பிரபலமான இடுகைகள்

வியாழன், 14 ஜனவரி, 2016

காலர் டியூன் கேக்கக் கூப்பிட்டேன்

அலைபேசி ஒலித்தது. எடுத்தேன். "சார், அதுக்குள்ள எடுத்துட்டிங்க. பாட்டக் கேக்கலாம்னு நினைச்சேன்". சொல்லி முடிக்கும் முன் கட் செய்தேன். அவர் அழகர்ராஜா, ஶ்ரீவில்லிபுத்தூரில் இருந்து. அது காலர் டியூனுக்கான விருப்பம்.

மீண்டும் அழைத்தார். முழு ரிங் வரும் வரை விட்டேன். இப்போது அவரை நான் அழைத்தேன். என்கேஜ்ட் ஒலி. மீண்டும் முயற்சித்தேன். பிஸி டோனே ஒலித்தது. அவர் என்னை முயற்ச்சிக்கிறார் போலும்.

சரி, இந்தப் பாட்டை கேட்க மீண்டும் முயற்சிக்கிறார் என்றால், அவர் பேசுவதற்குள் நாம் அந்தப் பாட்டைக் கேட்டு விட்டு மீண்டும் தயாராக வேண்டும் என கூகுள் குரோமில் துழாவினேன். பாடல் காட்சியுடன் வந்தது.

இந்தப் பாட்டை காலர் டியூனாக வைப்பதற்குள், நான் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும். அதற்கு முன்னும் இசைஞானி பாடல் தான் காலர் டியூன். ஆனால் இப்போதைய பாடல் தூக்கி அடித்து விட்டது, கேப்டன் விஜயகாந்த் சொன்னது போல.

புது காலர் டியூன் மாற்றலாம் என முடிவு செய்த உடன் இசைஞானியின் 80ம் ஆண்டு பாடல்களில் தேடுதல் வேட்டையைத் துவங்கினேன். ஒரு மணி நேரத் தேடுதலுக்கு பிறகே இந்தப் பாடலைப் பிடித்தேன்.  பதின் வயதில் மெஸ்மரிசம் செய்த பாடல்.

யூ-டியுபில் பாடல் கிட்டியது. அடடா என்ன மாதிரியாகக் காட்சிப் படுத்தி இருக்கிறார்கள். நாயகனும், நாயகியும் இசைந்து பாடலோடு ஒன்றி வருகின்ற காட்சி அருமை. இயக்குனரின் கைவண்ணம் மிளிர்கிறது.

இடையில் அழகர்ராஜா லைனுக்கு வந்து விட்டார். "சார், பிஸி ஆயிட்டிங்க" என்றேன். "ஆமாம். இப்படி பாடல் வைத்தால் என்ன செய்வது?" என்றார். "ஏன் சார்?" என்றுக் கேட்டேன். "பாடலை முழுமையாக கேட்க தூண்டி விட்டீர்கள்"என்றார்.

"சார், இசைஞானி பாடலை வைக்கத் தேடினேன். அதில் இந்தப் பாடலை தெரிவு செய்தேன். முன்னாடியும் இளையராஜாவின் பாடலை தான் வைத்திருந்தேன். அதற்கு முன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பாடல்களை வைத்திருந்தேன்", என்றேன்.

"இந்தப் பாட்ட கேட்டா யார் சார் அதுக்கு மேல பேசுவாங்க" என்றுக் கேட்டார். "ஆமாம் சார். என் கல்லூரி நண்பர் அழைத்தவர், பழையக் காலத்துக்கு கொண்டு போய்ட சிவா என்றார்", என்றேன்.

"சார், அது மட்டுமில்ல தொகுதியில் இருந்து பிரச்சினைன்னு போன் பண்றவங்க கூட இந்தப் பாட்ட கேட்டாக்க, பிரச்சினைய மறந்திடுவாங்க", என்றார்.

ஆனால் நான் அப்படி நினைச்சு அந்தப் பாட்ட வைக்கவில்லை. பாட்டை கேட்பவர்கள் இசையோடு இசைந்து போக வேண்டும், ரசித்து வாழ வேண்டும் என்பது மாத்திரமே நோக்கம்.

அப்படி என்ன பாட்டுன்னு கேக்கறீங்களா....

# இளையராஜா பாட்டுன்னால்லே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக