பிரபலமான இடுகைகள்

திங்கள், 8 ஜூன், 2015

இயக்கி, இயங்கும் இளைஞர் !

நினைத்துப் பார்க்கிறேன், 92 வயதில் நாம் என்ன நிலையில் இருப்போம். முதலில் இருப்போமா என்பதே கேள்விக்குறி. நம்மை விடுங்கள், ஏகடியம் பேசுவோர் இருப்பார்களா ?

           

92 வயதில் பெரியார், அண்ணா நினைவிடங்கள் சென்று அஞ்சலி செலுத்த இயலுமா? அதுவும் காலைப் பொழுதில் தயாராகி செல்ல முடியுமா?

92 வயதில் சந்திக்க வரும் தொண்டர்களை, தோழர்களை, தலைவர்களை அயராமல் சந்திக்க.இயலுமா ? வருபவர்களை நினைவு வைத்து உரையாட முடியுமா?

92 வயதில் ஒன்றரை மணி நேரம் மேடையில் அமர்ந்து, வாழ்த்த வந்தவர்களின் வாழ்த்துகளை பெற்று, இன்முகம் மாறாமல் வந்த அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்த இயலுமா? அதற்கு பிறகும் பன்ச் டயலாக்காக பிறந்தநாள் செய்தி கொடுக்க முடியுமா?

92 வயதில் மாலை நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு, பொதுக்கூட்ட மேடைதனில் வந்தமர்ந்து, வாழ்த்துகளை பெற்றுக் கொண்டு, ஏற்புரை தான் ஆற்ற இயலுமா?

92 வயதில் இத்தனை நிகழ்வுகளில் கலந்து கொள்ள தரை வழிப் பயணமாய் 50 கி.மீ கார் பயணம் தான் மேற்கொள்ள இயலுமா? அதிலும் இடையிடையே நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியுமா ?

92 வயதில் காலை முதல் மாலை வரை நிகழ்ச்சிகள் முடித்துக் கொண்டு, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அரை மணி நேரம் உரையாற்ற முடியுமா ? அதில் பழைய நிகழ்வுகளையும் நிகழ்கால அரசியலையும் ஒருங்கே தான் பேச முடியுமா ?

92 வயது பிறந்தநாள் அன்று தொலைக்காட்சி தொடருக்கு வசனம் எழுத இயலுமா? அதிலும் தனது கொள்கைக்கு மாறான ஒரு நாயகன் வரலாற்றுக்கு, தன் நிலைப்பாட்டிலிருந்து வழுவாமல் வசனம் எழுத முடியுமா ?

92 வயதில் ஸ்மார்ட் போனை, லேப்டாப்பை பயன்படுத்த இயலுமா? அதில்லாமல் பேஸ்புக், ட்விட்டர் என்று இளைஞர் போல் மணிக்கொரு செய்தி வெளியிட முடியுமா ?

92 வயதில் தான் மட்டும் இயங்காமல், தான் வழி நடத்தும் கட்சியை இயக்கி, நிகழ்கால அரசியலையும் இயக்கி, "இயக்கத்தின்" அடையாளமாக திகழ இயலுமா ?

# 92 வயதிலும் அயராமல் இயங்கும் இளைஞரே வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக