பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சட்ட மன்றம் - நாளைய அமைச்சர்கள் - ஓர் கண்ணோட்டம் !


தலைவர் கலைஞர் அவர்களின் செயற்குழு தீர்மானத்தின் நிர்பந்தம் காரணமாக முல்லை பெரியார் பிரச்சினையில், 2011 டிசம்பரில், சட்டமன்றம் கூட்டப்பட்டது உங்களுக்கு தெரிந்த செய்தி. 
சட்டமன்றத்தில் ஜெ-வால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அனைத்துக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டது, தளபதி அவர்களின் உரை அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது பத்திரிக்கை வாயிலாக வெளி வந்த செய்தி.
தளபதி அவர்களின் உரையை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் , சிறு சலசலப்பும் இல்லாமல் கூர்ந்து கவனித்தது பத்திரிக்கைகளில் வராத , நாங்கள் நேரடியாக கண்ட காட்சி.
கட்டுரையின் செய்தி அதுவல்ல.....
கம்யூனிஸ்டுகள், த.மு.முக வரை விவாதம் சரியாக போனது.
சரத்குமார் தொடங்கி தனியரசு, கதிரவன், தமிழரசன் போன்ற இன்னும் "மிக" ஆதரவு கட்சி   ச.ம.உ-க்களின் --------சத்தம் தாங்காமல் கொட்டாவி வர ஆரம்பித்தது.
அப்போது எதிர் புற கடைசி வரிசை  கண்ணில் பட்டது. ஒரு நபர் நெருக்கடிக்கு இடையில் குறுகி உட்கார்ந்திருந்தார். அவர் இசக்கி சுப்பையா... முன்னாள் சட்ட அமைச்சர். ஏன் பதவி போனது என்று தெரியாமல் இன்னும் சஸ்பென்ஸ்.
நம்ம பக்கத்து மாவட்டத்துக் காரர் பரஞ்ஜோதி எங்கே என்று பார்த்தேன்.  நாலாவது வரிசை...
அப்புறம் என்ன ஆரம்பித்திருந்தேன், எண்ண ஆரம்பித்தேன், எத்தனை முன்னாள் அமைச்சர்கள்.
 நிகழ்கால முன்னாள் அமைச்சர்கள் மட்டும் 9 பேர், இதில் சிலரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, இரண்டாம் முறை எம்.எல்.ஏவாக இருந்தும் . மா.கம்யு -வின்  டெல்லிபாபு-வின் உதவியை நாடினேன், அவரும் இரண்டாம் முறை .
அப்படியும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் பெயர் , எங்கள் வரிசையில் இருந்த யாருக்கும் தெரியவில்லை.
மீண்டும் விட்ட இடத்தில் கணக்கை ஆரம்பித்திருந்தேன்.
முன்னாள்- முன்னாள் அமைச்சர்கள் - 9 பேர், பொள்ளாச்சி ஜெயராமனில் ஆரம்பித்து....
மொத்த முன்னாள் அமைச்சர்கள் - 18 பேர்.
தற்போதைய அமைச்சர்கள் - 33 பேர். 
சபாநாயகர், துணை, கொரடா - 3 பேர்.
எனவே மிச்சம்  'வருங்கால அமைச்சர்கள்'  91 பேர் மிடுக்காக அமர்ந்திருந்தனர். 
அம்மா மனசு வைங்கம்ம்மா......
மியுசிகல் சேர்... 
மியூசிக் ஸ்டார்ட்ஸ்.....
ரபப்ப ப, ரபப்ப ப, ரபப்பரபப்ப......

1 கருத்து:

  1. வணக்கம். நீங்கள் இணையத்தில் எழுத ஆரம்பித்திருப்பது மகிழ்வளிக்கிறது. கழகத்தினர் ஆரம்பத்திலிருந்து எந்த மீடியாவையும் விட்டுவைத்ததில்லை. குறிப்பாக பத்திரிகைத்துறையையைம் திரைத்துறையையும் தொலைக்காட்சித் துறையையும் எந்த அளவு பயன்படுத்தி வெற்றிபெற்றிருக்கிறீர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. இந்த நிலையில் சமகாலப் புரட்சியான இணையத்தில் உங்களின் பங்கு மற்றவற்றை ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை என்பதே என்னுடைய கருத்து. அதனைப் போக்கும்விதமாக முன்வரிசையில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் இங்கே செயல்பட ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. இனிமேல் தங்கள் தளத்துக்கு அடிக்கடி வருவேன். என்னுடைய வலைத்தளம் படித்திருக்கிறீர்களா? வாருங்கள்.

    பதிலளிநீக்கு