சாண்டிப் புயல் அமெரிக்காவை
நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம் அதிபர் தேர்தலுக்கான உச்சக் கட்ட
பிரச்சாரம். தற்போதைய அதிபர் ஒபாமா உச்சக் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில்...
தனது தேர்தல் பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு,
சாண்டி புயலை எதிர் கொள்ள அமெரிக்க
மக்களை தயார் செய்யும் பணியில் இறங்குகிறார் ஒபாமா. புயல் முடிந்தப் பின்னும்
மீட்புப் பணிகளில் தீவிரம் காட்டுகிறார்.
மீட்புப் பணிகளை முடித்து , நேற்று சனிக்கிழமை தான் பிரச்சாரத்திற்கு
திரும்பியுள்ளார்....
******** ****** *****
நீலம் புயல் சென்னையை நெருங்குகிறது...
சென்னையில் சட்டமன்றத்தில் தமிழக முதல்வருக்கு லட்சார்ச்சனை.
அம்மா மனம் மகிழ்ந்து, உளம் நெகிழ்ந்து, முகம் மலர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். மின் வெட்டுக்கு
கடந்த திமுக அரசே காரணம் என ருத்ர தாண்டவம் ஆடுகிறார்.
புயலைத் தொடர்ந்து புதியதலைமுறை ஓடி கொண்டிருக்கிறது. புரட்சித்
தலைவி ஓய்வெடுக்க சென்று விடுகிறார்.
புயல் அடித்து ஓய்ந்து, இரண்டு நாள் கழித்து, புரட்சியின் நிதி ஓ.பி.எஸ் “ உரிய நேரத்தில், உரிய தொகை நிவாரணத்திற்கு ஒதுக்கப்படும்” என மின்னல் வேகத்தில் அறிவித்திருக்கிறார்.
**********
************************
2011
டிசம்பர், தானே புயல்....
கடலூர்
மாவட்டமே இயற்கையின் கோரத் தாண்டவத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது.
முதல்வர் ஜெயலலிதா, சேதத்தை பார்வையிட செல்கிறார். ஹெலிகாப்டரில், நேரடியாக கடலூர்
செல்கிறார். 5 நிமிடம் மட்டுமே நிவாரணம் வழங்கிவிட்டு கிளம்புகிறார்.
தலைவர்
கலைஞர் கார் மூலம், சென்னையிலிருந்து திருவாரூர் வரை, கடலூர் மாவட்டம் வழியாக
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
கடலூர்
மக்கள் ஒன்பது தொகுதிகளையும் அம்மா கூட்டணிக்கு வாரி வழங்கி ஆறு மாதங்களே
ஆகியிருந்த நேரம்.
******** ******************
கடந்த திமுக ஆட்சி...
கடும் மழையால், வெள்ளம் பெருக்கெடுத்து, செங்குன்றம் புழல் ஏரி நிரம்புகிறது. கரையின் ஒரு இடத்தில்
நீர் கசிவு ஏற்பட்டு, உடைப்பு ஏற்படும் அபாயம். நள்ளிரவு நேரம் ,
முதல்வர் இல்லத்திற்கு தகவல் வருகிறது. முதல்வருக்கு தெரிவிக்கப் படுகிறது.
பொதுப்பணி துறையின் அமைச்சர் துரைமுருகனின் மாமனார் இறந்து
துக்க நிகழ்ச்சியில் இருப்பதை அறிந்து, அவரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு முதலவர் தலைமைச் செயலகம்
நோக்கி விரைகிறார். அதிகாலை 2.30 மணி.
அதிகாரிகளுடன் ஆலோசித்துவிட்டு
புழல் ஏரிக்கு செல்கிறார். மணி 4.00. முதல்வர் வருகையை அறிந்த அதிகாரிகள் அங்கே
குவிகின்றனர். உடைப்பை அடைக்கும் பணி தீவிரப் படுத்தப் படுகிறது.
அந்த
நேரத்தில் சீர் செய்யப் பட்டிருக்காவிட்டால், சென்னையில் பெருத்த நாசம்
ஏற்பட்டிருக்கும். சென்னை காப்பற்றப்பட்டது. உடைப்பு முழுவதும் அடைத்து முடித்த பிறகு, காலை தான் வீடு
திரும்புகிறார் கலைஞர்.
# நீங்கள் தான் நீதிபதி. நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்....
பத்திரிக்கைகளில் கூட இந்த செய்தி படித்திராத ஞாபகம். மக்கள் பணியுடன் எழுத்துப் பணியா? நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதன்னலம் கருதாது பொது நலம் கருதியவர் தலைவர்
பதிலளிநீக்குதன்னலமே பொதுநலம் என்று கருதும் ஜெயா
மக்கள் பணியே மகேசன் பணி என்று கருதியவர் தலைவர்
மக்களை " மாக்கள் " என்றெண்ணி மமதை கொள்ளும் ஜெயா
ஆளுமை திறன் படைத்தவர் தலைவர்
ஆட்டத் தெறமை கொண்டவர் ஜெயா
தமிழகத்தின் வரம் : தலைவர்
தமிழகத்தின் சாபம் : ஜெயா
ஏழைகளின் கஷ்ட.நஷ்டங்களை நன்கு புரிந்தவர் திரு.கருணாநிதி அவர்கள்..ஜெயலலிதா மாடி வீட்டில் வாழ்ந்தவர்.அவருக்கு ஏழை மக்களின் துயரங்கள் தெரியாது.திரு.கருணாநிதி அவர்கள் நிர்வாக திறமை உடையவர்.ஜெயலலிதா வெற்று பேச்சு மட்டும் பேசுவார்.செயலில் ஒன்றும் இல்லை.நாம்தான் ஏமாந்து விட்டோம்..ஜந்து வருடம் பொறுத்துத்தான் இருக்க வேண்டும்.அதைவிட்டால் நமக்கு வேறு கதி இல்லை.
பதிலளிநீக்குபுயல் என்று தீருமோ....(அரசியலும்)
பதிலளிநீக்குமிக அருமையான எழுத்து நடை. சிறந்த கருத்துச் செறிவு. அரசியல் ஞானம் இல்லாத சராசரி இளைஞனுக்கும், அடி மனதைத் தொடும் படியான ஒப்புமை.......
பதிலளிநீக்குஇது தான் நம் கழகம் வளர இப்போதைய தேவை. வாழ்த்துக்கள் )))