பிரபலமான இடுகைகள்

ஆ.ராசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆ.ராசா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு; மடைமாற்றம்

ஜல்லிக்கட்டு எதிர்ப்பை மடைமாற்றும் முயற்சியில் இந்துத்துவா கம்பெனி இறங்கியுள்ளது.

ஜல்லிக்கட்டு பிரச்சினையில் தமிழகம் கொதி நிலைக்கு வந்துள்ள சூழலில், அலங்காநல்லூரில் போராட்டம் வலுபெறும் நிலையில் peta-வுக்கு அனுமதி கொடுத்தது யார் என்ற பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர் ஆர்.எஸ்.எஸ் வகையறா. இதில் உள் அரசியலில் ஈடுபடும் சில தமிழ்நாட்டு கட்சிகள் வேறு.

இவர்களின் குற்றச்சாட்டு, peta-வுக்கு அனுமதி கொடுத்தவர் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா என்பது. அவர் வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சராக இருந்த போது என்பது அவர்கள் வாதம்.

1. Peta என்பது ஒரு லாப நோக்கில்லா தொண்டு நிறுவனம் என சொல்லிக் கொள்பவர்கள். 2000-ல் இந்த அமைப்பு இந்தியாவில் துவங்கப்பட்டது. (அப்போது மத்தியில் பா.ஜ.க அரசு)

2. அப்படிப்பட்ட தொண்டு நிறுவனம் அங்கீகாரம் பெறுவதற்கு வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகத்திற்கு செல்ல தேவை இல்லை. அதற்கு வேறு அமைச்சகங்களுக்கு தான் செல்ல வேண்டும். (Peta இயங்குவதற்கான அனுமதியை வனத்துறை அமைச்சகத்திடம் பெற வேண்டிய அவசியம் இல்லை.)

3. அப்படியே Peta, விலங்குகள் பாதுகாப்பிற்கு வனம் மற்றும் சுற்றுசூழல் துறையிடம் ஒத்துழைக்கிறோம் என்று அனுமதி கேட்டிருந்தாலும், அது அதிகாரிகள் மட்டத்தில் முடிந்து விடும். எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரிடம் செல்லத் தேவை இல்லை.

4. 2008-ல் ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்ற போது, ஆ.ராசா தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆகிவிட்டார். ( அப்போது தடையை பெற்றவர் பா.ஜ.கவின் மேனகா காந்தி)

5. 2011 ஜூலையில் தான் காளை காட்சிப் பொருளாக தடை விதிக்கப்பட்டது, நீதிமன்ற உத்தரவுப்படி. அப்போது ஆ.ராசா அமைச்சரே அல்ல. (வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972படி, வன விலங்கு பாதுகாப்பு வாரியம், காட்சிப் பொருளாக வைக்கக் கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தது 2011.)

ஜல்லிக்கட்டு தடை நீக்கப்படும், இந்த ஆண்டு 'கண்டிப்பாக' நடத்தப்படும் என கதை விட்ட பொன்.ராதாகிருஷ்ணன் சிம்பிளா மன்னிப்பு கேட்டுட்டு, பிரச்சினைய திசை திருப்புறீங்க.

இப்போதும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று வலியுறுத்துபவர்கள் பா.ஜ.கவின் முண்ணனி தலைவர்களான மேனகா காந்தியும், சுப்ரமணியசுவாமியும் தான்.

Peta அமைப்பில் இருப்பவர்கள்  ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள்.

வாதத்திற்கு உங்கள் கருத்தை எடுத்துக் கொண்டாலும், Peta வந்தது 2000, Peta ஜல்லிக்கட்டு எதிர்ப்புக்காக நீதிமன்றம் சென்றது 2011, இந்த காலக்கட்ட நடவடிக்கைகளுக்கு ஆ.ராசா எந்த விதத்தில் பொறுப்பாவார் ?

இவ்வளவு சிக்கலையும் உங்கள் பா.ஜ.க பக்கம் வைத்துக் கொண்டு, பிரச்சினையை திசைதிருப்பி தப்பிக்க நினைக்கிறீர்கள்.

# ஜல்லிக்கட்டு, உன்னால முடியுமா இல்லையா? அதச் சொல்லு !

#jallikattu

புதன், 28 அக்டோபர், 2015

ஊரை எழுப்பிய பாடல்

அதிகாலையில் அந்தப் பேருந்து வருகை தான் ஊரை விழிக்க வைக்கும். ஆமாம், அந்தப் பேருந்து வந்தவுடன் டீக்கடையில் ஒலிப் பெருக்கி உயிர் பெறும். அந்த ஒலிப்பெருக்கி ஊரை எழுப்பும்.

வழக்கமாக டீக்கடைகளில் சாமிப் பாட்டுகள் தான் ஒலிக்கும். அதுவும் சமயத்திற்கேற்ப விநாயகர் பாடல்கள், முருகன் பாடல்கள், அய்யப்பன் பாடல்கள், அம்மன் பாடல்கள் என இருக்கும்.

ஆனால் இந்த டீக்கடை வித்தியாசம். அங்கு காலையில் முதலில் ஒலிக்கும் பாடல்,"அவர் தாம் பெரியார்". திராவிடர் கழகத்தின் கொள்கை விளக்கப் பாடல்களே அந்த டீக்கடையில் ஒலிக்கும். ஊரை விழிக்க வைக்கும்.

அப்படி, அந்தப் பாடல் ஊரை மட்டும் விழிக்க வைக்கவில்லை. பக்கத்திலே ஒரு பள்ளி உண்டு. அது அரசுப் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியின் மாணவர்கள் தங்கிப் படிக்க ஒரு அரசு மாணவர் விடுதி உண்டு.

சுற்றுவட்டாரத்தில் பத்துக் கிலோமீட்டர் அளவுக்கு வேறு உயர்நிலைப் பள்ளிகள் கிடையாது. அதனால் சுற்றிலும் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அது தான் கதி.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள். அதில் நூறு பேர் அந்த மாணவர் விடுதியில் தங்கிப் படித்தனர். அவர்களில் சிலர் தான் அதிகாலையில் விழிப்பர். அவர்களில் அந்த மாணவனும் உண்டு.

மற்ற மாணவர்கள் எழுந்து மற்ற வேலைகளை கவனிக்க, இந்த மாணவனுக்கு மாத்திரம் காலைப் பணிகளை துவங்க அந்தப் பாடலை கேட்க வேண்டும். அந்தப் பாடல் தான் அவருக்கு சுப்ரபாதமாகி விட்டது.

இதில் ஒரு வேடிக்கை, அந்த மாணவன் வீட்டில் யாரும் அந்தப் பாடலை காது கொடுத்தும் கேட்க மாட்டார்கள். காரணம், அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அத்தனை ஆத்திகமானவர்கள். கடவுளை கும்பிடாமல் எந்த வேலையும் துவங்காது.

இந்த மாணவனின் பாடல் ஆர்வம் அத்தோடு நிற்கவில்லை. மெல்ல மெல்ல அந்தப் பாடலின் நாயகர் 'பெரியார்' மீதான ஆர்வம் ஆனது. சுற்றிலும் சூழ்ந்த ஆத்திக ஈரத்தைத் தாண்டி, பகுத்தறிவு நெருப்பு கொழுந்து விட்டு எரிந்தது.

அந்த ஊர் பாடாலூர். அந்த  மாணவர், பெரியாரின் மாணவர் ஆனார். இன்று பெரியாரின் கொள்கையை ஓங்கி முழங்குபவராக இருக்கிறார்.

அன்றைய மாணவர் தான் இன்றைய திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கைபரப்பு செயலாளர். அண்ணன் ஆ.ராசாவின் பிறந்தநாள் 26.10.2015.

