பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

அன்னமிட்டக் கை

தொலைக்காட்சி ரிமோட் கையில் சுழன்றுக் கொண்டிருந்தது. ஜெயா மேக்ஸும் கடந்தது. கவனத்தைக் கவர்ந்தது. திரும்பி ஜெயா மேக்ஸ் வந்தது. மக்கள் திலகம் சுற்றி சுழண்டார். பாட ஆரம்பித்தார்.


"அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை "

இதைப் பாடி முடிப்பதற்குள் இங்கும் அங்குமாக அசைந்து சென்ற இடத்தில் தலைவி இருந்தார். ஆமாம் தலைவனின் தலைவி. அவர் தான் ஜெயலலிதா. தேநீர் இலைகளை கொய்து கொண்டிருந்தார். மக்கள் திலகம் சுற்றிச்சுற்றி பாடியும் அவர் கர்மமே கண்ணாயினர் என தன் பணியில் கவனமாக இருந்தார்.

வழியில் நடக்க இயலாமல் இருந்த இன்னொரு பெண்ணின் சுமை கூடையை தன் தோளில் சுமந்துக் கொண்டார் தலைவர், ஆனால் அலட்சியமாக. தேயிலை சிந்தியது. அவர் நோக்கம் பெண்ணுக்கு உதவுவது மாத்திரமே. அதை கண்டு தலைவி ஜெ மகிழ, தலைவர் பாடலை தொடர்ந்தார்.


"இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்"

பாடி, ஓடி வந்த மக்கள் திலகம், மீண்டும் ரிப்பீட் பாடினார். இப்போது தலைவியை நோக்கி. புரட்சித் தலைவியும் தீவிரமாக கேட்டு உணர்ந்தது போல தலையசைத்தார்.


"பாடுபட்ட கை அது பாட்டாளி கை" இந்த வரிகளை பாடும் போது, ஒரு இழுவை வண்டியை ஆளுக்கொரு கை கொடுத்து தலைவனும், தலைவியும் இழுக்க பாடல் தொடர்ந்தது....
"பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலைநிறுத்தி உடல் வருத்தி"


"பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க", இந்த வரிகளை பாடும் போது தலைவர், புரட்சித்தலைவியை காதலாய் நோக்குகிறார்.


"வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி" இந்த வரிகளை பாடும் போது தனியே, தன் மேனரிஸங்களோடு பாடி தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.


பக்கத்தில் தலைவி ஜெயலலிதா நடந்து வந்தாலும், மீண்டும் கொள்கை முழக்கமிடுகிறார் புரட்சித்தலைவர், "அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை"

அதனால் தான் அவர் மக்கள்திலகம். புரட்சித்தலைவர். அவர் சொன்ன இந்த எளிய அறிவுரைகளைக் கூட கேட்டு நடக்க முடியாதவர் தான் இந்தப் புரட்சித்தலைவி.

கோடிக்கணக்கான ஏழை கிராம மக்கள் தவிக்க, ஆயிரக்கணக்கான நகர மக்களுக்கு மாத்திரம் "அம்மா உணவகம்" திறந்து நாட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் புரட்டுத்தலைவி.

புரட்சித்தலைவர் ஆவி சும்மா விடாது.

# இங்கு எல்லோரும் வாழ வேண்டும், தலைவி மாத்திரமல்ல !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக