பிரபலமான இடுகைகள்

திங்கள், 9 மார்ச், 2015

எக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி; தாதுமணல்_ஊழல்‬ 4

தாதுமணலில் ஊழல் என்பது நீண்ட நாட்களாகக் கனன்று கொண்டிருந்தாலும், எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்ட “ரூபாய் ஒரு லட்சம் கோடி ஊழல்” தான் அதை பற்றி எரியும் நெருப்பாக்கியது.

 

(http://economictimes.indiatimes.com/photo/46079579.cms)

தமிழகத்தில் எதிர்கட்சிகள் இது குறித்து குரல்எழுப்பிய நேரத்தில், அரசாங்கம் கள்ள மௌனம் சாதித்தது. தலைவர் கலைஞர், அரசின் பதில் வேண்டி அறிக்கை வெளியிட்டார், பதில் இல்லை. காரணம் அவர்கள்.

சட்டமன்றத்தில் தளபதி அவர்கள் இது குறித்து அரசின் பதிலை பெற, பல முறை முயன்ற போதும், பேச அனுமதிக்க மறுத்தார் சபாநாயகர். காரணம், அவர்கள் தான்.

அவர்கள் யார் என்பதை அறிவதற்கு, கர்நாடக மாநிலத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹா உதவிக்கு வருகிறார்.

அவர் அளித்த தீர்ப்பில் ஜெயா தொலைக்காட்சியில், விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் பங்குதாரர் என்பதை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சி யாருடையது என்பது நாடறிந்த விஷயம்.

ஜெயா தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் தான் அவர்கள். ஜெயலலிதா மீதான தீர்ப்பு வருவதற்கு சற்றே முன்பாக தமிழக வாரப் பத்திரிக்கைகளில் ஒரு செய்தி பரபரத்தது.

தமிழகத்தின் தலைநகரில் நட்சத்திர ஹோட்டல், மத்திய மாவட்டத்தில் ஒரு சர்க்கரை ஆலை என தமிழகம் முழுதும் 3000 கோடி ரூபாய்க்கு பல தொழில் நிறுவனங்கள் வாங்கப்பட்டது தான் அந்த செய்தி.

வாங்கியவர்கள் அவர்கள். வாங்கப்பட்டது வைகுண்டராஜன் பெயரில். வாங்கப் பயன்படுத்தப்பட்டது தாதுமணல் பணம். அப்புறம் எப்படி அவர்கள் வைகுண்டராஜனை காப்பாற்ற முனைய மாட்டார்கள் ?

2013 ஆகஸ்ட்டில் சிறப்புக் குழுவை அமைத்த பிறகு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா ஒரு உத்தரவு போட்டார், “பிரச்சினைக்குள்ளான விவி மினரல்ஸ் குவாரிகளில் இருந்து தாது மணல் அள்ளக் கூடாது” என்று.

ஆனால் இன்றையத் தேதி வரை தாது மணல் அளவில்லாமல் வாரப்பட்டுக் கொண்டிருக்கிறது. 2013-ல் இருந்து இது வரை 7 லட்சம் டன் தாது மணல் அள்ளப்பட்டு தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்.

இது உண்மை என்பதற்கு ஒரு ஆதாரம். தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை என்ற கிராமத்தில் அத்துமீறி தாது மணல் அள்ளிக் கொண்டு சென்ற லாரிகளை ஊர் மக்கள் மறித்து போராட்டம் செய்தனர். போலீசார் சென்று பிரச்சினையை தீர்த்த செய்தி பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது.

அவை வைகுண்டராஜனுக்கு சொந்தமான நிறுவனத்து லாரிகள். இல்லை அவர்கள் லாரிகள். இதனால் தான் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசாங்கம் இதை மூடிமறைக்க ஆன முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த தாதுமணல் பணம் தான் தமிழகத்தை ஆட்டிப் படைக்கிறது. இதை தான் நான் சட்டமன்றத்தில் சொன்னேன். “இருட்டிலே தூங்கிக் கொண்டிருந்த திருவரங்கத்து ரங்கநாதன் கையைத் தொட்டுப் பார்த்தால் தாதுமணல்”

ஆனால் அதிமுகவினர் வாய் திறக்கவில்லை.

(தொடரும்)