# கொள்கை முழக்கமே ஓங்கி ஒலித்திடுக !

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

சின்சியர் சி.பி.அய்

"சார், இந்த பொம்மை எதுல செஞ்சது?"

"வாங்கும் போது, மண்ணுல சுட்டு செஞ்சதா தான் சொன்னாங்க சார்"

"மார்பிள்ல செஞ்ச மாதிரி இருக்குது"

"எடுத்துக்கிட்டு போய் செக் பண்ணிடுங்க சார்"

***********************

"இந்த குத்துவிளக்கு தங்கத்துல செஞ்சதா?"

"சார், குத்துவிளக்கு தங்கத்துல செய்வாங்களா?. எடுத்துக்கிட்டு போய் பாருங்க"

***********************

"சார், இந்த மூக்குத்தி ஒரு பவுன் இருக்குமா?"

"மூக்குத்தி ஒரு கிராம்ல தான் போடுவாங்க வழக்கமா. அதிகம் போனா ரெண்டு கிராம். அதுக்கு மேல போட்டா மூக்கு தாங்காது சார்"

************************

இவை அண்ணன் ஆ.ராசா அவர்களின் சொந்த கிராமமான வேலூர் கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில் சி.பி.அய் ரெய்ட்டின் போது நிகழ்ந்த உரையாடல். சி.பி.அய் அதிகாரிக்கும் ராசா அவர்களின் அண்ணன் கலியபெருமாள் அவர்களுக்கும் நடந்த உரையாடல்.

அந்த வீடு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக இருக்கும். அண்ணன் ராசா அவர்களின் தாத்தா இலங்கைக்கு தோட்ட தொழிலாளியாக சென்றவர். இவரது தந்தை அங்கு உழைத்து முன்னேறி, துணிக்கடை நடத்தும் அளவுக்கு உயர்ந்தவர்.

இலங்கையில் ஈட்டிய பொருளைக் கொண்டு, வேலூரில் விவசாய நிலங்கள் வாங்கினார். அப்போது கட்டிய வீடு தான் இது. அந்த காலத்தில் 'மெட்ராஸ் டெரஸ்' எனப்படும் மாடி வீடாகக் கட்டப்பட்டது. ஊரில் அது தான் அப்போது மெத்தை வீடு. இது அவர்கள்  பொருளாதாரத்தில் அப்போதே எந்த அளவிற்கு முன்னேறி இருந்தார்கள் என்பதை உணர்த்தும்.

அந்த வீட்டில் இருந்த மின்விசிறி, மின்விளக்கு வரை சின்சியராகக் கணக்கெடுத்திருக்கிறார்கள் சி.பி.அய்.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, கல்வியிலும் முன்னேறிய குடும்பம். பெரிய அக்கா விஜயா அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் படிப்பு முடித்து, ஆசிரியராக பணியாற்றியவர். பெரிய அண்ணன் ராமச்சந்திரன் அய்.எப்.எஸ் தேர்வில் வென்று வனத்துறையில் பணியாற்றியவர். சுற்றுசூழல் துறையில் பி.எச்டி முடித்து , குளோபல் வார்மிங் குறித்த ஆய்வாளர்களில் உலக அளவில் குறிப்பிடத் தக்கவர்.

சகோதர, சகோதரிகள் அத்தனை பேரும் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள். அண்ணன் ராசா அவர்களும் பி.எஸ்.சி, எம்.எல் முடித்து, பெரம்பலூரில் சிறந்த வழக்கறிஞராக பெயர் எடுத்தவர். இவர்கள் வீடுகளில் தான்  ரெய்டு செய்யப்பட்டு, கணக்கிடப்பட்டுள்ளது.

இவை அத்தனையும் ஏற்கனவே சி.பி.அய் தலைமையகத்தாலேயே கணக்கிடப்பட்டு , சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு மீறிய சொத்து இல்லை என நீதிமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அண்ணன் ராசா அவர்களின் இல்லத்தில் சோதனை செய்து ஏகப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக செய்தி பரப்பப்பட்டது. அவை அத்தனையும் ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரணைக்கு தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள்.

இதில் கொடுமை என்ன என்றால் அமலாக்கத்துறையும் சி.பி.அய்யும் இணைந்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்த அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு, முடிவுக்கு வந்த ஆவணங்கள் தான் இப்போது இவர்களுக்கு புதிய ஆவணங்களாம்.

இதில் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் மற்றும் இன்னும் சில நண்பர்களின் சொத்துக்களும் அடங்கும். விசாரணைக்கு வரும் போது தான் இந்த வழக்கின் அவசர கோல புனைவின் அலங்கோலம் வெளியில் வரும்.

*********************

மீண்டும் பெரம்பலூர்.

"இது என்ன பத்திரம் சார்?"
"அரசு மருத்துவக்கல்லூரி கட்ட, அரசு இடம் இல்லாததால் எங்களது 'ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை ' மூலம் இடம் அரசுக்கு இலவசமாக வழங்கியதின் நகல்"
"அரசாங்கம் வந்து உங்கள இடம் கேட்டுதா? உங்களுக்கு ஏன் இந்த வேலை?"

ரெய்டுக்கும் இந்த கேள்விக்கும் என்ன தொடர்பு?. இது யாருடைய வாய்ஸ் ஆக இருக்கும் என்பதைக் கூடவா  யோசிக்க முடியாது.

இறுதியாக டாப் நியூஸ்.

ஒரு மிக முக்கிய ஆவணம் கைப்பற்றிக் கொண்டு செல்லப் பட்டுள்ளது.

1996ல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன அண்ணன் ஆ.ராசா, 1999ல் அமைச்சராகி, 2003ல் தொலைத்தொடர்பு துறை அமைச்சராகி , 2G ஏலம் மூலம் பணம் ஈட்டி, ஒரு இடத்தை வாங்கி, யாருக்கும் தெரியாமல் இருக்க தன் பாட்டி "உண்ணாமை" பெயரில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதை எப்படியோ கண்டுபிடித்து ஆவணத்தை கைப்பற்றி விட்டார்கள்.

பதிவு செய்த ஆண்டு தான்  கொஞ்சம் அட்வான்ஸ். ஆமாம், 1935.

# வாட் இஸ் திஸ் ஆப்பிசர்ஸ் ?

சனி, 1 நவம்பர், 2014

அண்ணன் ஜேட்லிஜி அண்ட் மோசடிஜிக்களின் புதிய பிரசங்கங்கள்

அண்ணன் ஜேட்லிஜியும், அண்ணன் மோடிஜியும் சி.ஏ.ஜி பத்தி புதுப்புது கண்டுபிடிப்பா அடிச்சு உடுறாங்க.....

                        

**************************************
நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, "சி.ஏ.ஜி தான் கண்டறிபவைகளை கொண்டு, தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காக பரபரப்பை ஏற்படுத்த வேண்டாம்" என்று புதன்கிழமையன்று கேட்டுக் கொண்டார், இதே கோணத்தில் தான் காங்கிரஸ் 2G மற்றும் நிலக்கரி ஒதுக்கீட்டினால் தேசத்திற்கு நட்டம் என்று செய்திகள் வந்த போது ஏற்கனவே குரல் எழுப்பியது. – டைம்ஸ் ஆப் இந்தியா.

https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0CCYQFjAC&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2FCAG-should-not-sensationalize-its-findings-Arun-Jaitley-says%2Farticleshow%2F44972857.cms&ei=nstTVI3gNIG9mgWskILgCg&usg=AFQjCNHiWnxjg_2-BxX4v50MWE0VCtQnQA&sig2=t75kTA0UmAS9R1Htu19nnw

****************************************

இன்னும் அவர் பேசியவைகளை பார்த்தால், இவர் ஏற்கனவே பேசுனதல்லாம் “கஜினி” திரைப்படத்தில் வர்றது போல் பச்சை குத்திவிடனுமோன்னு தோனுது.

கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசு காலத்தில் இதே சி.ஏ.ஜி பரபரப்பாக 2ஜி குறித்து ஆய்வறிக்கையை “திருட்டுத் தனமாக” வெளியிட்ட போது, அதை கையில் வைத்துக் கொண்டு, பாஜக-வினர் பாராளுமன்றத்தை மாதக் கணக்கில் நடத்த விடாமல் முடக்கிப் போட்ட போது இதே அண்ணன் அருண் ஜேட்லியும் அங்க தான் இருந்தார்.

இவரு தான் இப்ப சி.ஏ.ஜி-க்கு அறிவுரை சொல்லி இருக்கார் என நினைக்காதீங்க. பெரியண்ணன் மோடி இன்னும் ஒரு படி மேல போய் சொன்னாரு,”எதிரிகளை தாக்குவதற்காக சி.ஏ.ஜி-யை அரசியல் ஆயுதமாக பயன் படுத்தக் கூடாது”.

இத எப்போ சொன்னாருன்னு கேப்பீங்க. அப்போ தான் அவரு நம்மை எல்லாம் "உய்விக்க தேவதூதரா அவதாரம்" எடுக்க “வைக்கப்பட்ட” நேரம். ஆமாங்க பிரதமர் ஆன நேரம். இத எங்க சொன்னாருன்னு கேக்குறீங்களா ? பிரதமரா ஆன உடனே பெரியண்ணனுக்கு குஜராத் சட்டமன்றத்துல பிரிவு உபச்சார விழா கொடுத்தாங்க. அங்க தான் மே21 அன்னைக்கு முழங்குனாரு.

அதுக்கு லிங்க்: https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=9&cad=rja&uact=8&ved=0CFEQFjAI&url=http%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fallaboutnarendramodi%2Fnarendra-modi-bids-farewell-to-gujarat-assembly%2Farticle1-1221447.aspx&ei=ANJTVM1658ebBfTcgaAD&usg=AFQjCNFo13BcP03VC_8lTmWYiVSKEpYZ9A&sig2=T2Bw_ppUCWg0SYX2Ge1vSw

***********************************************
தேர்தல் நேரத்துல 2ஜி, நிலக்கரி ஊழல்ன்னு சி.ஏ.ஜி அறிக்கையை காட்டி முழங்கி ஆட்சிய பிடிச்சவரு ஏன் இப்படி திடீர்னு யூ-டர்ன் அடிச்சி நோ-என்ட்ரில பூந்தாருன்னு சந்தேகம் வரும். ஜூலை மாசம் இதே சி.ஏ.ஜி “குஜராத் அரசு ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் அதிகபட்ச லாபம் பெறுவதற்கு தவறான வழியில் உதவியிருக்கிறது” அப்படின்னு குற்றம் சாட்டப் போவுதுன்னு தெரிஞ்சிருக்கு.

அதுக்கு லிங்க் :https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0CCUQFjAB&url=http%3A%2F%2Findianexpress.com%2Farticle%2Findia%2Findia-others%2Fcag-raps-gujrat-govt-for-extending-undue-benefits-to-reliance-essar%2F&ei=ENhTVJnkOYHpmAX084GIBg&usg=AFQjCNE_0mVtPl5MSMkp9SEkRklGIAqiUQ&sig2=8mYh_rxkUnbNl0rFxcea0A

***********************************************
இது எப்புடி முன்னாடியே பெரியண்ணனுக்கு தெரிஞ்சதுன்னு கேக்கறீங்களா ? சி.ஏ.ஜி அலுவலகத்திலேருந்து ஏற்கனவே 2ஜி ரிப்போர்ட திருடி கொடுத்த குரூப், பெரியண்ணன் பிரதமர் ஆன பிறகு கொடுக்காம இருப்பாங்களா ?

இது தான் பெரியண்ணனுக்கு முதல்முறையான்னா, அதுவும் கிடையாது. ஏற்கனவே பெரியண்ணனின் அரசாங்கத்தால் 17,000 கோடி நட்டம்னு சி.ஏ.ஜி சொல்லி இருக்கு

அதோட லிங்க் ;https://www.google.co.in/url?sa=t&rct=j&q&esrc=s&source=web&cd=1&cad=rja&uact=8&ved=0CB4QFjAA&url=http%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Findia%2FCAG-raps-Narendra-Modi-govt-for-Rs-17000-cr-losses%2Farticleshow%2F12476483.cms&ei=ENhTVJnkOYHpmAX084GIBg&usg=AFQjCNFfdgzwCLCmSeKhnMad1DWO8H1JeQ&sig2=5dVHpbh_5Dm_XQlt189FIA

***********************************
இப்ப சின்ன அண்ணன் அருண் ஜேட்லி சி.ஏ.ஜி-க்கு சொல்லி இருக்கற அறிவுரையா பார்த்தா, அடுத்தாப்ல ஏதோ அறிக்கை வரப் போவுதோன்னு சந்தேகமா இருக்கு. சரி, அது வரட்டும் பாத்துப்போம்.

இதே சி.ஏ.ஜி அறிக்கையை வச்சிகிட்டு தான 2ஜி-ல அந்தக் கூத்து அடிச்சீங்க. எங்க அண்ணன் ராசாவை விசாரணையிலேயே சிறையடைக்க வச்சீங்க. நீங்களே தீர்ப்பு கொடுத்தீங்க.

# அப்ப எங்களுக்கு வந்தது ரத்தம் இல்லியா ஜேட்லிஜி அண்ட் மோசடிஜி ?

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

பெங்களூரு வழக்கும்.... தில்லி வழக்கும்....

அங்கும் ஒரு வழக்கு நடக்கிறது, இங்கும் ஒரு வழக்கு நடக்கிறது…

ஆனால் தாம் கண்ணை மூடிக் கொண்டதால், உலகம் இருண்டு போகும். அந்த இருட்டில், இது யாருக்கும் தெரியாமலேயே போய்விடும் எனபது பூனைகளின் நினைப்பு. 

பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு எப்படி, எத்தனை வருடமாக இழுத்தடிக்கப்படுகிறது என்பது நாடறிந்த உண்மை. வாய்தா வாங்குவதிலேயே கின்னஸ் சாதனை படைக்கும் கட்டத்தில் ஜெ.

2ஜி வழக்கில், தில்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2011 ஏப்ரல் 2-ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை முழு ஒத்துழைப்பு கொடுத்து தன் மீதான வழக்கை நடத்தி வருகிறார் அண்ணன் ஆ,ராசா.

           

வழக்கை இழுத்தடிப்பதற்காக, சி.பி.ஐ தான் நேற்று நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற குறிப்புரையையும், நீதிமன்ற உத்தரவையும் படித்தால் புரியும்.

நீதிமன்றக் குறிப்புரை :
கேட்ட கேள்வியையே வெவ்வேறு வகையில் கேட்டும், சுற்றி வளைத்து கேட்டும், ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்க வேண்டாம் என மூத்த அரசு வழக்கறிஞரை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.

நீதிமன்ற உத்தரவு :
“ஏற்கனவே 17-07-2014 அன்று, மூத்த அரசு வழக்கறிஞர், ”இது பெரிய வழக்கு என்ற அடிப்படையில் குறுக்கு விசாரணைக்கு தயார்படுத்திக் கொள்ள கூடுதல் நாட்கள் வேண்டும்” என்று கோரியதின் அடிப்படையில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்டன.

ஆகவே, 18-07-2014 மற்றும் 19-07-2014 ஆகிய வேலைநாட்களில் வழக்கு தள்ளி வைக்கப்பட்டு, இன்று 21-07-2014 எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது மேலும் நாட்கள் கேட்கிறார்.

07-07-2014-ல் குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் முடிவை எட்டவில்லை. முடிவுத் தேதி(கட்-ஆப் டேட்) குறித்து குறுக்கு விசாரணை துவங்கியது, ஆனால் இன்னும் அதே முடிவுத் தேதி குறித்தே விசாரணை நீடிக்கிறது, பல நாட்களுக்குப் பிறகும்.

இதனடிப்படையில் இந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட வேண்டியது. ஆனால் எனது விருப்பமின்மைக்கு இடையிலும், வழக்கு விசாரணை தாமதப்படாத வகையில் குறுக்கு விசாரணையை விரைவாக முடிக்க வேண்டுமென்ற உத்தரவோடு, வேண்டுதல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மூத்த அரசு வழக்கறிஞரின் வேண்டுதலுக்காக குறுக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது”

வழக்கமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கை இழுத்தடிப்பார்கள், ஜெயலலிதாவைப் போல. ஆனால் இங்கே அரசுத் தரப்பு இழுத்தடிக்கிறது. இதன் காரணமாக, மூத்த அரசு வழக்கறிஞரை இந்த அளவிற்கு கண்டித்திருக்கிறார் நீதிபதி,

அதே போல நேற்றைய விசாரணையில் பிரதமரின் ஒப்புதல் பேரிலேயே அனைத்தும் நடைமுறைப் படுத்தப்பட்டது என்று அண்ணன் ஆ.ராசா அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

தானே வாதாடி, இப்போது தானே சாட்சியமும் வழங்கி அரசுத் தரப்பை திணறடித்துக் கொண்டிருக்கிறார் அண்ணன் ஆ.ராசா.
ஆனால் இது எதுவும் உலகின் கண்களுக்கு தெரியக்கூடாதென கண்களை இறுக மூடிக் கொண்டுள்ளன, சில பத்திரிக்கைப் பூனைகள்.

# உதயசூரியனும் உதிக்கையிலே… !

சனி, 26 அக்டோபர், 2013

இரண்டு அரசு ஐ.டி.ஐக்கும் அனுமதி, ஒரு கார் பயணம் தான்.

தலைவர் கலைஞர் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார், தலைமைச் செயலகம் நோக்கி. அப்போது தலைவர் கலைஞர் முதல்வர். உடன் சில அமைச்சர்கள். அண்ணன் ஆ.ராசா அவர்களும் உடன்.

"ப.சிதம்பரமும், பெரிய.கருப்பனும் சிவகங்கைக்கு ஒரு ஐ.டி.ஐ கேட்டிருக்காங்க. அலுவலகத்தில நினைவு படுத்துங்க" என தன் செயலாளரிடம் சொல்கிறார் தலைவர். உடனே அண்ணன் ராசா, "அய்யா எங்களுடையதும் பின் தங்கிய மாவட்டம், எங்களுக்கும் ஐ.டி.ஐ வேண்டும்" என்கிறார்.

"ஏற்கனவே அரியலூர்ல ஒரு அரசு ஐ.டி.ஐ இருக்கேய்யா" என்கிறார் தலைவர் கலைஞர். "அய்யா, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் வருவதற்குள் அந்த பகுதி மாணவர்களை தொழிற்கல்விக்கு தயார் செய்தா தான் சரியா இருக்கும். அதே போல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்குள் அங்கே இருக்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்"

"சரி. நீ சொல்ற காரணம் சரியா தான் இருக்குய்யா. ரெண்டும் கொடுத்திடலாம்." இது தலைவர் கலைஞர். தலைமை செயலகம் அடைவதற்குள் இரண்டு ஐ.டி.ஐக்கும் அனுமதி. ஒரு கார் பயணம் தான். இரண்டு ஐ.டி.ஐ-களும் அமைவதற்கு அரசு இடம் இல்லை. தன் தாய்-தந்தையர் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் தலா அய்ந்து ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்த ஒரு சந்தர்ப்பம். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நேரம். அண்ணன் ராசா அரியலூருக்கு ஒரு பொறியியல் கல்லூரி கேட்டார். மற்ற அமைச்சர்கள் "ஏற்கனவே இரண்டு ஐ.டி.ஐ, ஒரு கலைக்கல்லூரி(பெரம்பலூர்), இது வேறயா ?" எனக் கிண்டலடித்தனர்.

"நீங்க சும்மா தர வேண்டாம். 20 ஏக்கர் இடமும், 5 கோடி ரூபாய் பணமும் நிதியாகப் பெற்று தருகிறேன்" என சொல்ல, பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. 20 ஏக்கர் இடமும், நிதியும் வழங்கினார். அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

அண்ணன் ராசா அவர்கள் ஒரு முறை துறையூர் அருகே மிகப் பெரிய விபத்தை சந்தித்தார். திருச்சியில் முதல் உதவி முடித்து, தனி ஹெலிக்காப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

இது குறித்து ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, "என்னை நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டதால் பிழைத்து வந்தேன். ஆனால் எங்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால், தஞ்சையோ, திருச்சியோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது."

"ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து கொடுத்தால், அரியலூர்-பெரம்பலூர் இடையே அமைத்துக் கொள்வோம். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும். எங்கள் மாவட்டத்து கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்" என சொல்ல மருத்துவக் கல்லூரி sanctioned. 

இப்படி இடம், பொருள் அறிந்து அண்ணன் ஆ.ராசா அவர்கள் முயற்சி எடுத்ததனால் தான் எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியே. இன்று அண்ணனின் பிறந்தநாள்.

# வாழ்க அண்ணன், எங்கள் மாவட்டங்களை இன்னும் முன்னேற்ற !




திங்கள், 21 அக்டோபர், 2013

பொதுவாழ்வின் சங்கடங்கள்

செந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். பேசிய அண்ணன் அவர்களது முகத்தில் லேசான மாற்றம். "அலுவலகத்தில் இருக்கிறேன், காரில் ஏறி பேசுகிறேன்." என்றார்.

தளபதி அவர்களின் 06- ந் தேதி வருகையையொட்டி, அரியலூர் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை அண்ணன் ஆ.ராசா அவர்கள் 04.10.2013 அன்று பார்வையிட்டு விட்டு விழுப்பணங்குறிச்சி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் மறைந்த செந்தில் அவர்கள் படத்தினை திறந்து வைத்து விட்டு, திருமானூரில் கழகத் தோழர் சுந்தர சக்திவேல் திருமணத்தை விசாரித்து செந்துறை விரைந்தோம்.

செந்துறையில் வி.சி.க மாவட்ட செயளாலர் திருமாவளவன் மறைவிற்கு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு, ஒன்றிய தி.மு.க அலுவலகத்திற்கு சென்றோம். கடந்த மாதம் காதணி விழா கண்ட கருப்புசாமி அவர்களது குழந்தைகள் அண்ணன் ராசா அவர்களிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது தான் அந்த போன் அழைப்பு வந்தது. ஃபோனை வைத்த உடன் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்தனர். தொடர்ந்து குழுமூர் கழகத் தோழர் ராஜேந்திரன் குழந்தைகளோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். டீ வந்தது, அருந்தி விட்டு கார் ஏறினோம்.

மொபைலை எடுத்து டெல்லிக்கு அழைத்தார், "பாப்பா எப்படி இருக்கு ?, ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு பேசுங்க" என்றார். அண்ணன் ராசா அவர்களுக்கு ஒரே மகள். டெல்லியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். பள்ளிக்கு சென்றிருக்கிறார். நாட்டிய வகுப்பு. பயிற்சியில் இருக்கும் போது, திடீரென சீலிங் ஃபேன் கழன்று அவரது தலையில் விழுந்து விட்டது. பள்ளியில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள்.

இங்கே அகரம் சீகூரில் ஒரு திருமணம் விசாரித்து, ஆடுதுறை மு.ஊ.ம தலைவர் மலர்வண்ணன் தந்தை மறைவு துக்கம் விசாரித்து விட்டு கார் ஏறினோம். டெல்லியில் இருந்து பார்லிமெண்ட் அனெக்ஸ் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

வடக்கலூரில் ஒரு புதுமணத் தம்பதியரை வாழ்த்திவிட்டு, மூத்தக் கழகத் தோழரின் மனைவி மறைந்ததையொட்டி அவரது படத்தை திறந்து வைத்து விட்டு, லப்பைகுடிகாடு நகரில் மூன்று துக்கம் விசாரித்துவிட்டு, கீழப்புலியூரில் கழகத் தோழரின் புதுமனைபுகுவிழாவில் கலந்து கொண்டு பெரம்பலூர் செல்லும் போது மாலை மணி 4.00.

அலுவலகம் சென்று அண்ணியாருக்கு ஃபோன் செய்து விபரம் கேட்டார். அப்போது தான் மருத்துவமனையில் ஆய்வுகள் முடிந்து வெளியே வந்திருந்தனர். தலையில் வெளிப்புற வீக்கம் தவிர வேறு பாதிப்புகள் இல்லை என்று தெரிந்த பிறகே சகஜமானார். மகளிடம் பேசினார், அதன் பிறகே அண்ணனுக்கு முகம் மலர்ச்சியான நிலைக்கு வந்தது. மிகப் பெரிய விபத்திலிருந்து தப்பியிருக்கிறார்.

காரில் வந்த நான்கு பேரை தவிர வேறு யாருக்கும் இது தெரியாது. அண்ணனும் பதட்டத்தை காட்டிக் கொள்ளாமல் நிகழ்ச்சிகளை முடிக்கும் வரை இயல்பாகவே இருந்தார். தனது வருத்தம் மற்றவர்களை பாதிக்காமல் பார்த்துக் கொண்டார்.

உணவருந்தி மலையாளப்பட்டி பயிற்சி பாசறை ஏற்பாடுகளை காண சென்றோம். 5-ந் தேதியும் இதே போன்று ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். 6-ந் தேதி தளபதி அவர்களோடு பெரம்பலூர்-அரியலூர் சுற்றுப்பயணம் பொதுக்கூட்டம் முடித்து, தளபதி அவர்களோடு இரவு சென்னை சென்று, நேற்று தான் டெல்லி சென்று மகளை பார்த்தார்.

# பொதுவாழ்வின் சங்கடங்கள்



வியாழன், 28 பிப்ரவரி, 2013

வாய்தா ராணிகளும், ஆஜர் ராசாவும்....




நீதிமன்றம் பக்கம் தலை வைக்கமாட்டேன் என வாய்தா வாங்குவோருக்கு மத்தியில், நீதிமன்றத்தில் தினம் ஆஜாராகி வழக்கை சந்திப்பதோடு மாத்திரமல்லாமல், நாடாளுமன்றக் கூட்டு குழுவில் ஆஜராக தயார் என தானாக முன்வரும் அண்ணன் ஆ.ராசாவை போன்றோரும் இருக்கிறார்கள்.

இவரை குத்திக் கிழிக்க தான் சத்தியவான்கள் துடிப்பார்கள், வாய்தா ராணியை தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள்.

அண்ணன் ஆ.ராசா அவர்களது கடிதம்.***********

மதிப்பிற்குரிய பாராளுமன்ற சபாநாயகர் அவர்களுக்கு!

1998 ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட 2 G அலைக்கற்றை கொள்கை, அலைக்கற்றை விலை நிர்ணயம் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நான் ஆஜராக வேண்டும் என்று அதில் இடம் பெற்றுள்ள சில உறுப்பினர்கள் கோரி வருவதாக அறிகின்றேன்.

2007ம் ஆண்டு மே 17 முதல் 2010 ம் ஆண்டு நவம்பர் 14 வரை மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக நான் இருந்த போது 2008ம் ஆண்டில் 122 அலைக்கற்றை உரிமங்கள் ஒதுக்கப்பட்டன.

அலைக்கற்றை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எனது தரப்பு விளக்கத்தை அறிந்து கொள்ள வாய்ப்பளிக்காமல் 2012ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அந்த 122 அலைக்கற்றை உரிமங்களையும் ரத்து செய்து தீர்ப்பளித்தது. அதை மறு சீராய்வு செய்யக்கோரி நான் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை.

பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக மத்திய தொலை தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், அட்டர்னி ஜெனரல் போன்றோர் ஆஜராகி வருகின்றனர். ஆனால் துரதிஷ்ட வசமாக அவர்கள் குழுவிடம் அளிக்கும் விளக்கம் உண்மைக்கு புறம்பாகவும் குற்றத்தை வேறொறுவர் மீது சுமத்தும் வகையில் இருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகும் செய்தியின் மூலம் அறிகின்றேன்.

இந்த விவகாரத்தில் தவறாகவும், முழுமையான ஆதாரங்கள் இல்லாமலும் பாராளுமன்ற கூட்டுக்குழு வழிநடத்தக்கூடாது. அதனால் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பாக நானே நேரில் ஆஜராகி தொலைதொடர்பு கொள்கை, தொலைதொடர்பு உரிமங்கள் வழங்குவதில் அரசு கடைபிடித்த கோட்பாடு, இதில் யாருக்கெல்லாம் உரிமையும் பங்கும் உண்டு என்பதை விளக்குவதே சரியாக இருக்கும்.

அலைக்கற்றை தொடர்பான தீர்ப்பில் இந்திய ராணுவத்திடம் இருந்து பெறப்பட்ட அரிய இயற்கை வளமான அலைக்கற்றை பண பலம் கொண்ட சிலராலும் அரசு நடைமுறையை மாற்றும் சக்தி படைத்தவர்களாலும் அனுபவிக்கப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் ஆலைக்கற்றை முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை சி.பி.ஐ நீதிமன்றத்தில் எனது பதவிக்காலத்தில் ராணுவம் பகிர்ந்து கொண்ட அல்லது அது பயன்படுத்தி வந்த அலைக்கற்றை வழங்கப்படவில்லை என சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

எனது பதவிக்காலத்தில் பயன் படுத்தாமல் இருந்த அலைக்கற்றையை கண்டறியவும் அவற்றை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை ஒருக்கிணைக்கும் பணியையும் மத்திய தொலைத்தொடர்பு துறை மேற் கொண்டது.

ஆனால் எனக்கு முன்பு அமைச்சராக இருந்தவர்கள் அலைக்கற்றையை பயன்படுத்தாமல் இருந்ததால் தான் அரசுக்கு உண்மையான வருமான இழப்பு ஏற்ப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசுத்தலைவர் மூலம் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது. அதில் ஏலம் நடத்தி அலைக்கற்றையை ஒதுக்குவது அரசின் நோக்கம் அல்ல , நாட்டின் தொலைத்தொடர்பு வளர்ச்சியை அதிகரிக்க நிறுவனங்களின் வருவாய் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கலாம் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அதிகாரிகள் விளக்கினர்.

மேற்க்கண்டவாறு 2 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிலவும் பல முரண்பாடுகளை பாராளுமன்ற கூட்டுக்குழுவிடன் என்னால் விளக்க முடியும். இதன் மூலம் மறைக்கப்படும் பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். சி பி ஐ நீதிமன்றத்தில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சட்ட விரோதமாக அலைக்கற்றை ஒதுக்கப்பட்டதாக தொடரப்பட்டுள்ள வழக்கு தான் விசாரிக்கப்படுகின்றது இப்போது.

அந்த விசாரணை பாதிக்காத வண்ணம் அலைக்கற்றை கொள்கை அதை அமல்படுத்திய நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவிடம் நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதனால் என்னை விசாரனைக்கு அழைக்கும் படி பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு உத்தரவு இட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு

ஆ. ராசா
( மொழி பெயர்ப்பு - அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்)

சனி, 2 பிப்ரவரி, 2013

தமிழீழ அத்தியாயத்தில் புதிய பக்கங்கள்! - ஆ. இராசா


"எதுவரை உன் மொழி  நீள்கிறதோ  அதுவரை உன் நாடு;  எது வரை உன் மொழி வாழ்கிறதோ  அதுவரை உன் இனம்"

என்ற பாவாணரின்  வரிகளை நினைவூட்டும் வகையில்  மொழியும் இனமும்  இங்கும் ஈழத்திலும் ஒடுக்கப்படும்போதெல்லாம் எதிர்த்து நிற்கும் இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் இருந்து வருகிறது. ஈழத்தில் தந்தை செல்வா அவர்கள் காலத்தில் தொடங்கிய அறப் போராட்டம் முதல் அண்மைக் காலத்து ஆயுதப்போராட்டம் வரை,  தி.மு. கழகம் அளித்து வரும் ஆதரவும், பங்களிப்பும்  தாய்த் தமிழ்நாட்டின் மொழி இன வரலாற்றில் அழிக்க முடியாத பதிவுகளாகும். ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம், அணி மாற்றம் இவைகளைக் கடந்து ஈழத் தமிழர் நலனில் வேறு எவருக்கும் - எந்த இயக்கத்திற்கும் இல்லாத உயிர்ப்புடனும், உண்மையுடனும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களையும், கழகத்தையும் "பூச்சுகள் இல்லாத புரிதல்" உள்ளவர்கள் போற்றவே செய்வர். ஈழத்தமிழர் படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட, தனித்த இறையாண்மையுடன் கூடிய  தனி ஈழம் தான் தீர்வு என்பதை நோக்கமாகக் கொண்டு, 13-5-1985 அன்று  தலைவர் கலைஞர் அவர்களால் முன் மொழியப்பட்ட"டெசோ" (Tamil Eelam Supporters' Organisation- TESO)-  நடத்திய பல அமர்வுகள் மற்றும் அதன் தீர்மானங்கள் ஈழத்தில் நடந்தேறிய கொடுமைகளையும், இந்திய அரசின் பாராமுகத்தையும் அன்றைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் போலிப்பூடக நிலையையும் பதிவு செய்துள்ளன.

அதே ஆண்டு  விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்ற போராளிக் குழுக்களின் தலைவர்களான சிறீ சபாரத்தினம், பத்மநாபா, மற்றும் பாலகுமார் ஆகியோர் ஒருமித்து கை உயர்த்தி  முழக்கமிட்ட திம்பு பேச்சு வார்த்தையில்  முன் வைக்கப்பட்ட  தனித் தேசிய இனம்  மற்றும் தாயகத்தை அங்கீகரித்தல்; முழு சுய நிர்ணய உரிமை - மற்றும்முழு குடி உரிமை ஆகியவற்றை ஆதரித்து அன்றைய "டெசோ" தமிழக எல்லை கடந்து இந்திய அரசியலில் விதைத்த விதைகளும், விளைச்சல்களும் களம் மாறிப் போனதா களவாடப்பட்டதா வேற்று விசைகளால்  கபளீகரம் செய்யப்பட்டதா என்பதை ஆராய வேண்டிய அவசியம் இப்போது எழவில்லை.

1983இல்  நடைபெற்ற ஈழப் படுகொலைகளைக் கண்டித்து  24 மணி நேரத்தில்  தமிழகத்தை மலைக்க வைத்த - அகில இந்தியாவை உற்று நோக்கிடச் செய்த - சர்வ தேச  நாடுகளின் கவனத்தை ஈர்த்த மாபெரும் பேரணியை தலைவர் கலைஞர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 27-7-1983 அன்று நடத்திக் காட்டியது  வெறும் அரசியல் நிகழ்வல்ல; தானும் ஆடி தசையையும் ஆட்டுவித்த இன உணர்வின் எழுச்சி வடிவமாகும். அதனால் தான் 4-5-1986இல் "இதோ இந்திய இனங்கள் ஒன்றுபடுகின்றன, இலங்கையில் அழியும் மனித இனம் காக்க" என்று பிரகடனப்படுத்தி,  "டெசோ"  மாநாட்டினை அன்று தலைவர் கலைஞர் மதுரையில்  கூட்டினார்.

அன்றைய ஆந்திர மாநில முதலமைச்சர் என்.டி. ராமராவ், பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், அகாலிதளக் கட்சியின் ராமுவாலியா, காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் அப்துல் ரஷீத்,  தெலுங்கு தேசக் கட்சியின்  உபேந்திரா உள்ளிட்ட தேசிய இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட அம்மாநாடு, திருபழ.நெடுமாறனின் வரவேற்புரையோடு தொடங்கியது என்பது இன்றைய நிகழ்வுகளின் போக்கில் "வரலாற்று முரணா" அல்லது "வாழ்க்கை முரணா" என்பதை "செற்றமும் உவகையும் செய்யாது காக்கும் ஞமன்கோல்" ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம். ஏனெனில் "இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களை, கலந்து கொள்ள விடாமல், தடுப்பதற்கான முயற்சிகளில் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்களும், காங்கிரசைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானதாகும்" என்றும், "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒரு அகில இந்திய வடிவம்   கொடுக்கவும்,  இந்தியா முழுதும் உள்ள அனைவரின் ஆதரவைத் திரட்டவும்,  இது வெறும் தமிழர் பிரச்சினை அல்ல;  இந்தியாவின் தேசிய பிரச்சினை என்று எடுத்துக் காட்டவும் இம்மாநாடு நடத்தப்படுகிறது"  என்று முழங்கியவர் நெடுமாறன்.
உட்பகையின்றி 1984இல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளிக் குழுக் கள் சேர்ந்து உருவாக்கிய  ஈழத் தேசிய விடுதலை முன்னணி (Eelam National Liberation Front) அமைந்தவுடன், பிரபாகரனும், சபாரத்தினமும், பத்மநாபாவும், பாலகுமாரும்  இணைந்த கைகளாய் எழுந்த நேரத்தில்  அப்போதைய எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. அரசை ஈழத் தமிழர் பிரச்சினையில் "துரோகம் செய்வதாக" கண்டித்தும்,  தி.மு.க.வின் செயல்பாட்டை முற்றிலும் ஆதரித்தும்  அறிக்கை வெளியிட்டவர்   நெடுமாறன்.

1987 ஜுலையில்  இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு, இந்திய அமைதிப்படை  உடனடியாக இலங்கை சென்ற போது, தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அப்போதும் இந்த ஒப்பந்தத்தையே  தவறு என்று தர்க்க ரீதியாகவும், போராளிகளின் நிலைமையிலும் நின்று எதிர்த்துக் குரல் கொடுத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். அமிர்தலிங்கம், பத்மநாபா படுகொலையின் தாக்கமும், அதையொட்டி தி.மு.கழகத்தின் மீது நாளேடுகளும், அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் தொடுத்த பொய்த் தாக்குதல்களும் 1989ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கலைஞர் அரசை இரண்டாண்டுகளில் கலைத்ததில்  வெற்றி பெற்றன.  அதைத் தொடர்ந்து நடைபெற்ற ராஜீவ்காந்தி படுகொலை, அதன் காரணமாக தமிழக  மக்கள்  ஈழத் தமிழர் பிரச்சினையில் எடுத்த எதிர்மறை நிலை, பின்னிட்ட விடுதலைப் புலிகளின் மீதான  தடை,  திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நேர்ந்த அரசியல் பின்னடைவு ஆகியவை "டெசோ""வின் பணிகளுக்கு இயற்கையான தடையாகவோ அல்லது  அவசியமற்ற கிடப்பாகவோ அமைந்து போனது சரித்திரத்தின் சோக நிகழ்வுகள். அப்போதுங்கூட, "புலிகள் இயக்கத்தைத் தடை செய்து விட்டு,  யாருடன்  பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என்ற நியாயமான கேள்வியை (முரசொலி - 15-5-1992)  எழுப்பியவர் தலைவர் கலைஞர்.  

"மொழியையும், நாட்டையும்  ஆளாமல் துஞ்சுவது இல்லை" என்ற பெருஞ்சித்திரனாரின்  வரிகளுக்கு இலக்கணமாக மொழியின் மீதும்,  இனத்தின் மீதும் தனது பற்றை எப்போதும் தளர்த்திக் கொள்ளாத ஒரே தலைவராக  கலைஞரும்,  தன் ஆளுமையை விட்டுக் கொடுக்காத  ஒரே இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகமும் இருந்து வந்திருக்கிறது என்பது  நிதர்சனம். சட்ட நெருக்கடி வரும்போது "புலிகளோடு எனக்கு எப்போதும் தொடர்பு இருந்ததில்லை" என்று அறிக்கை (14-10-1993) தந்த திரு.வைகோவைப் போன்றவர்களின்  அரசியல் நெறி ஆரவாரம் சார்ந்ததா அறம் சார்ந்ததா என்பதையும் எதிர்கால ஆய்வாளர்களுக்கே விட்டு விடலாம்.

இவைகளையெல்லாம் இங்கே நினைவு கூரக் காரணம், 1986 "டெசோ" மாநாட்டில் ஈழப் பிரச்சினை, அகில இந்திய வடிவம் பெற்று விட்டதாகக் கணித்த நெடுமாறன் போன்றவர்கள்  பல்வேறு நாடுகளில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய காரணமான ஜெயலலிதா அரசின் போக்கு - 2001ஆம் ஆண்டு  அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தகர்ப்புக்கு பிந்தைய  சர்வதேச அரசியல் சூழ்நிலை - அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இலங்கை அரசின் அரசியல் தந்திரத்தால் விளைந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போர்  ஆகியவற்றை ஏன் கணக்கிலே எடுத்துக் கொள்ளவில்லை என்பது "மில்லியன் டாலர்" கேள்வி.  இங்கே தான் "டெசோ"  வின் பணி மீண்டும் தேவைப்பட்டது.

1986ஆம் ஆண்டு அகில இந்திய வடிவம் பெற்ற ஈழப் பிரச்சினைக்கு "டெசோ" அமைப்பு அவசியப்பட்டதைப் போலவே, 2011ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட இந்தோனேசிய அரசின் தலைமை வழக்கறிஞரைத் தலைவராகக் கொண்ட குழு,  இலங்கை ராணுவம்  ஈழத் தமிழர்கள் மீது  நடத்திய  காட்டுமிராண்டித்தனமானப் போரினை உறுதி செய்து  அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த போது, ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவத்திலிருந்து "சர்வதேச வடிவத்திற்கு"  விரிவுபடுத்தப்பட்டது என்பதை அரசியல் தற்குறிகள் கூட ஒப்புக் கொள்வர். ஆனாலும் தமிழகத்தின் மேதாவிகள் சிலரும், மேதாவிலாசம் படைத்த பத்திரிகைகளும், அன்றைய முதல் அமைச்சர் கலைஞரையும், தி.மு.க. வையும்  காயப்படுத்தியதற்கு வக்கிரமும், வர்ணமும் தான் காரணம். என்றாலும் இவர்களின் விமர்சனங்களை உதாசீனப்படுத்தி விட்டு,  ஈழப் பிரச்சினையின் சர்வ தேச வடிவத்தை எதிர்கொள்ள  30-4-2012இல் "டெசோ"  மீண்டும் எழுப்பப் பட வேண்டியது நிகழ்வுகளின் நிர்ப்பந்தம் ஆகியது.

12-8-2012 அன்று  "டெசோ"  நடத்திய  ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு  ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுனர் குழு அளித்த அறிக்கையை ஆய்வு செய்து  இயற்றிய  தீர்மானங்களில்  "இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை தாங்களே முடிவு செய்து கொள்ளும் வகையில்  அவர்களுக்கு முழு உரிமை வழங்குவதற்கு இந்திய அரசு ஐ.நா. மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்"" என்பது தலையாய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமாகும். இது தவிர, "ஈழத் தமிழர்களிடம் ஐ.நா. மன்றத்தின் மூலம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்;  இப்பிரச்சினை  தெற்காசிய  மனித உரிமைகள் பிரச்சினையாக முன்னிலைப் படுத்தவேண்டும்"  என்றும் வலியுறுத்தப்பட்டது.

"டெசோ" தொடங்கப்பட்ட போதும், வாழ்வுரிமை மாநாடு நடத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ்நாட்டின் அரசியல் தட்ப வெட்ப நிலை எப்படி இருந்தது என்பதை  கணக்கில் கொண்டால், அறிஞர் அண்ணாவின் "இனமும் எதிரியும்" என்ற சொற்றொடருக்கு விளக்கம் கிடைக்கும். "தடைக் கற்கள் உண்டெனினும் தடந்தோள்கள் உண்டு"  என்ற பாவேந்தரின் பாடலை நெஞ்சத்தில் தாங்கி நிற்கும்  தலைவர் கலைஞர்,  இந்த  அரசியல்  தட்ப வெட்பத் தடைகளை  எப்படி எதிர் கொண்டார் என்பது தமிழ் தேசியவாதிகள்  அறிந்திருக்க வேண்டிய  அரசியல்  பாடம்.

12-8-2012 அன்று  நடைபெற வேண்டிய மாநாட்டிற்கு, சூலை 29 மற்றும் ஆகஸ்ட் 2ஆம் தேதிகளில் காவல் துறை அனுமதி வேண்டி  கடிதம் கொடுக்கப் பட்ட நிலையில்,  10-8-2012 நள்ளிரவு  2 மணிக்கு  அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை மூலம் அரசு  அறிவித்தது எவ்வளவு பெரிய இன சூழ்ச்சியும் வஞ்சகமும் என்பதை உணர்ச்சியோடு வெளிப்படுத்த வேண்டிய கடமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது விழுந்தது. அதிகாலை 6 மணிக்கு பேராசிரியர் உள்ளிட்ட "டெசோ" உறுப்பினர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவசர ஆலோசனை நடத்தி நீதி மன்ற மேல் முறையீடு செய்து திட்டமிட்ட அதே இடத்திலேயே மாநாட்டை நடத்திட பெற்ற ஆணை இன எதிரிகளின் மீதும், அவர்களுக்குத் துணை நின்றவர்களின் மீதும் கொடுக்கப்பட்ட சாட்டையடி ஆகும்.

ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்ற உள் துறை அமைச்சகத்தின் "அச்சுப் பிழை அறிவுரை" அடுத்த சில மணி நேரங்களிலேயே  அவசர அவசரமாக விலக்கிக் கொள்ளப்பட்டு  மத்திய அரசின்  மனநிலையில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்த  தலைவர் கலைஞர் அவர்களால் மட்டுமே முடியும் என்பதையும் அப்போதுதான்  தமிழ்நாடறிந்தது.  சிங்களப் பேரின வாத இலங்கை அரசு செய்து முடித்த இனப் படுகொலையை உலகறியச் செய்யவும், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்து மீட்டுருவாக்கம் செய்திடவும்  சர்வதேச வடிவம் ஒன்றை ஏற்படுத்துவது ஒன்றே சாத்தியமான வழி என்பதை உலகுக்கு உணர்த்தியது தான் "2012 டெசோ மாநாடு".

இலங்கை சீனாவோடும், பாகிஸ்தானோடும் கொண்டிருக்கும் சுமூக உறவு, அமெரிக்க அரசுடன் ஏற்கனவே இலங்கை செய்து கொண்ட ராணுவ உடன் படிக்கை ஆகியவற்றை மறந்து விட்டு ஈழப் பிரச்சினையை அணுகுவது பன்னாட்டு  அரசியல் பிழையாக முடியக் கூடும் என்பது  உள்ளூர் குண்டுச் சட்டி குதிரையோட்டிகளுக்கும் தெரிந்தது தான். தேசிய இனங்களின் பிரிந்து போகிற உரிமையை  தங்களுக்குள் பிரயோகித்துக் கொள்ளும் விசித்திரமான சித்தாந்தத்தை பொதுவுடைமையாளர்கள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கொண்டிருந்ததை இம்மாநாடு தோலுரித்துக் காட்டியது. முதலாளித்துவ நாடுகள் கூட  ஈழத் தமிழர்களுக்கு கண்ணீர் சிந்த முன் வந்த போதும், கம்யூனிச நாடுகள் இலங்கை அரசின் இன வாதத்திற்கு  கட்டியம் கூறியது  மார்க்சையும் ஏங்கல்சையும்  மறு வாசிப்பு செய்யக் கூட அல்ல,  மறுதலிக்கும் பரிதாபத்திற்குரிய வரலாற்றுச் சறுக்கலாகும். ஈழப் பிரச்சினை அகில இந்திய வடிவம் பெற்ற போது தோள் கொடுத்த அரசியல் தலைவர்கள், ஆதரித்த பத்திரிகைகள், சர்வ தேச வடிவம் பெற்று இன்னமும் தீர்வு எட்டப்படாத நிலையில்  தங்களின் நிலைப் பாட்டினை மாற்றிக் கொண்டு  "பிழைப்பு" கருதி தி.மு.க. மீது குற்றம் சொல்வதும், "அழைப்பு" கருதி அரசியல் செய்வதும்  தமிழர்களுக்கு இழைக்கப்படும்  "சந்திப் பிழை அல்ல;  சந்ததிப் பிழை".

பன்னாட்டு அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், இந்திய அரசியல் கட்சித்தலைவர்கள்,  அயலகத் தமிழ் தலைவர்கள் உள்ளிட்டோரின் ஆழமான பங்களிப்பு டெசோ மாநாட்டில் 12-8-2012 அன்று முன் வைக்கப்பட்ட வரைவுத் தீர்மானங்களை விவாதித்து வடித்தெடுத்தன.  முடங்கிக் கிடந்த உலகத் தமிழர்களை எழுந்து உட்கார வைத்த அந்தத் தீர்மானங்களை  நியூயார்க்கில் உள்ள ஐ.நா. மன்றத்திலும், ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திலும் வழங்கிட 30-10-2012 அன்று கூடிய "டெசோ" கூட்டம் முடிவெடுத்து, அதன்படி கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும்,  நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அவர்களும்  நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் வழங்கினார்கள்.  அதேவாரத்தில்  7-11-2012 அன்று லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும்  பிரிட்டானிய தமிழர் பேரவையும் இணைந்து இலங்கை அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்திய  இனப்படுகொலைகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த  பன்னாட்டுக் குழு ஒன்றை  ஐ.நா. மன்றம்  அமைக்க வேண்டுமென்று   இயற்றிய தீர்மானம்  டெசோவின் நோக்கத்தை நிறைவேற்றும்   தொடக்க ஒளிக் கீற்றாக அமைந்தது. இந்த ஒளிக் கீற்றை உலகெங்கும் விரித்து ஜீவஜோதியாய் மாற்றிடும் முயற்சியாக "டெசோ" தலைவர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தளபதி மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர்  டெல்லி சென்று  ஐ.நா. மனித உரிமை ஆணைய உறுப்பு நாடுகளின் துhதர்களையும், இந்தியக் குடியரசு தலைவரையும் சந்தித்து டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை  வழங்கி உரிய நடவடிக்கைகளுக்கு வலியுறுத்தி வந்துள்ளனர். இப்பயணத்தின் நோக்கம் வரும் மார்ச் திங்களில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை அரசு கண்டிக்கப்பட்டு,  இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான   சர்வதேச சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.  

லண்டன் நாடாளுமன்ற வளாகத்தில் தெறித்த  முதல் ஒளிக் கீற்று டெல்லி யிலும் பற்றிப் பரவி   சர்வதேச ஒளி வெள்ளமாகி  இலங்கைத் தமிழர்களின் இருண்ட  வாழ்க்கையை  வெளிச்சப்படுத்தி  டெசோ வெல்லும் என்பது தான் காலம் சொல்லப் போகும் சரித்திரம். அந்தச் சரித்திரத்திற்கான சரியான நகர்வையே டெசோ  டெல்லியிலும் செய்து திரும்பியிருக்கிறது.  வாழ்த்தி வரவேற்போம்!

அன்புடன்
ஆ. இராசா, எம்.பி.,
கொள்கைப் பரப்புச் செயலாளர்

ஞாயிறு, 18 நவம்பர், 2012

2G ; இன்னும் என்ன குழப்பம் ?



செல்போன் ஆப்ரேட்டர்கள் இணைந்து சிண்டிகேட் அமைத்து ஏலம் இல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள், அதற்கு அரசே மறைமுக உதவி என கூக்குரலிடுகின்றனர்.

இதை தான்யா அன்றைக்கே அண்ணன் ஆ.ராசா சொன்னார். சிண்டிகேட்டை உடைப்பதற்கே புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கினேன் என்று சொன்னார்.

ஊரில் சாதாரண கருவேலமரத்தை ஏலம் விட்டால் கூட , குறைந்த விலைக்கு எடுக்க சிண்டிகேட் அமைப்பது நாட்டு வழக்கம்.

பழைய நிறுவனங்களின் கூட்டு களவானித்தனத்தை முறியடித்தார். அவர்களது கைகூலியே சி.ஏ.ஜி.

******************                     *******************

2G, 3G, 4G  என்ற குழப்பம்...

3G, 4G வந்து விட்டதால் தான் 2G ஏலத்தில் தேக்கம் என்ற செய்தி.

3G ,4G  மட்டுமல்ல அதன் அப்பன் வந்தாலும் 2G தான் அடிப்படை. 2G யே அலைபேசிக்கு அவசியமானது. மற்றவையெல்லாம் அடுத்தக் கட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தேவையானவை.

எனவே எந்த காலத்திற்கும் இந்த தொழில் நுட்பமே கோலோச்சும். இதனால் ஏலம் போகவில்லை என்பது அர்த்தமற்ற வாதம்.

**************************                *************************

மற்ற உரிமங்களும் ஏலம் போனால் நட்டம் ஏற்படாது...

122 உரிமத்தில் 22 உரிமமே ஏலம் போயுள்ளது. இதிலேயே 9,400 கோடி வருமானம் வந்துள்ளது, மீதி உரிமங்கள் ஏலம் போனால் கிட்டத்தட்ட 50,000 கோடி கிடைக்கும் என நிகழ்தகவு கணக்கு போடுகிறார்கள்.

எல்லாப் பகுதிக்கும் ஒரே அளவு ஏலம் போகாது. வாய்ப்பு உள்ளப் பகுதிக்கு ஏலம் போயுள்ளது. மற்றப் பகுதிகள் நிலவரம் அப்படி.

அடுத்து அண்ணன் ராசா அவர்கள் காலத்தில், வருவாய் பகிர்வு அடிப்படையில் வந்த வருமானம் 10,400 கோடி. இந்த 50,000 கோடி ஐந்து வருடத்தில் எட்டப்படும்.

அதற்கு பிறகும் வருமானம் தொடரும். அலைபேசி எண்ணிக்கை கூட கூட வருமானம் உயரும்.  

******************                       ****************************

புரிந்தே குழப்புகிற கூட்டத்திற்கு இது அத்தனையும் தெரியும்.

# சிறைப்பட்ட காலத்திற்கு பதில் சொல்லப் போகிறவன் எவன் ?