கடந்த வருடம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் 20 மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்கள் "வெளிச்சம்" தொண்டு நிறுவனத்தை அணுகினர். தேர்வு எழுத அனுமதி பெற்றுத் தரப்பட்டது.
இந்த ஆண்டு கோவை தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், அரசு ஒதுக்கீட்டீல் இடம் கிடைத்து, கட்டணம் கட்ட வழியில்லாத நிலையில், "வெளிச்சம்" நிறுவனத்தை நாடிச் சென்றனர். ஒரு சில நல்ல உள்ளங்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு, கல்லூரியில் செலுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தி

ல் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்த அப்பாவிப் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி விபச்சாரத் தொழிலில் தள்ளியவர்கள, காவல்துறை கவனத்திற்கு கொண்டு சென்று கைது செய்யவைத்தது "வெளிச்சம் அமைப்பு".
கடந்த பல ஆண்டுகளாக முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் போதோ, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலோ எழும் குரல் வெளிச்சம் குரலாக இருக்கும். முதல் தலைமுறை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அதிகாரிகளை, அரசியல்வாதிகளை தொடர்பு கொண்டு போராடி வரும் அமைப்பு "வெளிச்சம்".
இதில் அடுத்தக் கட்டமாக, முதல் தலைமுறை மாணவர்களின் உயர்கல்விக்காக ஒரு பொதுநல வழக்கும், பழங்குடியின மாணவர்களுக்கு உயர்கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கவேண்டுமெனவும் ஒரு பொதுநலவழக்கும் தாக்கல் செய்து, வழக்கறிஞர் வைக்காமல் வெளிச்சம் நிறுவனத்தின் தலைவர் சகோதரி ஷெரின் அவர்களே வாதாடி, அரசு இரண்டு வாரங்களுக்குள் பதில் தரவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையெல்லாம் படித்தவுடன், பணக்கார, வெளிநாட்டு உதவி பெறுகின்ற கார்ப்பொரேட் தொண்டு நிறுவனங்களை போல கற்பனை செய்துவிடாதீர்கள். ஷெரினுடன் பணியாற்றுபவர்கள் வெளிச்சம் நிறுவனத்தால் உதவி பெற்று கல்வி பயின்றவர்கள்,தற்போது பயிலும் மாணவர்கள்.
சில வேளை உணவுகளை துறந்துவிட்டு, நல்ல உள்ளம் படைத்தவர்களை அணுகி, ஏழை மாணவர்களின் நிலையை எடுத்துக்கூறி, சமயங்களில் அங்கு ஏற்படும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு, நாளைய செலவுக்கு பணம் இல்லாவிட்டாலும், கிடைத்தப் பணத்தை ஏதாவது ஒரு மாணவருக்கு செலுத்தி, அவர்களது கல்வியை உறுதி செய்வதே ஷெரின் அவர்களின் தினப்படி பணி.
இந்தப் பணிகள் தவிர்த்து, தற்கொலைக்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கு அறிவுரை கூறுவது, பதின் பருவத்தில் தடுமாறும் மாணவிகளை நெறிப்படுத்துவது என பல நற்பணிகளை தொடர்கிறார்.
மனமும் வாய்ப்பும் இருப்பவர்கள் இவர்கள் மூலமாக, கல்வி கண்ணை திறக்க உதவுங்கள் .
# வெளிச்சம் பரவட்டும் !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக