பிரபலமான இடுகைகள்

2G லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
2G லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 நவம்பர், 2014

அண்ணன் ஜேட்லிஜி அண்ட் மோசடிஜிக்களின் புதிய பிரசங்கங்கள்

அண்ணன் ஜேட்லிஜியும், அண்ணன் மோடிஜியும் சி.ஏ.ஜி பத்தி புதுப்புது கண்டுபிடிப்பா அடிச்சு உடுறாங்க.....

                        

**************************************
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "சி.ஏ.ஜி தான் கண்டறிபவைகளை கொண்டு, தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காக பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்" என்று புதன்கிழமையன்று கேட்டுக் கொண்டார், இதே கோணத்தில் தான் காங்கிரஸ் 2G மற்றும் நிலக்கரி ஒதுக்கீட்டினால் தேசத்திற்கு நட்டம் என்று செய்திகள் வந்த போது ஏற்கனவே குரல் எழுப்பியது. – டைம்ஸ் ஆப் இந்தியா.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CCYQFjAC&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2FCAG-should-not-sensationalize-its-findings-Arun-Jaitley-says%2Farticleshow%2F44972857.cms&ei=nstTVI3gNIG9mgWskILgCg&usg=AFQjCNHiWnxjg_2-BxX4v50MWE0VCtQnQA&sig2=t75kTA0UmAS9R1Htu19nnw

****************************************

இன்னும் அவர் பேசியவைகளை பார்த்தால், இவர் ஏற்கனவே பேசுனதல்லாம் “கஜினி” திரைப்படத்தில் வர்றது போல் பச்சை குத்திவிடனுமோன்னு தோனுது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் இதே சி.ஏ.ஜி பரபரப்பாக 2ஜி குறித்து ஆய்வறிக்கையை “திருட்டுத் தனமாக” வெளியிட்ட போது, அதை கையில் வைத்துக் கொண்டு, பாஜக-வினர் பாராளுமன்றத்தை மாதக் கணக்கில் நடத்த விடாமல் முடக்கிப் போட்ட போது இதே அண்ணன் அருண் ஜேட்லியும் அங்க தான் இருந்தார்.

இவரு தான் இப்ப சி.ஏ.ஜி-க்கு அறிவுரை சொல்லி இருக்கார் என நினைக்காதீங்க. பெரியண்ணன் மோடி இன்னும் ஒரு படி மேல போய் சொன்னாரு,”எதிரிகளை தாக்குவதற்காக சி.ஏ.ஜி-யை அரசியல் ஆயுதமாக பயன் படுத்தக் கூடாது”.

இத எப்போ சொன்னாருன்னு கேப்பீங்க. அப்போ தான் அவரு நம்மை எல்லாம் "உய்விக்க தேவதூதரா அவதாரம்" எடுக்க “வைக்கப்பட்ட” நேரம். ஆமாங்க பிரதமர் ஆன நேரம். இத எங்க சொன்னாருன்னு கேக்குறீங்களா ? பிரதமரா ஆன உடனே பெரியண்ணனுக்கு குஜராத் சட்டமன்றத்துல பிரிவு உபச்சார விழா கொடுத்தாங்க. அங்க தான் மே21 அன்னைக்கு முழங்குனாரு.

அதுக்கு லிங்க்: https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=9&cad=rja&uact=8&ved=0CFEQFjAI&url=http%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fallaboutnarendramodi%2Fnarendra-modi-bids-farewell-to-gujarat-assembly%2Farticle1-1221447.aspx&ei=ANJTVM1658ebBfTcgaAD&usg=AFQjCNFo13BcP03VC_8lTmWYiVSKEpYZ9A&sig2=T2Bw_ppUCWg0SYX2Ge1vSw

***********************************************
தேர்தல் நேரத்துல 2ஜி, நிலக்கரி ஊழல்ன்னு சி.ஏ.ஜி அறிக்கையை காட்டி முழங்கி ஆட்சிய பிடிச்சவரு ஏன் இப்படி திடீர்னு யூ-டர்ன் அடிச்சி நோ-என்ட்ரில பூந்தாருன்னு சந்தேகம் வரும். ஜூலை மாசம் இதே சி.ஏ.ஜி “குஜராத் அரசு ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் அதிகபட்ச லாபம் பெறுவதற்கு தவறான வழியில் உதவியிருக்கிறது” அப்படின்னு குற்றம் சாட்டப் போவுதுன்னு தெரிஞ்சிருக்கு.

அதுக்கு லிங்க் :https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0CCUQFjAB&url=http%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Findia-others%2Fcag-raps-gujrat-govt-for-extending-undue-benefits-to-reliance-essar%2F&ei=ENhTVJnkOYHpmAX084GIBg&usg=AFQjCNE_0mVtPl5MSMkp9SEkRklGIAqiUQ&sig2=8mYh_rxkUnbNl0rFxcea0A

***********************************************
இது எப்புடி முன்னாடியே பெரியண்ணனுக்கு தெரிஞ்சதுன்னு கேக்கறீங்களா ? சி.ஏ.ஜி அலுவலகத்திலேருந்து ஏற்கனவே 2ஜி ரிப்போர்ட திருடி கொடுத்த குரூப், பெரியண்ணன் பிரதமர் ஆன பிறகு கொடுக்காம இருப்பாங்களா ?

இது தான் பெரியண்ணனுக்கு முதல்முறையான்னா, அதுவும் கிடையாது. ஏற்கனவே பெரியண்ணனின் அரசாங்கத்தால் 17,000 கோடி நட்டம்னு சி.ஏ.ஜி சொல்லி இருக்கு

அதோட லிங்க் ;https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB4QFjAA&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2FCAG-raps-Narendra-Modi-govt-for-Rs-17000-cr-losses%2Farticleshow%2F12476483.cms&ei=ENhTVJnkOYHpmAX084GIBg&usg=AFQjCNFfdgzwCLCmSeKhnMad1DWO8H1JeQ&sig2=5dVHpbh_5Dm_XQlt189FIA

***********************************
இப்ப சின்ன அண்ணன் அருண் ஜேட்லி சி.ஏ.ஜி-க்கு சொல்லி இருக்கற அறிவுரையா பார்த்தா, அடுத்தாப்ல ஏதோ அறிக்கை வரப் போவுதோன்னு சந்தேகமா இருக்கு. சரி, அது வரட்டும் பாத்துப்போம்.

இதே சி.ஏ.ஜி அறிக்கையை வச்சிகிட்டு தான 2ஜி-ல அந்தக் கூத்து அடிச்சீங்க. எங்க அண்ணன் ராசாவை விசாரணையிலேயே சிறையடைக்க வச்சீங்க. நீங்களே தீர்ப்பு கொடுத்தீங்க.

# அப்ப எங்களுக்கு வந்தது ரத்தம் இல்லியா ஜேட்லிஜி அண்ட் மோசடிஜி ?

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பெங்களூரு வழக்கும்.... தில்லி வழக்கும்....

அங்கும் ஒரு வழக்கு நடக்கிறது, இங்கும் ஒரு வழக்கு நடக்கிறது…

ஆனால் தாம் கண்ணை மூடிக் கொண்டதால், உலகம் இருண்டு போகும். அந்த இருட்டில், இது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும் எனபது பூனைகளின் நினைப்பு. 

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எப்படி, எத்தனை வருடமாக இழுத்தடிக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. வாய்தா வாங்குவதிலேயே கின்னஸ் சாதனை படைக்கும் கட்டத்தில் ஜெ.

2ஜி வழக்கில், தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2011 ஏப்ரல் 2-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை முழு ஒத்துழைப்பு கொடுத்து தன் மீதான வழக்கை நடத்தி வருகிறார் அண்ணன் ஆ,ராசா.

           

வழக்கை இழுத்தடிப்பதற்காக, சி.பி.ஐ தான் நேற்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குறிப்புரையையும், நீதிமன்ற உத்தரவையும் படித்தால் புரியும்.

நீதிமன்றக் குறிப்புரை :
கேட்ட கேள்வியையே வெவ்வேறு வகையில் கேட்டும், சுற்றி வளைத்து கேட்டும், ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என மூத்த அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

நீதிமன்ற உத்தரவு :
“ஏற்கனவே 17-07-2014 அன்று, மூத்த அரசு வழக்கறிஞர், ”இது பெரிய வழக்கு என்ற அடிப்படையில் குறுக்கு விசாரணைக்கு தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நாட்கள் வேண்டும்” என்று கோரியதின் அடிப்படையில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன.

ஆகவே, 18-07-2014 மற்றும் 19-07-2014 ஆகிய வேலைநாட்களில் வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, இன்று 21-07-2014 எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது மேலும் நாட்கள் கேட்கிறார்.

07-07-2014-ல் குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் முடிவை எட்டவில்லை. முடிவுத் தேதி(கட்-ஆப் டேட்) குறித்து குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் அதே முடிவுத் தேதி குறித்தே விசாரணை நீடிக்கிறது, பல நாட்களுக்குப் பிறகும்.

இதனடிப்படையில் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டியது. ஆனால் எனது விருப்பமின்மைக்கு இடையிலும், வழக்கு விசாரணை தாமதப்படாத வகையில் குறுக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்ற உத்தரவோடு, வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மூத்த அரசு வழக்கறிஞரின் வேண்டுதலுக்காக குறுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது”

வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கை இழுத்தடிப்பார்கள், ஜெயலலிதாவைப் போல. ஆனால் இங்கே அரசுத் தரப்பு இழுத்தடிக்கிறது. இதன் காரணமாக, மூத்த அரசு வழக்கறிஞரை இந்த அளவிற்கு கண்டித்திருக்கிறார் நீதிபதி,

அதே போல நேற்றைய விசாரணையில் பிரதமரின் ஒப்புதல் பேரிலேயே அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று அண்ணன் ஆ.ராசா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

தானே வாதாடி, இப்போது தானே சாட்சியமும் வழங்கி அரசுத் தரப்பை திணறடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஆ.ராசா.
ஆனால் இது எதுவும் உலகின் கண்களுக்கு தெரியக்கூடாதென கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளன, சில பத்திரிக்கைப் பூனைகள்.

# உதயசூரியனும் உதிக்கையிலே… !

வியாழன், 28 பிப்ரவரி, 2013

வாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....




நீதிமன்றம் பக்கம் தலை வைக்கமாட்டேன் என வாய்தா வாங்குவோருக்கு மத்தியில், நீதிமன்றத்தில் தினம் ஆஜாராகி வழக்கை சந்திப்பதோடு மாத்திரமல்லாமல், நாடாளுமன்றக் கூட்டு குழுவில் ஆஜராக தயார் என தானாக முன்வரும் அண்ணன் ஆ.ராசாவை போன்றோரும் இருக்கிறார்கள்.

இவரை குத்திக் கிழிக்க தான் சத்தியவான்கள் துடிப்பார்கள், வாய்தா ராணியை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்.

அண்ணன் ஆ.ராசா அவர்களது கடிதம்.***********

மதிப்பிற்குரிய பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!

1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆஜராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர்.

மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது.

அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா
( மொழி பெயர்ப்பு - அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்)

ஞாயிறு, 18 நவம்பர், 2012

2G ; இன்னும் என்ன குழப்பம் ?



செல்போன் ஆப்ரேட்டர்கள் இணைந்து சிண்டிகேட் அமைத்து ஏலம் இல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள், அதற்கு அரசே மறைமுக உதவி என கூக்குரலிடுகின்றனர்.

இதை தான்யா அன்றைக்கே அண்ணன் ஆ.ராசா சொன்னார். சிண்டிகேட்டை உடைப்பதற்கே புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கினேன் என்று சொன்னார்.

ஊரில் சாதாரண கருவேலமரத்தை ஏலம் விட்டால் கூட , குறைந்த விலைக்கு எடுக்க சிண்டிகேட் அமைப்பது நாட்டு வழக்கம்.

பழைய நிறுவனங்களின் கூட்டு களவானித்தனத்தை முறியடித்தார். அவர்களது கைகூலியே சி.ஏ.ஜி.

******************                     *******************

2G, 3G, 4G  என்ற குழப்பம்...

3G, 4G வந்து விட்டதால் தான் 2G ஏலத்தில் தேக்கம் என்ற செய்தி.

3G ,4G  மட்டுமல்ல அதன் அப்பன் வந்தாலும் 2G தான் அடிப்படை. 2G யே அலைபேசிக்கு அவசியமானது. மற்றவையெல்லாம் அடுத்தக் கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையானவை.

எனவே எந்த காலத்திற்கும் இந்த தொழில் நுட்பமே கோலோச்சும். இதனால் ஏலம் போகவில்லை என்பது அர்த்தமற்ற வாதம்.

**************************                *************************

மற்ற உரிமங்களும் ஏலம் போனால் நட்டம் ஏற்படாது...

122 உரிமத்தில் 22 உரிமமே ஏலம் போயுள்ளது. இதிலேயே 9,400 கோடி வருமானம் வந்துள்ளது, மீதி உரிமங்கள் ஏலம் போனால் கிட்டத்தட்ட 50,000 கோடி கிடைக்கும் என நிகழ்தகவு கணக்கு போடுகிறார்கள்.

எல்லாப் பகுதிக்கும் ஒரே அளவு ஏலம் போகாது. வாய்ப்பு உள்ளப் பகுதிக்கு ஏலம் போயுள்ளது. மற்றப் பகுதிகள் நிலவரம் அப்படி.

அடுத்து அண்ணன் ராசா அவர்கள் காலத்தில், வருவாய் பகிர்வு அடிப்படையில் வந்த வருமானம் 10,400 கோடி. இந்த 50,000 கோடி ஐந்து வருடத்தில் எட்டப்படும்.

அதற்கு பிறகும் வருமானம் தொடரும். அலைபேசி எண்ணிக்கை கூட கூட வருமானம் உயரும்.  

******************                       ****************************

புரிந்தே குழப்புகிற கூட்டத்திற்கு இது அத்தனையும் தெரியும்.

# சிறைப்பட்ட காலத்திற்கு பதில் சொல்லப் போகிறவன் எவன் ?

சனி, 17 நவம்பர், 2012

2G : வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே....

2010 ஆம் ஆண்டு... சிஏஜி அறிக்கை வெளியாகியிருந்த நேரம். இணையத்தில் பொழுதுபோக்கிற்கு உலவுகிற முகமற்ற விமர்சகர்கள் முதல் இந்தியாவின் உயர்ந்த அமைப்பு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய உச்ச நீதிமன்றம் வரை வானத்திற்கும் பூமிக்கும் குதித்த குதி....

அந்த அறிக்கை முறைப்படி வெளியிடப்பட்டதா ? திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டது ஏன் ? அதில் சொல்லப்பட்டிருக்கிறக் கண
க்கிற்கு அடிப்படை என்ன ? சொல்லப்பட்ட அளவிற்கு விலை வைத்தால் மக்கள் தலையில் சுமை ஏறாதா ?

இது போன்ற கேள்விகளை சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. ஊடகங்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மட்டுமே குறி. அதிகாரிகளுக்கும், நீதியாளர்களுக்கும் ஊடகங்களை கண்டு பயம். குற்றம் சுமத்திய சில உத்தமர்களுக்கு ஊடக வெளிச்ச வெறி.

அன்று பதில் சொன்ன எங்களை போன்றவர்களை கண்டால் ஏளனம், அம்மணமாக அலைகிறவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல.

அம்மணக் கும்பல் ஆவலாக எதிபார்த்த 2G ஏலம் வந்தது. பல பகுதிகளுக்கு ஏலம் எடுக்கவே யாரும் துணியவில்லை.

ஏற்கனவே இவர்கள் சொன்ன குற்றம், அண்ணன் ஆ.ராசா காலத்தில் வசூலான தொகை 10,400 கோடி. இழப்பு 1,76,000 கோடி என்றார்கள்.

இப்போது 9,400 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இது ஒரு முறை மட்டுமே வசூலாகிறத் தொகை.

கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி : அண்ணன் ராசா காலத்தில் வந்த தொகை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அரசுக்கு வந்து கொண்டே இருக்கும் வருவாய், வருமானப் பகிர்வு என்ற அடிப்படையில்.

இப்போது சொல்லுங்கள்... ஒரு முறை வருகிற வருமானம் 9400 கோடி லாபமா ? ஆண்டு தோறும் வரக்கூடிய 10,400 கோடியா ? ( இணைப்பு அதிகரிக்க, அதிகரிக்க இந்தத் தொகையும் அதிகரிக்கும் )

ஏலத்திற்கு பிறகு நாடெங்கும் சி.ஏ.ஜி வினோத் ராய் இதற்கு பதிலளிக்க வேண்டுமென்ற குரல் வலுக்க ஆரம்பித்துவிட்ட்து. அம்மணக் குமபலை காணவில்லை.

ஓய்வு பெற்ற சி.ஏ.ஜி டி.என்.சதுர்வேதி சொல்கிறார், “ அந்த அறிக்கை, அந்த நேரத்தில் பரிசோதித்து அளித்த அறிக்கை. அதற்கு இந்த நேரத்தில் , சி.ஏ.ஜி பொறுப்பேற்க முடியாது “. அடப் பாவீகளா...

நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள், குற்றவாளி என்பீர்கள், வருடக் கணக்கில் சிறையில் அடைப்பீர்கள், ஆனால் ஆதாரம் கேட்டால் தடுமாறுவீர்கள். பொறுப்பேற்க அவசியம் இல்லை என்பீர்கள். இது என்ன மனுநீதியா ? உனக்கு ஓர் சட்டம், எங்களுக்கு ஓர் சட்டமா ?

# இது சதுர்வேதி குரல் அல்ல, சதுர்வேதத்தின் குரல், சதிவேதத்தின் குரல். உணர்வீர்களா PG- க்களே ?





2G - Second generation ; PG - பிரபல(மாக ஆசைப்படும்) generation