பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...
-
இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப...
வெள்ளி, 29 மார்ச், 2013
அன்புள்ள விகடன் உரிமையாளர் அவர்களுக்கு
அன்புள்ள ஆனந்த விகடன் உரிமையாளர் அவர்களுக்கு, வணக்கம்.
எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகவே தாங்கள் பத்திரிக்கைகளை நடத்தி வருவதற்கு மிக்க நன்றி.
வாராவாரம், ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடனின் கவர்ஸ்டோரிகளை திமுகவிற்கே ஒதுக்குவது குறித்து மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவிக்கவே இந்தக் கடிதம்.
அதிலும் எதிர்கட்சி அந்தஸ்த்தை கூட திமுக இழந்ததற்கு தங்களது பத்திரிக்கைகளே காரணம் என்ற பெருமிதம் உங்கள் மனதில் இருந்தாலும், திமுகவை மக்கள் மறந்துவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு செயல்படுவது தங்கள் பெருந்தன்மை.
ஜெயலலிதா ஆட்சி அமைந்து தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடும் சூழலில் அவர்களை விமர்சிப்பது இயலாத காரியம்.
தமிழக மக்களும் ஆனந்த வெள்ளத்தில் மிதந்து கொண்டு இருப்பதால், மக்களுக்கு பிரச்சினையுமில்லை, அது குறித்து எழுத வேண்டிய தேவையும் இல்லை.
நாட்டில் மற்ற எல்லாக் கட்சிகளும் மக்களிடம் சென்று, மக்களோடு வாழ்ந்து, மக்கள் மொழியில் பேசி, மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கும் சூழலில், திமுக-வை வழிநடத்த வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது, மறுக்க முடியாது.
அதிலும் கலைச்சேவை புரிய ஆரம்பிக்கப்பட்ட "டைம்பாஸ்" இதழையும், பசுமை விகடனையும் கூட இந்தப் பணியில் ஈடுபடுத்தும் போது தான் தாங்கள் மிக உயர்ந்து நிற்கிறீர்கள்.
இன்னும் "சுட்டி விகடன்" மட்டுமே பாக்கி என நினைக்கிறேன்.
இந்த வார ஆனந்தவிகடனில் கட்டுரை வெளியிட்டு "திக்குத் தெரியாதக் காட்டில் தவிக்கும் திமுக"விற்கு கலங்கரை விளக்காய் மாறியமைக்கு மனமார்ந்த நன்றி.
நான் முதலில் விளித்துள்ள " அன்புள்ள" என்பது, சிறு வயதில் படித்த "சிரிப்புத்திருடன் சிங்காரவேலு, ரெட்டைவால் ரெங்குடு" போன்றவர்களால் ஏற்பட்ட அன்பு.
அதுபோல, மதிப்பிற்குரிய வாசன் அவர்களுக்காக வணக்கம். எங்கள் தலைவர் கலைஞரைப் போல் நாங்களும் பழைய நினைவுகளை மறக்காதவர்கள்.
வாரம் தவறாமல், கழகத்தவர்கள் படம் மட்டுமே அட்டையை நிறைக்க வேண்டும். அட்டை டூ அட்டை கழகமே கண்ணில் பட வேண்டும்.
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம். DMK will take it.
நன்றி
அன்புடன்
திமுக தொண்டன்
சிவசங்கர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய மற்றும் ஷேர் செய்ய வேண்டிய பதிவு
பதிலளிநீக்குவிகடனைப் பற்றிய ஒரு அதிரடி சர்வே (மக்களின் மனசு ) http://avargal-unmaigal.blogspot.com/2013/03/blog-post_28.html
விக்டன பத்திய உங்க அங்கதம் செம சூப்பர் சார் :-)
பதிலளிநீக்கு