பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர். கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செய...
-
தலைவர் கலைஞர் அவர்களால் " சோழ மண்டல தளகர்த்தர் " என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...
திங்கள், 22 அக்டோபர், 2012
" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து "
சிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம்.
இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி என்று காது நிரம்பி வழிந்தது. ஒரு விளம்பரம், அடுத்த விளம்பரங்கள் முடிந்தால், திரும்ப இந்த விளம்பரம் தான்.
அப்பா திருட்டுத்தனமாக, மகளுக்கு பஜ்ஜி கொடுத்து விட்டு, "பஜ்ஜி சாப்பிடாதே பிம்பிள்ஸ் வரும்" என சொல்ல , அம்மா "பஜ்ஜி சாப்பிடு, நம்ம வீட்டுல பிம்பிள்ஸ்லாம் வராது " என்கிறார். .
சோப் விளம்பரமாம். நான் பஜ்ஜி விளம்பரம் என்றே நினைத்து விட்டேன். ஹமாம்னா ஆரோக்கியம். ஹமாம் சோப் போட்டுக் குளித்தால் பிம்பிள்ஸ் வராதாம்.
உடனே போட்டி விளம்பரம். சிறு குழந்தை கையை மூடிக்கொண்டு வர, அம்மா என்ன என்று கேட்க, குழந்தை " வெயில் " என்கிறது. வெயிலை சிறு பெட்டியில் அடைத்தால் பியர்ஸ் சோப் இருக்குமாம். முழு பரிசுத்தம் தருமாம்.
அடுத்த விளம்பரம். அதுவும் சோப் தான். உடல் நலம் சரியில்லாத சிறுவனுக்கு, நலம் கொடுப்பது லைப்பாய் சோப்பாம். எல்லாவற்றிற்கும் தீர்வு லைப்பாய் தான் என்கிறது.
சுட்டி டீவி, ஜாக்கிசான் சீரியலில் வரும், அங்கிள் போல , " அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து " , என்று அந்தக் குழந்தைகளை பார்த்து, உரக்க கத்த வேண்டும் என தோன்றுகிறது.
# சின்னக் குழந்தைகளை ஏமாத்தாதீங்கையா, சோப் விற்க ரொம்ப பொய் சொல்லாதீங்க....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நடக்கும் உண்மைகள்...
பதிலளிநீக்கு(http://abiappa.blogspot.in/2012/10/blog-post_24.html) மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... தொடர்கிறேன்...
நன்றி சார்...