பிரபலமான இடுகைகள்

சனி, 8 நவம்பர், 2014

ஆய்வுப் பணி - தளபதி வருகை

      
தஞ்சையிலிருந்து தளபதி அவர்கள் கிளம்பிவிட்டார்கள் என்று அலைபேசி செய்தி. நாங்கள் மாவட்ட எல்லையான திருமானூரில் கூடி வரவேற்பு கொடுத்தோம். அண்ணன் ஆ.ராசா அவர்களும் சுபா.சந்திரசேகர் அவர்களும் தஞ்சை சென்று அழைத்து வந்தார்கள்.

வரவேற்பு நிகழ்ச்சிக்கே பொதுக்கூட்டம் போல் கழகத் தோழர்கள் கூடிவிட்டனர்.



அடுத்து பெரம்பலூர் மாவட்டக் கழக சார்பாக குன்னத்தில் வரவேற்பளித்தனர்.

பெரம்பலூர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் அலுவலகத்தை அடையும் போது மணி இரவு 10.00. உடன் வந்திருந்த முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் விடை பெற்று சென்றனர்.

அதற்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் விடை பெற்ற பிறகு இரவு உணவு அருந்த சென்றார்கள். உணவருந்தி படுக்க இரவு 11 ஆகியிருக்கும். காலை 05.30க்கு எழுந்து, தயாராகி நடைபயிற்சி மேற்கொள்ள சென்றார்கள். இது 06.11.2014.

03.11.2014 அன்று சென்னையிலிருந்து இந்த சுற்றுப்பயணம் துவங்கியது. அன்று அதிமுக அரசால் பால் விலை, மின் கட்டணம் ஏற்றப்பட்டதை கண்டித்தும், விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் போர்பாட்டில் வடசென்னை மாவட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு புதுக்கோட்டைக்கு கிளம்பினார்கள் தளபதி.

04-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் கிளைக்கழக ஆய்வு நிகழ்ச்சிகள். 05-ம் தேதி தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு நிகழ்ச்சிகள். அது முடித்து தான் 06-ம் தேதி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களுக்கான ஆய்வு நிகழ்ச்சிகள்.

               

காலை 09.00 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்பகம் கலை அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு தயார் செய்தார். சரியாக 08.50, தளபதி அவர்கள் வந்துவிட்டார்கள். ஆய்வு துவங்கியது. நேரந் தவறாமையின் சின்னமாக விளங்குகிறார்.

முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடல். நிர்வாகிகள் யாரும் பங்கேற்பது கிடையாது. தளபதி அவர்கள் மட்டுமே. காரணம், ஆய்வில் பங்கேற்பவர்கள் அப்போது தான் யாரை கண்டும் தயங்காமல் தங்கள் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவிப்பார்கள் என்பதால்.

 நிர்வாகிகள் வாயிலில் நின்று வரவேற்றோம்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து ஆய்வு முடிந்தது. முடிந்து வெளியே வந்த மாணவர்கள் முகத்தில் எல்லையற்ற ஆனந்தம். ஒரு மாணவரை அழைத்து காரணம் கேட்டோம்.

“இவ்வளவு பெரியதலைவரிடம் என்ன சொல்வது என்று திகைத்தோம். அவர் எங்கள் பெயரை சொல்லி அழைத்து பேச சொன்ன போது தயக்கம் விலக ஆரம்பித்தது”…….

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக