பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 2 அக்டோபர், 2015

எதிரி எரிதலே வெற்றி

"என் பேச்சுக்கு ஆயிரம் பேர் கைதட்டுவதற்கு எவ்வளவு பெருமைப்படுவேனோ, அதை விட என் பேச்சால் ஜெயலலிதா முகத்தில் வரும் கோபத்திற்கு கூடுதலாக பெருமைப்படுவேன்", இது நான் அடிக்கடி சொல்லும் வாசகம். சமீபத்தில் கூட இதை மேடையில் பேசினேன்.

இன்று லால்குடி பகுதியில் ஒரு போஸ்டரை பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன். அது அதிமுகவின் போஸ்டர். தளபதி அவர்களை விமர்சித்து ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்.

இந்த போஸ்டரை பார்த்து எப்படி மகிழ்ச்சி வரும் என நினைக்கலாம். தளபதி அவர்களின் 'நமக்கு நாமே' பயணம் எந்த அளவிற்கு வெற்றி என்பதன் வெளிப்பாடே இந்த போஸ்டர். எதிரிகளின் எரிச்சலே நமது செயலின் வெற்றி.

சட்டமன்றத்தில் இப்படி தான் திடீரென தளபதி குறித்து ஜெயலலிதா விமர்சித்தார். அது வரை தளபதி அவர்களை விமர்சிக்காமல், தன்னை மேலானவராக காட்டிக் கொள்வார் ஜெ. இப்போது விமர்சிக்க காரணம் 'நமக்கு நாமே'.

அடுத்து மந்திரி நத்தம் விஸ்வநாதன், நமக்கு நாமே குறித்து சம்பந்தமில்லாமல் விமர்சித்தார். இதுவும் சட்டமன்றத்தில் தான். வேறு ஒரு பொருளில் பேசிக் கொண்டிருந்தவர், இந்த விமர்சனத்திற்கு போனார்.

இன்னொரு புறம் சமூக வளைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்ப்பவர்களும் உண்டு. எல்லோரையும் கலாய்த்தே பழக்கப்பட்டவர்கள் சிலர். கட்சி வேறுபாட்டில் கலாய்ப்பவர்கள் சிலர்.

இதை தாண்டி களத்திலும் இப்போது போஸ்டர்.  "நமக்கு நாமே என ஊர் சுற்றும் அண்ணாச்சி, கடந்த திமுக மைனாரிட்டி ஆட்சியில் பொது மக்களுக்கு தருவதாக வாக்குறுதி அளித்த 2 ஏக்கர் நிலம் என்னாச்சு?".

ஆளுங்கட்சி சொன்னதை செய்யவில்லை என எதிர்கட்சி போஸ்டர் அடிப்பது தான் நடைமுறை.  ஆளுங்கட்சி தன் சாதனையை போஸ்டர் அடித்து வெளிப்படுத்திக் கொள்ளலாம் .  நான்கரை ஆண்டுகள் கழித்து, கடந்த ஆட்சி செய்யவில்லை என எதிர்கட்சியை விமர்சித்து ஆளுங்கட்சி  போஸ்டர் அடித்தால் என்ன அர்த்தம்.

இவர் பயணத்தின் வெற்றியை தாங்க முடியாத வயிற்றெரிச்சலின் வெளிப்பாடே இது என அர்த்தம்.

தலைமையில் ஆரம்பித்து, கீழே வரை எரிகிறதென்றால், சபாஷ். பயணம் சென்னையை தொடும் போது, கருகி முடிந்துவிடும் இந்த ஆட்சி.

# உன் வெற்றியை எதிரியின் எரிச்சல்  சொல்லும் !