பிரபலமான இடுகைகள்

சனி, 10 மே, 2014

இரு சக்கரப் பேரணி - புல்லட் பிரச்சாரம் ஆனது...

ஆண்டிமடத்தில் பெரிய பரிசு காத்திருந்தது...
ஆண்டிமடம் போன உடன் திறந்த வாகனத்தில் உரை நிகழ்த்தி, பேரணியை துவக்கி வைத்து விட்டு இறங்கினேன். பைக் அங்கே நிற்கிறது என்றார்கள், கூட்டத்தின் முன் பகுதியை காட்டி. முன்னே சென்றேன். அங்கே கம்பீரமாக நின்றது அந்த பரிசு.

Royal Enfield Bullet. பார்த்தவுடன் சற்று மிரட்சி தான். சின்ன பைக்குகளை ஓட்டிய பழக்கம் இருக்கிறது, புல்லட்? இந்த புல்லட் ஜெயங்கொண்டம் மகேஷுடையது. ஏற்கனவே மகேஷ் வாங்கிய போது, கொண்டு வந்து காட்டிய அன்று 50 மீட்டர் ஓட்டி பார்த்த அனுபவம் மட்டும் தான்.

பட்டன் ஸ்டார்ட், தட் தட் தட் என ரெடியானது. இன்று ஒருவரும் பின்னால் உட்காரவில்லை (துணியவில்லை). கிளம்பியது பேரணி. சின்ன பைக்குகளை விட இதுவே ஓட்டுவதற்கு இலகுவாகவும் லாகவாகமும் இருந்தது. எளிதாக சைக்கிளை கையாளுவது போல வளைவுகளில் ஒத்துழைத்தது.

நிறுத்தும் இடங்களில் மட்டும் சிரமப்பட்டேன். அதுவும் போக போக சரியானது. என் கல்லூரி நண்பர் ஹரிகிருஷ்ணா ஒரு குழுவோடு பைக்கிலேயே கொடைக்கானல், இமயமலை போய் வந்த போது கிண்டல் அடித்தது உண்டு. இப்போது தான் பைக்கின் அருமை புரிந்தது.

100 கி.மீ போனதே தெரியவில்லை. பேரணி சிறப்பாக நடந்தேரியது. 20-ந் தேதி திருமானுர் ஒன்றியம், 21-ந் தேதி வேப்பூர் ஒன்றியம் என புல்லட் பயணம் தொடர்ந்தது. அதில் நிறைய சுவாரஸ்ய சம்பவங்கள். திருமானூரில் வி.சி.கட்சி மா.செ அன்பானந்தம் பின் சீட்டில் அமர்ந்தார். ஒ.செ கென்னடி ஒரு பைக்கை ஓட்டி வழிகாட்டியானார்.

வேப்பூரில் பத்து நிமிடம் பின்னால் உட்காருகிறேன் என்று உட்கார்ந்த ஒ.செ அண்ணன் குன்னம் ராசேந்திரன் மதியம் வரை இறங்கவில்லை, "புல்லட் கம்பர்ட்டா இருக்குங்க" என்று. பெரம்பலூர் மா.செ அண்ணன் துரைசாமி ஒரு பைக்கில். வெங்கடாசலம் ஒரு பைக்கில், வெற்றிசெல்வன் ஒரு பைக்கில், தங்கதுரை ஒரு பைக்கில் என உட்கார்ந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் போல் இனிமையான பைக் ரைட்                 

                        .

ஆங்காங்கு நிறுத்தி இளநீர், மோர், ஜூஸ் என வழங்கி பயணக் களைப்பு தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள் கழகத் தோழர்கள். சில இடங்களில் எம்.எல்.ஏ-வை பின்னால் காரில் எதிர்பார்த்து, எங்களை போக சொல்லி கையாட்டி விட்டு தடுமாறிய காட்சிகள் வெயிலின் சூட்டை மறந்து சிரிக்கச் செய்தன

                        .

மைக் வைத்து பேச சொல்லும் இடங்களில் பைக்கிலிருந்து இறங்கப் போனால், நீண்ட தூரம் பயணம் செய்வதால், வேண்டாம் உட்கார்ந்து கிட்டே பேசுங்க என சொல்ல, வேன் பிரச்சாரம் போல பைக் பிரச்சாரம் அமைந்தது.

முதல் நாள் வெயிலின் கொடுமையாலும், புழுதி பறந்து கண்களில் தூசி நிரம்பியதாலும் அண்ணன் ஞானமூர்த்தி தனது "ரேபான்" கிளாஸை இரவல் கொடுத்தார். அது தான் மீதி மூன்று நாளும் கைக்கொடுத்தது. நல்லாத் தான் இருக்கு.

எப்படியோ பிரச்சாரப் பயணம் புல்லட் மீது ஒரு காதலை ஏற்படுத்திவிட்டது...

வியாழன், 8 மே, 2014

இரு சக்கரப் பேரணி - "ஓட்டுவீங்க இல்ல?".

கலவர முகத்தோடு அண்ணன் ஞானமூர்த்தி கேட்டார், "ஓட்டுவீங்க இல்ல?". மையமாக தலையசைத்தேன். பக்கத்தில வர்ற பைக் எல்லாம் இடிக்கிற மாதிரி வரும் போது நீங்க மட்டும் பதில் சொல்லிடுவீங்களா ?

அப்போது பார்த்து அண்ணன் செல்வராஜ், "கியர்லாம் பின்னாடி அமுக்கனும்" என்றார். இதற்குள் கிளட்ச் கைப்பழக்கமானது. ஒரு ஃபர்லாங்கில் செந்துறை பஸ்ஸ்டாண்ட் அடைந்தோம். இதற்குள் கியர் கால்பழக்கத்திற்கு வந்துவிட்டது. நிதானமாக 25 கி.மீ வேகத்தில் வாகனத்தை செலுத்தினேன்.

எங்கள் பைக்கிற்கு இணையாக ஒரு பைக், மற்ற பைக்குகள் பின்னால் என பேரணி ஒழுங்கானது. சிறுதெருவை காட்டினார் அண்ணன் ஞானமூர்த்தி,"உள்ளே போவதா?" என்றார். "மெயின் ரோடு மட்டுமே" என்றேன். என் கஷ்டத்தை உணர்ந்தவராக, மற்றோரை நேரே வரக் கைக்காட்டினார்.

செந்துறை தாண்டியது. பைக் பழகியிருந்தது. "பேரணியில் நான் தொடர்ந்தால், ஒருவரை ஒருவர் முந்தாமல் வருவார்கள் போலிருக்கே?" என்று கேட்டேன். "உண்மை தான். உங்க பின்னாடியே வருவாங்க. ஸ்பீடையும் கண்ட்ரோல் பண்ணிட்டீங்க. ஓட்டுங்க, பேசிப்போம்"என்றார் அண்ணன் ஞானமூர்த்தி. அவருக்கும் நம்பிக்கை வந்துடுச்சி போல.

சேடக்குடிகாடு, மருவத்தூர் கிராமங்களை மெயின் ரோடிலேயே கடந்தோம். பொன்பரப்பிக்கு முன்பாக சிறுகளத்தூர் செல்ல திருப்பினோம். சிறுகளத்தூரில் சந்துபொந்துகள் வழியாக செல்ல வேண்டிய நிலை. சர்வசாதாரணமாக பைக் செல்ல ஆரம்பித்தது. 

உச்சி வெயிலில் முந்திரிக்காடுகளின் வழியே புகுந்து புறப்பட்டன பைக்குகள். கீழமாளிகை, மருங்கூர், மாத்தூர் வழியாக கோட்டைக்காடு கிராமத்தை அடைந்த போது மதியம் 2.30. மதிய உணவு நேரம். அது கோட்டைக்காடு முனியப்பா கோவில். சுற்றிலும் இருந்த மர நிழலில் அமர்ந்தனர். உணவு வந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட 80 கிமீ பயணம். சாலையில் இருந்த புழுதி அனைத்தும் வந்தோர் உடையிலும், தலை முடியிலும். செம்மண் பூமி. என் உடை செக்கக்செவேல் என ஆகியிருந்தது. புதுத் துண்டை தண்ணீரில் நனைத்து தலையை துடைத்தேன், துண்டு சிகப்பு நிறமானது. நீரில் அலசி முகம் துடைத்தேன். மீண்டும் சிகப்பானது.

அந்தக் கோவில் புகழ் வாய்ந்தது. முனியப்பா பலருக்கும் குலதெய்வம். அப்போது தான் ஒரு குடும்பம் படையல் போட்டிருந்தனர். எங்கள் முகத்தைப் "பார்த்து" பிரசாதம் கொடுத்தனர். புளிசாதம், தயிர்சாதம். திருப்தியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், பிரசாதம் கொடுத்தவரை கூப்பிட்டு அறிமுகப்படுத்தினார்கள்.

"இவர் தான் எங்க எம்.எல்.ஏ". சோற்றுக் கையோடு வணக்கம் வைத்தேன். அவர் மகிழ்ச்சியோடு, "நாங்களும் கழகம் தாங்க, கள்ளக்குறிச்சி" என்றார். வயிறார நன்றி சொன்னேன். உணவோடு பயணத்தை நிறைவு செய்தேன். 19.04.2014 ஆண்டிமடம் பேரணி.

முதல் பயணத்தில் சிறப்பாக பைக் ஓட்டியதற்கு (பெரிய?)பரிசோடு காத்திருந்தார்கள்.......(தொடரும்)

புதன், 7 மே, 2014

இரு சக்கரப் பேரணி - கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல்...

முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மட்டும் தான் இரு சக்கரப் பேரணி நடத்துவதாக திட்டமிட்டிருந்தார்கள், செந்துறையில். கழகத் தோழர்களையும் கலந்து கொள்ள சொன்னேன். முதலில் திட்டமிட்ட தேதி மாறி, 17.04.2014 அன்று நடத்துவதென முடிவானது.

அன்று காலை வேறு நிகழ்ச்சி இல்லாததால், நானே வந்து துவங்கி வைக்கிறேன் என்று சொன்னேன், கழகத் தோழர்கள் கூடுதலாக கலந்து கொள்வார்கள் என்பதால். காலையில் பேரணியை துவக்கி வைக்க சென்றேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தலைவரின் தனி செயலாளர் அண்ணன் மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் மற்றும் கருத்தியல் செயலாளர் சிபிசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடியசைத்து துவக்கி வைக்கும் எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன்.

பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் பூ.செல்வராஜ் தனது பைக்கை கொண்டு வந்து நிறுத்தினார், ஹீரோ ஹோண்டா. போட்டோ செஷன் என ஏறி உட்கார்ந்தேன். "ஓட்டப் போகிறீர்களா ?" என்று கேட்டார் ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி.

                    Photo: முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மட்டும் தான் இரு சக்கரப் பேரணி நடத்துவதாக திட்டமிட்டிருந்தார்கள், செந்துறையில். கழகத் தோழர்களையும் கலந்து கொள்ள சொன்னேன். முதலில் திட்டமிட்ட தேதி மாறி, 17.04.2014 அன்று நடத்துவதென முடிவானது.

அன்று காலை வேறு நிகழ்ச்சி இல்லாததால், நானே வந்து துவங்கி வைக்கிறேன் என்று சொன்னேன், கழகத் தோழர்கள் கூடுதலாக கலந்து கொள்வார்கள் என்பதால். காலையில் பேரணியை துவக்கி வைக்க சென்றேன். 

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக தலைவரின் தனி செயலாளர் அண்ணன் மடிப்பாக்கம் வெற்றிசெல்வன் மற்றும் கருத்தியல் செயலாளர் சிபிசந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர். கொடியசைத்து துவக்கி வைக்கும் எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன்.

பொதுக்குழு உறுப்பினர் அண்ணன் பூ.செல்வராஜ் தனது பைக்கை கொண்டு வந்து நிறுத்தினார், ஹீரோ ஹோண்டா. போட்டோ செஷன் என ஏறி உட்கார்ந்தேன். "ஓட்டப் போகிறீர்களா ?" என்று கேட்டார்  ஒன்றிய செயலாளர் அண்ணன் ஞானமூர்த்தி.

"ஆமாம்" என்றேன். "நான் பின்னால் உட்காரட்டுமா?"என்று கேட்டார் அண்ணன் ஞானமூர்த்தி. "உட்காருங்கள்" என்றேன். பத்திரிக்கையாளத் தோழர்கள் புகைப்படம் எடுத்தனர். அண்ணன் சிபிசந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அண்ணன் வெற்றிச்செல்வன் தனது வழக்கமான நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்து கொண்டிருந்தார். "இன்னாண்ணே, ஓட்டப் போறியா ?" என்று தனது டிரேட்மார்க் சென்னைத் தமிழில் கேட்டார்.

"ஆமாண்ணே" என்றேன். வெளியே தெம்பாக சொல்லிவிட்டேன். பைக் ஓட்டி ரொம்ப நாளானது நமக்கு தானே தெரியும். 1993-1996ல் ஒரு பஜாஜ் M-80 வாகனத்தை பிழிந்து எடுத்திருக்கிறேன். பிறகு ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக்கை கொஞ்சம் நாள் ஓட்டினேன்.

1996 டிசம்பரில் மகேந்திரா அர்மடா ஜீப் வாங்கிய பிறகு, இரு சக்கர வாகனம் ஓட்டும் வாய்ப்பு குறைந்து விட்டது. டச் விட்டுப் போய் விட்டது, அதிகம் ஓட்டவில்லை, ஆனால் அவ்வப்போது ஓட்டுவதால் மறக்கவில்லை.

சரி, சொல்லியாச்சி, செந்துறை நகர் வரை ஓட்டிவிடுவோம் என ஸ்டார்ட் செய்தேன். கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல், சற்று தடுமாறினேன். பைக் லேசாக வளைந்து, வளைந்து கிளம்பி நேர் கோட்டுக்கு வந்தது. இப்போது தான் அண்ணன் ஞானமூர்த்திக்கு நிலவரம் புரிந்தது, முகம் கலவரம் ஆனது.....

"ஆமாம்" என்றேன். "நான் பின்னால் உட்காரட்டுமா?"என்று கேட்டார் அண்ணன் ஞானமூர்த்தி. "உட்காருங்கள்" என்றேன். பத்திரிக்கையாளத் தோழர்கள் புகைப்படம் எடுத்தனர். அண்ணன் சிபிசந்தர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அண்ணன் வெற்றிச்செல்வன் தனது வழக்கமான நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்து கொண்டிருந்தார். "இன்னாண்ணே, ஓட்டப் போறியா ?" என்று தனது டிரேட்மார்க் சென்னைத் தமிழில் கேட்டார்.

"ஆமாண்ணே" என்றேன். வெளியே தெம்பாக சொல்லிவிட்டேன். பைக் ஓட்டி ரொம்ப நாளானது நமக்கு தானே தெரியும். 1993-1996ல் ஒரு பஜாஜ் M-80 வாகனத்தை பிழிந்து எடுத்திருக்கிறேன். பிறகு ஒரு ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக்கை கொஞ்சம் நாள் ஓட்டினேன்.

1996 டிசம்பரில் மகேந்திரா அர்மடா ஜீப் வாங்கிய பிறகு, இரு சக்கர வாகனம் ஓட்டும் வாய்ப்பு குறைந்து விட்டது. டச் விட்டுப் போய் விட்டது, அதிகம் ஓட்டவில்லை, ஆனால் அவ்வப்போது ஓட்டுவதால் மறக்கவில்லை.

சரி, சொல்லியாச்சி, செந்துறை நகர் வரை ஓட்டிவிடுவோம் என ஸ்டார்ட் செய்தேன். கிளட்ச் கண்ட்ரோல் கிடைக்காமல், சற்று தடுமாறினேன். பைக் லேசாக வளைந்து, வளைந்து கிளம்பி நேர் கோட்டுக்கு வந்தது. இப்போது தான் அண்ணன் ஞானமூர்த்திக்கு நிலவரம் புரிந்தது, முகம் கலவரம் ஆனது..

(தொடரும்...)

திங்கள், 5 மே, 2014

ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

ஓட்டுக்கு பணம் வாங்குவது, கொடுப்பது குறித்த விவாதம் உச்சம் தொடுகிறது. 

ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள் “எல்லோரும்”, ஓட்டை விலைக்கு விற்கிறார்கள் என்று சொல்வது சரி கிடையாது. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போர், தினம் கூலி வேலைக்கு சென்றால் தான் உணவு நிச்சயம். ஓட்டு போட செல்ல ஒரு நாள் வேலையை இழக்கிறார்கள்.

சம்பளம் இல்லையென்றால், அன்றைய குடும்ப நிலை அதோகதி தான். அவர்கள் வங்கி கணக்கு உள்ளவர்கள் கிடையாது, எனவே கையிருப்பு இருக்காது. கூடுதல் பணம் இருந்தால், அது தான் டாஸ்மாக்கிற்கு போய்விடுமே. இவர்களை பொறுத்த வரை இந்தப் பணம் அன்றைய கூலி.

பொதுவாக மத்திய தட்டு மக்கள் மன நிலை, ஒரு சில விஷயங்களில் ஒரே நிலையில் இருக்கும். பொருட்காட்சிகளில் பார்த்திருக்கலாம், பாப்கார்ன் இயந்திரம் போன்ற உணவுப் பொருட்கள் தயாரிப்பு ஸ்டாலில், சாம்பிள் கொடுப்பார்கள். அங்கு கூட்டம் மொய்த்தெடுக்கும்.

இலவசப் பொருட்கள் குறித்த மன நிலை அது தான். தங்களுக்கு தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி தான் விடுவோமே என்ற எண்ணம். இதை கடந்த ஆட்சிக் காலத்தில் நேரடியாக உணர்ந்தேன், இலவச தொலைக்காட்சி பெட்டி வழங்குவதில்.

வீட்டில் ஹாலில், படுக்கையறையில், டைனிங் ஹாலில் என்று தனித்தனி டி.வி வைத்திருப்பார்கள். அவர்கள் தான் முதல் ஆளாகக் கேட்பார்கள், “எங்களுக்கு எப்போ டி.வி தருவீங்க?”. இவர்களில் எல்லோரும் இலவசம் என்பதால் மாத்திரம் கேட்பதில்லை.

இது நாம் கொடுக்கும் வரிப்பணத்தில், திருப்பி தரும் இலவசப் பொருள் தானே, எனவே நமக்கு கேட்கும் உரிமை இருக்கிறது என்ற எண்ணம் தான். வரிசையில் நின்று வாங்கவும் தயங்குவது இல்லை. உரிமையோடு கேட்கவும் தயங்குவது இல்லை.

அது போன்று நடுத்தர வர்க்கத்தின் மனநிலை, ஏன் நாம் செலவு செய்து, ஆட்டோவிலோ, பைக்கிலோ சென்று வாக்களிக்க வேண்டும்? யாரோ ஆட்சிக்கு வரப்போகிறார்கள், யாரோ சம்பாரிக்கப்போகிறார்கள் அதற்கு நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணமும்.

அன்றைய சம்பளமோ, ஆட்டோ செலவோ ஏதோ ஒன்றை கொடுத்தல் அவர்களை வாக்களிக்க வர செய்ய தூண்டும் என்றால் ஓட்டுக்கு பணம் கொடுப்பது சரியே...

அதை அரசியல் கட்சிகள் கொடுப்பது தான் தவறு. இந்த ஆண்டு தேர்தல் நடத்த ரூபாய் 3500 கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் கணக்கிட்டுள்ளது. 

கட்சிகள் செய்யும் செலவு ரூபாய் 30,000 கோடியை தாண்டி விடும். 81.45 கோடி வாக்காளர்களுக்கு செலவுக்கு அரசே கொடுத்துவிட்டால், ரூபாய் 200 கொடுத்தால் 16,290 கோடி செலவாகும்.

# ஆம், அரசே பணம் கொடுத்து விடலாம் !

புதன், 30 ஏப்ரல், 2014

தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்....

இந்திய ஜனநாயகத் திருவிழாவின், தமிழக வகையறாவின் மண்டகப்படி முடிவுக்கு வந்ததுள்ளது...

ஊர் திருவிழா என்றால், ஒரு வாரம் கொண்டாடப்படும். கோவில் சார்ந்த நிகழ்வுகளால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருவிழாவுக்கான திடீர் கடைகளில் மக்கள் முண்டியடிப்பார்கள். ஒரு சந்தை நிகழ்வாக, பணப்பரிமாற்றம் இருக்கும்.

இங்கும் அது தான் தேர்தலில். தேர்தலுக்கான அடிப்படைப் பணி கட்சிகளின் சின்னத்தை விளம்பரப்படுத்துவதில் துவங்கும். நன்கு பிரபலமான சின்னமாக இருந்தாலும், அதிக இடங்களில் வரையப்படும். காரணம், அதுவே ஒரு பிரம்மையை ஏற்படுத்தும் என்பதால்.

என்ன பிரமையை ஏற்படுத்திவிடும் என சிலர் நினைக்கலாம். புனைவுச் செய்திகளை வெளியிட்டு, பத்திரிக்கைகள் குறிப்பிட்ட சதவீத படித்தோர் மத்தியில் ஏற்படுத்த முயற்சிப்பதைப் போல், சுவர் விளமபரம் பார்த்து கட்சிகளின் வலிமையை முடிவு செய்யும் சிலர் உள்ளனர்.

அரசியல் கட்சி நிர்வாகிகளிலேயே சிலர், அந்த ஊரில் அந்த சின்னம் மட்டும் தான் இருக்கு, வேற கட்சிக்கு வேலை இல்ல போல என சொல்பவர்கள் உண்டு. இதனால் சுவர் பிடிப்பதிலேயே அடிதடி துவங்கிவிடும். இதனால் சில இடங்களில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாகவே, சுவரில் இடம் பிடிக்கத் துவங்கி விடுவர்.

வீட்டு உரிமையாளர் ஒப்புதல் பெற்றே, விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் நடைமுறை இருந்தாலும், மிரட்டி விளம்பரம் செய்யும் கட்சிகளும் உண்டு. அடிதடி நடந்து காவல்துறை வரை சென்று வழக்காகும் நிலை இன்னும் இருக்கிறது. "இரண்டு கட்சியினரும் தெரிந்தவர்கள், ரெண்டு பேரும் படம் போட்டுக்குங்க" என்ற நிலையும் உண்டு.

இது ஓவியர்களுக்கு ஒரு முக்கியத் தொழிலாக இருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது ஓவியர்கள் குறைந்து விட்டதால், சின்னம் போடும் பணி முடிக்க மிகச் சிரமமாகி விடுகிறது. புதிய சின்னம் பெறுகிறவர்களுக்கு, குறுகிய நாட்களில் சுவர் விளம்பரம் முடிப்பது பெரும் பணி.

எப்படியும் சுவர் விளம்பரத்திற்கு, ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் அனைத்து வேட்பாளர்களுடையதையும் கூட்டிக் கணக்கிட்டால், இரண்டு கோடியை தாண்டும். பதினைந்து நாட்கள் கூத்திற்கு, இந்த செலவு கூடுதல் தானே ?

கடந்தத் தேர்தலில் இருந்து, நகராட்சிப் பகுதிகளில், தேர்தல் கமிஷனால் சுவர் விளம்பரம் தடை செய்யப்பட்டு விட்டது. இதனால் நகராட்சிப் பகுதிகளில் சுவர்கள் “பளீச்” எனக் காட்சியளிக்கிறது. சுவர் விளம்பரம் இல்லாததால், நகராட்சியில் உள்ளோர் வாக்களிக்கத் தடுமாறவில்லை.

எனவே இதனை கிராமங்களுக்கும் அமல்படுத்தி, சுவர் விளம்பரத்தை தடை செய்தால், வீட்டு சுவர்கள் கறை படாமல் தப்பிக்கும். சண்டை, வருத்தம், வழக்குகள் வராது. வெட்டிச் செலவு குறையும். தூய்மை தொடரும். ஊரும் பளீச் என இருக்கும்.

# தேர்தல் ஆணையப் பார்வைக்கு....

திங்கள், 28 ஏப்ரல், 2014

நம்ம சின்னம், என்ன சின்னம் ?

வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.

அப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.

பெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.

மகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.

வேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.

காரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ?” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ?” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா?” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.

கலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கடந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.

“ஏணி” சின்னம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஏணி கேரளாவில் முஸ்லீம் லீக்கின் சின்னமாக இருக்கிறது. அவர்கள் வேட்பாளர் நிறுத்தினால் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். அதற்கு மனு பரிசீலனை நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல். வேறு சின்னம் கேட்டால், தற்போது உறுப்பினர் என்ற முறையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இரண்டு நாட்களாக “தொலைக்காட்சி பெட்டி” பெறலாமா என்ற விவாதம் நிர்வாகிகள் மட்டத்தில் இருந்தது. ஆனால் “ஏர்கூலர்” சின்னம் “டீவி” போல இருப்பதாக தெரிய வந்தது. அது குறித்து அண்ணன் எம்.ஆர்.கே.பியோடும் என்னோடும் விவாதித்தார். சின்னப் பட்டியலில் இருந்த “ஏர்கூலர்” படத்தை அம்மாவிடம் காட்டினார்,”இது என்னம்மா?”. யோசிக்காமல் சொன்னார் அம்மா,”டீவி பெட்டி”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி சிரித்தார். “வேறு சின்னம் பார்க்கலாம்ணே. இவரை போன்ற முதியவர்கள் பார்வைக்கு இப்படி தான் தெரியும்” என்றேன். அண்ணன் திருமா அம்மாவை பார்த்து புன்னகைத்து, அடுத்த சின்னத்தைக் காட்டினார். அம்மா பளிச்சென்று சொன்னார்,”இது மோதிரம்”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி மோதிரம் போடுவது போல விரலை நீட்டி சைகைக் காட்டிக் கொண்டே “ஃபைனல்” என்றார். அண்ணன் திருமா வெடித்து சிரித்தார். படிவத்தை எடுத்து எழுதினார்,”மோதிரம்”. அம்மா அப்பாவியாக அமர்ந்திருந்தார்.

# வெற்றிக்கு நிச்சயதார்த்த “மோதிரம்” !

                             Photo: வேட்புமனு தாக்கலுக்கு முதல் நாள், அண்ணன் திருமா அவர்களின் தலைமை தேர்தல் ஏஜெண்ட் தனக்கோடியும், அரசு சார்ந்தப் பணிகளை கவனித்து வரும் அண்ணன் குணவழகனும் சந்தித்தனர். என்னிடம் முன்மொழிதல் கையொப்பம் பெற்றனர்.

வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளரோடு நான் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர். வேட்பாளரோடு நான்கு பேர் உடன் செல்லலாம். கடலூர் மாவட்ட செயலாளர் அண்ணன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் துரைசாமி, முஸ்லீம் லீக்கின் மாநில துணை செயலாளர் ஷபிகூர் ரகுமான் ஆகியோரோடு நானும்.

அப்போது அண்ணன் தனக்கோடி சொன்னார்,”பாவம் அம்மா. அவரும் வர விருப்பப்படுகிறார். அண்ணனிடம் சொன்னேன். கூட்டணிக் கட்சியோர் அவசியம் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார். அம்மாகிட்ட என்ன சொல்றதுன்னு தெரியல”. அம்மா என்றால் அண்ணன் திருமா அவர்களின் தாயார்.

பெரியம்மாள் அசல் கிராமத்து பெண்மணி. அப்பாவியான பழக்க வழக்கம். எல்லோரிடமும் எளிமையாக வெள்ளந்தியாகப் பேசுவார். மகன் மீது அளவு கடந்தப் பாசம். கொஞ்ச நேரம் பழகிவிட்டால், மகன் திருமணம் செய்து கொள்ளாத வருத்தத்தை பகிர்ந்துக் கொள்வார். தலைவர் கலைஞர் முதற் கொண்டு அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தவர்.

மகன் வருடம் முழுதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழகம் முழுதும் பயணிப்பதால் சந்திக்கும் வாய்ப்பு குறைவு. அதனால் பக்கத்து ஊர்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் இவர் அங்கு ஆஜராகிவிடுவார், மகன் முகம் பார்க்க. கட்சி நிகழ்ச்சியோ, தேர்தல் பணியோ தன்னால் முடிந்த வரை சுற்றி வருவார்.

வேட்பு மனு அன்று, சிதம்பரத்தில் அண்ணன் எம்.ஆர்.கே.பி அவர்களோடு வாக்கு சேகரித்து விட்டு உடன் வந்தார் அண்ணன் திருமா. அவர்களோடு முஸ்லீம் லீக் ஷபீகூரும் வந்துவிட்டார். பெரம்பலூர் மா.செ துரைசாமி பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் பிரபு மனு தாக்கலுக்கு சென்று வருவதாக தெரிவித்திருந்தார்.

அண்ணன் துரைசாமிக்கு ஃபோன் செய்தேன். அவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்தார், வர 30 நிமிடம் ஆகிவிடும். அதற்குள் அண்ணா, பெரியார், அம்பேத்கர், காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து கலெக்டரேட் செல்ல தயாராகிவிட்டனர்.

காரில் ஏறியவுடன் அண்ணன் திருமா கேட்டார்,”துரைசாமி வந்துட்டாரா ?” “அவர் வர 30 நிமிடம் ஆகிவிடும்” என்றேன். “வேறு யாரை கூட்டி செல்வது ?” என்று கேட்டார். “அம்மா வர விருப்பப்பட்டாராம். அவரை அழைத்து சென்று விடலாம்” என்றேன். “சரியா வருமா?” என்றார். “இப்போ வேறு யாரையும் தேட முடியாது. திமுக சார்பில் இருவர், முஸ்லீம் லீக் சார்பில் ஒருவர், விசிக சார்பில் இருவர் என சரியாக இருக்கும்”,என்றேன்.

கலெக்டரேட் வாசலில் இறங்கினோம். அங்கே மகனின் மனுதாக்கலுக்கு டெபாசிட் தொகையை வழங்க காத்திருந்தார் தாயார். அப்படியே அவரை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தோம். மனுதாக்கல் செய்ய சின்னத்தை குறித்துக் கொடுக்க வேண்டிய நிலை. கட்ந்த முறை போட்டியிட்ட ஸ்டார் சின்னம் இப்போது பட்டியலில் இல்லை, புது சின்னம் கோர வேண்டும்.

“ஏணி” சின்னம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டோம். ஏணி கேரளாவில் முஸ்லீம் லீக்கின் சின்னமாக இருக்கிறது. அவர்கள் வேட்பாளர் நிறுத்தினால் கொடுக்க வேண்டி இருக்கும் என்றார். அதற்கு மனு பரிசீலனை நாள் வரை காத்திருக்க வேண்டிய சூழல். வேறு சின்னம் கேட்டால், தற்போது உறுப்பினர் என்ற முறையில் முன்னுரிமை வழங்கப்படும்.

இரண்டு நாட்களாக “தொலைக்காட்சி பெட்டி” பெறலாமா என்ற விவாதம் நிர்வாகிகள் மட்டத்தில் இருந்தது. ஆனால் “ஏர்கூலர்” சின்னம் “டீவி” போல இருப்பதாக தெரிய வந்தது. அது குறித்து அண்ணன் எம்.ஆர்.கே.பியோடும் என்னோடும் விவாதித்தார். சின்னப் பட்டியலில் இருந்த “ஏர்கூலர்” படத்தை அம்மாவிடம் காட்டினார்,”இது என்னம்மா?”. யோசிக்காமல் சொன்னார் அம்மா,”டீவி பெட்டி”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி சிரித்தார். “வேறு சின்னம் பார்க்கலாம்ணே. இவரை போன்ற முதியவர்கள் பார்வைக்கு இப்படி தான் தெரியும்” என்றேன். அண்ணன் திருமா அம்மாவை பார்த்து புன்னகைத்து, அடுத்த சின்னத்தைக் காட்டினார். அம்மா பளிச்சென்று சொன்னார்,”இது மோதிரம்”.

அண்ணன் எம்.ஆர்.கே.பி மோதிரம் போடுவது போல விரலை நீட்டி சைகைக் காட்டிக் கொண்டே “ஃபைனல்” என்றார். அண்ணன் திருமா வெடித்து சிரித்தார். படிவத்தை எடுத்து எழுதினார்,”மோதிரம்”. அம்மா அப்பாவியாக அமர்ந்திருந்தார்.

