பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
விஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...
-
கடந்த வருடம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் 20 மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர...
ஞாயிறு, 21 அக்டோபர், 2012
# " செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... "
கார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ...
ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம்.
இளையராஜாவின் இசை ராஜாங்கம். ராஜாவின் தேர்ந்தெடுத்தப் பாடல்கள். ராஜா காதில் இழைந்துக் கொண்டிருக்கிறார். அடுத்தப் பாடல்...
" சிறு பொன்மணி
அசையும்
அதில் தெறிக்கும்
புது இசையும்
இரு கண்மணி
பொன்னிமைகளில்
தாள லயம்
நிதமும் தொடரும்
கனவும் நினைவும்
இது மாறாது
ராகம் தாளம்
பாவம் போல
நானும் நீயும்
சேர வேண்டும்"
வரிவரியாக இல்லாமல், வார்த்தை வார்த்தையாக அமைக்கப்பட்ட இசைக்கட்டு.
ஜானகி காதுகளை ஊடுருவுகிறார்.
கங்கை அமரனின் வரிகள்,
ராஜா தொடர்கிறார்,...
" சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம் "
இளையராஜா காதலை குழைத்து பாடுகிறார்.
இசை இடைவெளி... புதுவெள்ளமாய் பாய்கிறது இசை.
காலத்தை கடந்து நிற்கும் இசை, காதை வருடுகிறது.
ஜானகி மெல்லிய மயக்கும் குரலில் , ராஜா காந்தக் குரலில்...
பாடல் வரிகளின் போது, இசை மிகாமல், வார்த்தைகள் தெளிவாக...
அமரனின் ரசனையான வரிகள்.
இளையராஜாவின் இசைக்கூடத்தின் நடுவே நாம் இருக்கின்ற உணர்வு. சுற்றிலும் இசைக்கலைஞர்கள் அமர்ந்து ராஜாவின் விரலசைவுக்கு இசைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
" கரை தேடுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் சதிராடுது உன் நினைவுகள் "
பாடல் முடிகிறது. ஆனால் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது....
மனம் நிறைகிறது, இசையில் மூழ்குகிறது....
மிகச் சரியாகத்தான் சொன்னார் கலைஞர், " இசைஞானி ".
# " செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... "
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதே போல இரவு நேரப் பயணங்களுக்கென ஒரு ராஜாவின் இசைத் தொகுப்பு வைத்திருக்கிறேன். அடுத்த முறை சந்திக்கும்போது தருகிறேன்.
பதிலளிநீக்குஅண்ணே, வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்திடுங்க. அது இருந்தால் பலரும் பின்னூட்டமிட மாட்டார்கள்.
பதிலளிநீக்குகடைசி பஞ்ச் சூப்பர்
பதிலளிநீக்குவணக்கம். இப்பத் தான் உங்க ப்ளாக்கைப் பார்க்கிறேன். ஆனா இந்தப் பதிவுக்கு நான் பாட்டுக்கு எதிர்ப் பாட்டுத்தான் பாடுவேன் )))
பதிலளிநீக்குசபாநாயகர் ஜெயக்குமாரை நீக்கியபோது பேஸ்புக்கில் ஒன்று எழுதினீர்களே ? மூன்று நாட்களுக்கு நினைத்து நினைத்து சிரித்தேன்...
பதிலளிநீக்கு