவாரூர் பயணம் செய்தார் அண்ணன் கோமகன்.

அங்கு தியாகராஜர் கோவிலில் உள்ள கல்வெட்டில் ராஜேந்திர சோழனே செதுக்கி வைத்த கல்வெட்டை ஆதாரமாக உறுதிப் படுத்திக் கொண்டு விழா ஏற்பாடுகள் ஆரம்பமானது.

விழாவில் பங்கேற்ற அறிஞர்கள், சான்றோர்கள் தேதிகளை, நேரத்தை ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியை திட்டமிட்டு, அழைப்பிதழ் தயாரிப்பதற்குள் நாட்கள் வேகமாக ஓட ஆரம்பித்து விட்டன. அண்ணன் கோமகனும் குழுவினரும் பம்பர வேகத்தில் இயங்கினர்.

அரசு ஆதரவு இல்லாதது ஒரு புறம், நிதி நெருக்கடி ஒரு புறம், நேர நெருக்கடி இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து விழா மிக, மிக சிறப்பாக நடந்தேறியது. திட்டமிட்டப்படி துல்லியமாக நடைபெற்றது அடுத்து குறிப்பிடத் தக்கது.

உள்ளூர் ஊடகத்துறை மிகுந்த ஒத்துழைப்பு அளித்து நிகழ்ச்சியை வெகு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். கங்கை கொண்ட சோழபுரம் மற்றும் சுற்று வட்டார பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு விழாவை மிகப் பெரிய வெற்றியாக்கினர். 

உள்ளூர் இளைஞர்கள் பங்களிப்பு பாராட்டப்பட வேண்டியது. தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்தி பெரும் இளைஞர் கூட்டம் இருசக்கர வாகனங்களில். தவறாமல் கலந்து கொண்ட அறிஞர் பெருமக்களுக்கு இராஜேந்திர சோழ மண் சார்பாக நன்றி. நான் பார்வையாளனாக சென்று கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.

கருத்தரங்கில் பேசிய சான்றோர்கள் அனைவருமே அண்ணன் கோமகன் அவர்களுக்கு தங்கள் வாழ்த்தையும் நன்றியையும் சொன்னார்கள். இதற்கு எல்லாம் உச்சம் நிகழ்வுகளின் கடைசியாக நடைபெற்றது.

ஒரு பெரும் இளைஞர் கூட்டம் திடுமென மேடையில் ஏறினார்கள். கையில் ஆளுயர ரோஜா மாலை. மேடைக்கு பின்புறமிருந்து அண்ணன் கோமகனை அழைத்து வந்தார்கள். அதற்கு முன் மேடையில் அதிகம் தலைகாட்டாமல் சங்கோஜப்பட்டுக் கொண்டிருந்த அண்ணனுக்கு ரோஜா மாலையை சூட்டி கையில் ஒரு வாளை வழங்கினார்கள்.

அவர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க பட்டபாடு அத்தனைக்கும் சிறந்த மரியாதையாக அமைந்தது.

# பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றிகள் !

அவர் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிக்க பட்டபாடு அத்தனைக்கும் சிறந்த மரியாதையாக அமைந்தது.

# பாராட்டுகள், வாழ்த்துக்கள், நன்றிகள் !