ஜென்ம சாபல்யம் போல ஆண்டு சாபல்யம் என்று ஒன்று இருந்தால், அதை அடைந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாம். ஆமாம் சென்னை புத்தகக் காட்சி போய் வந்தேன். போன வருடம் ஊரில் இல்லாததால், போகவில்லை.
"அண்ண, கொத்து கொத்தா புக் இருக்கு" "ஏம்பா, போன வருசம் வாங்குன புக்கே படிச்சி முடியல. இன்னமுமா ?" "சில புத்தகம் படிக்கிறதுக்கு. சில புத்தகம் ரெபரன்ஸுக்கு. வாங்கினா தான்பா படிக்கத் தோனும்" வீட்டு சமாதானம்.
ஒய்.எம்.சி.ஏ திடலும் நல்லாத் தான் இருக்கு, பசுமையா. ரோட்ல இருந்து நடந்து வர்றவங்க பாடு தான் சிரமம், தூரம். வழக்கமான ஏற்பாடுகள், சிறப்பாக. எட்டு பெருவழியாக பிரிக்கப்பட்டு, இருபுறமும் ஸ்டால்கள். முகப்பிலேயே கடைப் பட்டியல்.
இரண்டு பாதைகளுக்கு ஒரு முறை குடி தண்ணீர் ஏற்பாடு பாராட்டுக்குரியது. டீ-ஸ்டாலும் ரெப்ரெஷ்மெண்ட்டுக்கு. கடந்த ஆண்டுகளில் வெளியே போக வேண்டி இருந்ததாகத் தான் ஞாபகம். வாழ்க.
ஒரு ஷோல்டர் பேக்கோடு போவது நல்லது, புத்தகங்களை வாங்கி அடுக்க. ஸ்டால்களில் கொடுக்கும் பைகளின் சின்னக் காதுகள், கை விரல்களை பதம் பார்க்கின்றன. சிலர் பேப்பர் பையும் கொடுத்தார்கள்.
தனியாகப் போவதே நலம். யாருடைய தொந்தரவும் இல்லாமல், யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல், யாருடைய நேரத்தையும் எடுக்காமல், நம் இச்சைக்கு புத்தகம் தேர்வு செய்யலாம்.
வித்தியாசமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பவர்களுக்கு வேலை சுலபம். ஒரு பாதைக்கு இரு கடைகள் தேறும். பெயரே கவர்ந்திழுக்கும், எதிர், கருப்பு பிரதிகள், அகநி, பூவுலகின் நண்பர்கள், தடாகம், மதிநிலையம், விடியல், கயல்கவின், கருத்து என.
என்னைப் பொறுத்தவரை, பெரிய பதிப்பகங்களின் புத்தகங்களை இங்கு வாங்காமல் தவிர்க்கலாம். காரணம் அவர்கள் வெளியீடுகளை ஆண்டு முழுதும் அவர்கள் ஷோரூம்களில் வாங்கலாம்.
மற்றபடி எங்கெங்கு காணினும் சமையல் புத்தகங்கள், கவிதை நூல்கள், ஆன்மிகப் புத்தகங்கள், சுயமுன்னேற்ற நூல்கள், குழந்தைகள் புத்தகங்கள், கல்லூரி மாணவர்களுக்கான ரெபரென்ஸ் புத்தகங்கள் குவிந்திருக்கின்றன.
எது எப்படியோ, ஏராளமானப் புத்தகங்கள், எங்கெங்கும் புத்தகங்கள், கண்கொள்ளாக் காட்சியாக. இதை கண்டுகளிக்கவாவது புத்தகக் காட்சிக்கு போக வேண்டும்.
# புத்தகத்தை திறக்கும் போது, உலகத்தின் வாசலையே திறக்கிறோம் !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக