பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஒரு பட்டாளத்தை அரசியலில் வழி நடத்துவதுதற்கு ....

மக்கள் மனதில் இடம் பிடிக்கிற பெரிய ஆளுமைகளாக உருவெடுப்பது சிரமம். அத்தகையவர்களை எதிர்த்து அரசியல் செய்வது கூடுதல் சிரமம். காரணம் அரசியல் அதிகாரங்களோடு ஆளுமைகள் ஆற்றிய பணியோடு எதிர்த்து அரசியல் செய்பவர்களை ஒப்பிட்டே பார்ப்பார்கள், இவர்கள் அதிகாரத்தையே சுவைத்திரா விட்டாலும்.

குடும்பத்தில் ஒருவர் அரசியலில் இருந்து, பின்னர் அரசியலுக்கும் வருபவரது நிலையும் சிரமம். அதிலும் முன்னர் வந்தவர் தந்தையாராக இருந்துவிட்டால் கூடுதல் சிரமம். காரணம் முன்னர் வந்தவரின் பல வருட அனுபவத்தோடு பின்னர் வந்தவரின் பணி ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்படும்.

இப்படியான கூடுதல் சிரமங்களை, ஆட்சி அதிகாரங்கள் இல்லாமல் கையாள்வது கடினம். அதனை சிறு வயதில் தாக்குப்பிடித்து நிலைத்து நிற்பது கடினம். அதிலும் நீண்ட நாட்கள் இத்தகைய போராட்டத்தின் ஊடாக அரசியல் செய்வது மிகக் கடினம்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அரசியல் ஒரு சொகுசு உலகம். சிலருக்கு அப்படி அமையலாம், ஆனால் அது மிக மிக சிலருக்கே. பலருக்கு இது அனல் களம் தான். தேர்தல் வெற்றி தோல்வி என்பது போட்டியிடுபவரை பொறுத்து மட்டும் அமைவதில்லை. அது பல சூழல்களை பொறுத்தே.

வெற்றி எல்லோருக்கும் சொந்தம். ஆனால் தோல்வி போட்டியிபவருக்கே அதிகம் சொந்தம். அவரையே பாதிக்கும். பொருளாதாரம், குடும்பம், சமூகம், தனி வாழ்க்கை, எதிர்காலம் என தோல்வி எல்லா வகையிலும் பாதிப்பு. அதிலும் அரசியலில் பல வெற்றி வாய்ப்பிழத்தல் என்பது கடுமையான பாதிப்பு.

இந்த கூடுதல் சிரமங்கள், மிகக் கடினங்கள், கடுமையான பாதிப்புகளை புறந்தள்ளி வாழ்க்கை நடத்துதல் அந்த மனிதரின் வெற்றி. அதிலும் உத்வேகம் குறையாமல், உற்சாகம் இழக்காமல், புத்துணர்ச்சி மாறாமல் வாழ்க்கை நடத்துதல் பெரு வெற்றி.

அதிலும் அந்த உற்சாகத்தையும், உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் உடன் இருப்பவர்களிடமும் விதைத்து ஒரு பட்டாளத்தை வழி நடத்துவது, அதிலும் அரசியலில் வழி நடத்துவதுதற்கு மிகுந்த மன உறுதி வேண்டும்.

அந்த மன உறுதியோடு என் சமகால அரசியலில் ஒடிக் கொண்டிருக்கும் நபர் புதுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் அண்ணன் பெரியண்ணன் அரசு தான்.

இந்த கூடுதல் சிரமங்கள், மிகக் கடினங்கள், கடுமையான பாதிப்புகள் அத்தனையும் உங்களுக்கான பயிற்சி களமே. உயர்வு காத்திருக்கிறது.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா !