இரண்டு மாதத்திற்கு முன்பு இது வயல்வெளி. நடந்தால் முழங்கால் அளவுக்கு உள்ளே போகும். இப்போது, கால்பந்து திடல் போல் கெட்டியாகி விட்டது.
அப்படி கெட்டியானதற்கு காரணம், அண்ணன் நேரு நடந்த நடை. இரண்டு மாதங்களுக்கு முன்பாக அந்த பகுதியை சீர்படுத்த துவங்கினார்கள். அதிலிருந்து , ஒவ்வொரு இன்ச்சையும் நடந்தே சென்று சுற்றி வந்து, பணிகளை மேற்பார்வையிட்டார்.
இது 200 ஏக்கர் பகுதி. கிட்டத்தட்ட 2 கி.மீ நீளம், 1 கி.மீ அகலம் கொண்ட இந்தத் திடலில் ஒரு நாளைக்கு நான்கு அல்லது அய்ந்து முறை சுற்றி வந்து விடுவார். நாங்கள், வரவேற்பு குழு செயலாளர்கள், ஒரு வாரம் உடன் இருந்து பார்த்த அனுபவம்.
சரி, மாநாட்டு சிறப்புக்கு போவோம். பார்வையாளர்கள் உட்காரும் பகுதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மையப் பகுதி மேடைக்கு நேர் எதிரே, இருபுறமும் மற்ற இரு பகுதிகள். அதற்கு அடுத்த நடமாடும் பகுதிக்கு அடுத்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உணவுப் பொருட்கள் மற்றும் இதர கடைகள் அமைய உள்ளன. அதற்கு அடுத்த அடுக்கில் குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக. இது, இது வரை எந்த கழக மாநாட்டிலும் செய்யப்படாத வசதி.
மேடை 200 அடி நீளம், 80 அடி அகலம். இதுவும் பிரம்மாண்டம் தான், இது காறும் இல்லாத மெகா சைஸ். மேடையின் பேக்ரவுண்ட், பாராளுமன்ற மைய மண்டப அமைப்பு. அங்கு தான் தலைவர் கலைஞர் அமர்ந்து, மாநாட்டை பரிபாலனம் செய்ய போகிறார்.
மாநாட்டு மேடையின் பேக்ரவுண்ட்டிற்கு பின்னால், ஒரு பகுதி இருக்கிறது. அங்கு ஆறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவர் மற்றும் பேராசிரியர் அவர்களுக்கு அறை. அத்தோடு முக்கிய பிரமுகர்களுக்கு அறை, கணினி அறை என இது எல்லாமே புதுசு தான். மாநாட்டின் போது இயங்க இது உற்சாகம் தரும்.
பின்னால் இரண்டு குடில்கள். வீடு போன்ற அமைப்போடு தலைவர் மற்றும் தளபதி தங்குவதற்கு என்றே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், இவர்கள் பயணம் தடைபடக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
சுற்றிலும் வாகனங்கள் நிற்க 200 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி மாநாடு சிறப்புற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதை எல்லாம் தாண்டி மாநாடு வெற்றி என்பது, மாநாட்டுக்கு முதல் நாள் இரவு 12.30 மணி தாண்டியும் மக்கள் குவிவது தான். அதிலும் கைகுழந்தைகளோடு கட்சி சார்பற்ற மக்கள் தொடர்ந்து வந்து பார்ப்பது தான் "வெற்றி".
# திருச்சி, திருப்புமுனை தான்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக