பிரபலமான இடுகைகள்

வியாழன், 3 ஜூலை, 2014

விருதுநகர் அடி வயிற்றில் கட்டிய வெடிகுண்டோடு...

மாலை நேரம். வழக்கமாக பிள்ளைகள் விளையாடும் நேரம் தான். காளீஸ்வரியும் காளிமுத்துவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது அப்படி. காளீஸ்வரி 9 வயது. காளிமுத்து 11 வயது. வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது.

               Photo: மாலை நேரம். வழக்கமாக பிள்ளைகள் விளையாடும் நேரம் தான். காளீஸ்வரியும் காளிமுத்துவும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். வயது அப்படி. காளீஸ்வரி 9 வயது. காளிமுத்து 11 வயது. வெடி வெடிக்கும் சத்தம் கேட்டது.

சத்தம் கேட்டு திரும்பி பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. மற்ற ஊரில் வெடி வெடித்தால் பேப்பர் தான் பறக்கும். அந்த ஊரில் வெடி வெடித்தால் கற்கள் பறக்கும். பறந்து வந்த கற்கள் தாக்கி குழந்தைகள் இருவரும் இறந்தே போனார்கள்.

பதினோரு மாடி கட்டிடம் சரிந்ததில், இந்த சிறு கற்கள் மறைந்து போயின, மறந்தும் போயின. சம்பவம் நடந்த அன்றே பத்திரிக்கைகளில் இது சிறு செய்தி தான். 28.06.2014 தினத்தந்தியில் இது 9-ம் பக்கத்து செய்தி. முதல் பக்க செய்தி “குற்றாலத்தில் கூடுதல் வசதிகள், அருவிகள் வனங்களை பாதுகாக்க முதல்வர் ஜெ தலைமையில் பாதுகாப்பு ஆணையம்”.

விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சி அமைந்த பிறகு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்படும் விபத்து 100-ஐ தாண்டி இருக்கும். கடந்த வருடம் ஒரு பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்த போது, பரப்பரப்படைந்த அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. காற்றோடு போயிற்று.

இந்த விபத்து விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலிநாயக்கனூரில் நடைபெற்றது. அய்யப்பன் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ, மீனாட்சிசுந்தரத்தின் கருந்திரி ஆலைக்கு பரவியதால் விபத்து. இரண்டு ஆலைகளும் முறைப்படி அனுமதி பெறாமல் செயல்படுபவை. இதில் மீனாட்சிசுந்தரம் ஆலையில் கடந்த ஆண்டு சிறு விபத்து ஏர்பட்டது.

அப்போது பார்வையிட்ட அதிகாரிகளும், சிறிது நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாமல் விட்டுவிட்டனர். காரணம் மீனாட்சிசுந்தரம் தற்போது விருதுநகர் ஒன்றிய அதிமுக கவுன்சிலர். கடந்த ஆண்டு 20 பேரை பலிவாங்கிய ஆலை சேர்மன் முருகேசனுடையது.

அதிமுக என்பதால் இந்தக் குற்றச்சாட்டல்ல. இந்த ஆட்சி அமைந்த பிறகு, 100 விபத்து ஏற்பட்டிருக்கும், 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். இதில் இன்னொரு கொடுமை, விழுந்த பிணங்களை எண்ணி, ஆலை அதிபரிடம் பணம் கேட்டு பெற்றுள்ளார் ஒரு மந்திரி, நடவடிக்கை கடுமையாகமல் இருக்க.

நல்லவேளையாக, விபத்து நடந்த அன்று அந்த ஆலைகளில் மூன்று பேர் தான் வேலை செய்துள்ளனர். வழக்கமாக 60 பேர் வேலை செய்யும் இடம் அது. பலியானோர் 4 பேர், பிறகு ஆறாக உயர்ந்துள்ளது. மாதம் தவறினாலும், பட்டாசு ஆலை விபத்து தவறுவதில்லை. விருதுநகர் அடி வயிற்றில் கட்டிய வெடிகுண்டோடு காத்திருக்கிறது.

ஒரு விபத்து நடந்தால். குழு அமைத்து விசாரிப்பதும், கட்டுபாடுகள் விதித்து அறிக்கை வெளியிடுவது மாத்திரமே ஒரு அரசின் கடமை அல்ல. மேற்கொண்டு விபத்துகள் நடக்காமல் தடுப்பதே கடமை. அதுவும், இன்னும் பல நூறு உயிர்கள் பறி போவதற்கு முன்னால்.

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழில் குடிசைத் தொழில். அதை தக்க பாதுகாப்புகளோடு நடத்த முறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை. கடமை தவறி அறிக்கை போர் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு முதல்வர், யார் செய்த தவறிலோ உயிரிழந்த குழந்தைகள்….

# கருந்திரிகளை அழித்திடுக, மொட்டுக்களை காத்திடுக !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக