பிரபலமான இடுகைகள்

புதன், 4 மார்ச், 2015

பிரச்சினைய முடிக்கனுமா ஒரு கமிட்டிய போடு; தாதுமணல்_ஊழல்‬ 1

தாதுமணல். நம்மூர் ஆற்று மணலே இவ்வளவு காஸ்ட்லியா இருக்கும் போது, வெளிநாடு ஏற்றுமதியாகிற கனிம வளமான தாதுமணல் எப்படி இருக்கும்...

      

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கடற்கரையோரம் கிடைக்கிற மணல் தான் இந்த அற்புத தாதுமணல்.

2013-ல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த ஆசிஸ்குமார் அவர்களுக்கு ஒரு புகார் வருகிறது. புகாரை ஒட்டி அவர் ஆக்ஸ்ட் மாதம் ஒரு ஆய்வு செய்கிறார்.

வைப்பாறு, வேம்பார், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களுக்கு அருகில் கடற்கரையோரம் 3 கிமீ அளவிற்கு 2,39,712 மெட்ரிக் டன் அளவு கனிம மணலை "அனுமதியின்றி" அள்ளியிருப்பது தெரிய வருகிறது.

இந்த முறைகேடு குறித்து அரசுக்கு புகார் அனுப்புகிறார். 24 மணி நேரத்தில், அவருக்கு ட்ரான்ஸ்பர் ஆர்டர் வருகிறது. காரணம் மணலை அள்ளிய நிறுவனத்தின் உரிமையாளர்.

விவி மினரல்ஸ் வைகுண்டராஜன். பேரச் சொன்னா கடற்கரையே சும்மா அதிருமுல்ல. அரசாங்கமும் சேர்ந்து. அதிர்ந்தது. இந்த அதிர்வில் அமைதியாகிவிடும் பொதுமக்கள், இந்த முறை கொதித்து எழுந்தனர்.

கலெக்டர் ட்ரான்ஸ்பரை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். வைகுண்டராஜன் விருப்பத்தை மீறி யாரும் அந்த மாவட்டங்களில் பணிபுரிய முடியாது. அது தான் விவி பவர்.

அதனால் கலெக்டர் மாறுதலை ரத்து செய்யாமல், குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிட்டார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.

ஆனாலும் மக்கள் போராட்டம் தொடர்ந்தது. அப்போது தான் அந்த பழைய அரசாங டெக்னிக்கை கையில் எடுத்தார் ஜெ. "ஆள முடிக்கனுமா, ஒரு கல்லை போடு. பிரச்சினைய முடிக்கனுமா ஒரு கமிட்டிய போடு".

வேறு வழியில்லாமல், அய்.ஏ.எஸ் அதிகாரி ககன் தீப்சிங் பேடி தலைமையில் சிறப்புக்குழு அமைத்து விசாரணக்கு உத்தரவிட்டார்.

குழு தூத்துக்குடி வந்தது... (தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக