பிரபலமான இடுகைகள்

திங்கள், 28 ஏப்ரல், 2014

நம்ம சின்னம், என்ன சின்னம் ?

வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.

அப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.

பெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.

மகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.

வேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.

காரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ?” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ?” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா?” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.

கலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கடந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.

“ஏணி” சின்னம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஏணி கேரளாவில் முஸ்லீம் லீக்கின் சின்னமாக இருக்கிறது. அவர்கள் வேட்பாளர் நிறுத்தினால் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். அதற்கு மனு பரிசீலனை நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல். வேறு சின்னம் கேட்டால், தற்போது உறுப்பினர் என்ற முறையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இரண்டு நாட்களாக “தொலைக்காட்சி பெட்டி” பெறலாமா என்ற விவாதம் நிர்வாகிகள் மட்டத்தில் இருந்தது. ஆனால் “ஏர்கூலர்” சின்னம் “டீவி” போல இருப்பதாக தெரிய வந்தது. அது குறித்து அண்ணன் எம்.ஆர்.கே.பியோடும் என்னோடும் விவாதித்தார். சின்னப் பட்டியலில் இருந்த “ஏர்கூலர்” படத்தை அம்மாவிடம் காட்டினார்,”இது என்னம்மா?”. யோசிக்காமல் சொன்னார் அம்மா,”டீவி பெட்டி”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி சிரித்தார். “வேறு சின்னம் பார்க்கலாம்ணே. இவரை போன்ற முதியவர்கள் பார்வைக்கு இப்படி தான் தெரியும்” என்றேன். அண்ணன் திருமா அம்மாவை பார்த்து புன்னகைத்து, அடுத்த சின்னத்தைக் காட்டினார். அம்மா பளிச்சென்று சொன்னார்,”இது மோதிரம்”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி மோதிரம் போடுவது போல விரலை நீட்டி சைகைக் காட்டிக் கொண்டே “ஃபைனல்” என்றார். அண்ணன் திருமா வெடித்து சிரித்தார். படிவத்தை எடுத்து எழுதினார்,”மோதிரம்”. அம்மா அப்பாவியாக அமர்ந்திருந்தார்.

# வெற்றிக்கு நிச்சயதார்த்த “மோதிரம்” !

                             Photo: வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.

அப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.

பெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.

மகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.

வேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.

காரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ?” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ?” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா?” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.

கலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கட்ந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.