# வெற்றிக்கு நிச்சயதார்த்த “மோதிரம்” !

புதன், 23 ஏப்ரல், 2014

ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன்...

ஆலத்தூர் ஒன்றியத்தில் திமுக மற்றும் கூட்டணி நிர்வாகிகளை வேட்பாளர் அண்ணன் திருமா சந்திக்கும் நிகழ்ச்சி.

முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டிருந்தனர். முதல் வரிசையில் ஒருவர் தனித்து தெரிந்தார். பேசுவோரின் பேச்சைக் கேட்டு ஏக ரெஸ்பான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அரசியல் நிகழ்ச்சிகள் என்றால் இது போல் ஒருவர் அவசியம் இருப்பர்.

முகத்தில் காட்டிய ரெஸ்பான்ஸ் தாண்டி, கைகளிலும் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்தார். பேசுவோரின் கருத்துகளை நாட்டியம் போல வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கண்களில் டாஸ்மாக் எபெக்ட். யாராவது கண்டித்தால், அவர்களை பதிலுக்கு கண்டித்துக் கொண்டிருந்தார்.

இந்தப் பகுதியில் மலையப்பநகர் என்ற பகுதியில் நரிக்குறவர் சமுதாயத்தினர் வசிக்கின்றனர். இவர்களது கோரிக்கையை ஏற்று அண்ணன் திருமா அந்தப் பகுதியில் ஒரு சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். அது அவர்களது நீண்ட நாள் கோரிக்கை.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அங்கு வந்திருந்த நரிக்குறவ சமுதாயத்தினர் அண்ணன் திருமா அவர்களுக்கு, தங்கள் வழக்கப்படி “பாசிமணி மாலை” அணிவித்தனர். 

அப்போது நமது ஆள், அவரும் அணிவிப்பது போல ஆக்ட் கொடுத்தார்.

மாவட்ட செயலாளர் அண்ணன் துரைசாமி பேசும் போது, காமெடி கவுண்ட்டர் கொடுத்தார் நமது ஆள். நான் பேசும் போது, என்னைப் பார்த்து சைகை காட்டினார். பதிலுக்கு சிரித்து வைத்தேன்.

அண்ணன் திருமா நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மா.செ அண்ணன் துரைசாமி, ஒ.செ அண்ணன் கிருஷ்ணமூர்த்தி என நிர்வாகிகளுக்கு சால்வை போடும் போது, தானும் தலையை நீட்டினார் நம்ம ஆள். அணிவித்த சால்வையை பார்த்து திருப்தி ஆனார் .

திடீர் பிரமுகர் ஆன சந்தோஷத்தில் எங்களோடு உணவருந்த வந்தார். அங்கும் அதையும் இதையும் பேசி செண்டர் ஆப் அட்ராக்ஷன் ஆனார். உணவருந்தி வெளி வந்தோம். வெளியே வந்தவுடன் என்னை உற்றுப் பார்த்தார். “ஆகா, சிக்கிக்கிட்டோம்”.

“ஓட்டு போட்ட பிறகு, இன்னைக்கு தான் பார்க்கிறேன் எம்.எல்.ஏ”. நான் பேசுவதற்குள் முந்தினார் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காட்டுராஜா. “சித்தப்பா, அவரு ஊரோட நம்ம ஊருக்கு தான் அதிகம் எம்.எல்.ஏ வந்திருப்பாரு” என்று சொல்லி நான் அந்த ஊரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மேற்கொண்ட பணிகளை பார்வையிட வந்ததையும், திருமணம், துக்க நிகழ்வுகளுக்கு வந்ததையும் பட்டியலிட்டார்.

“அப்படியா?” நம்ம ஆள். “அவரு வந்தப்ப நீ எங்கேயாவது போயிருப்ப, அதுக்கு என்ன செய்யறது?” காட்டுராஜா சொல்ல, “அட, ஆமால்ல” என்றவர் என்னை பார்த்தார். “நான் அரியலூர்ல தான தங்கியிருக்கேன். வரும் போது பார்க்கலாம்” என்றேன்.

இப்போ அவரு கொடுத்தாரு டிவிஸ்ட். “அட அது தெரியும் எம்.எல்.ஏ. நான் தினம் அரியலூர் வருவேன். உங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கற அந்த ஆபிஸால நான் அந்த தெருவுக்கு வர்றதில்ல”. 

“எந்த ஆபிஸ்?” 
“கலால் ஆபிஸ்”

கலால் ஆபிஸ்னா மதுவிலக்கு காவல்துறை அலுவலகம்.

# நான் தான் அவுட். நம்ம ஆள் செம ஸ்டெடி தான் !