கடந்த வருடத்தில் ஒரு நாள், சட்டமன்ற
கூட்டத் தொடர் அன்று ஒரு
வெள்ளிக் கிழமை. மதியம் பல்லவன்
விரைவு தொடர் வண்டியை பிடித்தேன்.
வழக்கம்
போல் ரயில்பயணத்திற்காக பேண்ட், டி-சர்ட்ல்
இருந்தேன். மூன்று இருக்கை வரிசையில்
நடு இருக்கை எனக்கு. இரண்டு
புறமும் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள்.
ஒருவர்
மூத்த வயதான எம்.எல்.ஏ, இன்னொருவர் புதிய
எம்.எல்.ஏ. இருவரும்
ஒரு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உள்ளூர் அரசியல் பேச
ஆரம்பித்தார்கள். நான் புத்தகத்தை படிக்க
ஆரம்பித்தேன்.
இடையில்
உட்கார்ந்திருந்த நான் இடைஞ்சலாக இருந்தேன்.
மூத்தவர் என்னை " தம்பி, எந்த ஊர்
போறிங்க ?" என்றார். " அரியலூர் அய்யா" என்றேன். " பிஸினஸ் பண்றீங்களா ?" கேட்டார்.
" இல்லிங்க " என்றார்.
புதியவர்
கேட்டார் " எங்கேயோ பார்த்த மாதிரி
இருக்கே ". " ஆமாண்ணே, இன்னைக்கு சபையிலேருந்து தூக்கி வெளியில போட்டாங்களே,
அது நான் தான்" என்றேன்.
அவ்வளவு தான் புதியவர் ஒரு
நாளிதழை விரித்து தீவிரமாக படிக்க ஆரம்பித்தார்.
மூத்தவர்
" எந்த தொகுதி, யார் " என்ற
விபரங்களை கேட்டுக் கொண்டு வந்தார். புதியவர்
என் பக்கம் திரும்பவே இல்லை.
அவர் சங்கடம் உணர்ந்து, அவர்கள்
இருவரையும் ஒன்றாக உட்கார வைத்து,
நான் ஓர இருக்கைக்கு மாறினேன்.
மூத்த எம்.எல்.ஏ
: முன்னாள் அமைச்சர் குளித்தலை பாப்பா.சுந்தரம், புதியவர்
: இன்றைய அமைச்சர் பூனாட்சி.
# ஜாக்கிரதையா
தான் இருந்திருக்காரு....
**************************************
வழக்கம்மா அதிமுக நண்பர்களை கிண்டல் செய்து பதிவு போடறேன்னு சில நண்பர்களுக்கு வருத்தமா இருக்கு. நான் புகழ்ந்து போட்டா அவங்க பதவி போயிடுமேன்னு தான் பார்க்கறேன்
இருந்தாலும் இதை பதிவு செய்திடுறேன்.
அதுவும் ஒரு ரயில் பயணம் தான். அந்த அதிமுக அமைச்சர் வந்து உட்கார்ந்தார். மூன்று தோழர்கள் பைகளை கொண்டு வந்து வைத்துவிட்டு விடை பெற்றனர்.
அவர் சட்டசபையில் திமுகவை கடுமையாக தாக்கி பேசக்கூடியவர். நான் எப்போதும் எதிர்குரல் கொடுப்பவன் அவருக்கு. பேண்ட், டிசர்ட்ல் அடையாளம் தெரியப் போகிறதா என நினைத்து ஐ-பேடை துழாவிக் கொண்டிருந்தேன்.
" என்ன சார் தீவிர ஆராய்ச்சியா" என அவரிடமிருந்து குரல். நிமிர்ந்து பார்த்தேன், என்னை பார்த்து தான் கேட்டார். வணக்கம் சொன்னேன்.
" உங்க கட்சிக்காரங்க திமுகவினரிடம் பேச தயங்குவார்களாயிற்றே என்று தான் தவிர்த்தேன்" என்றேன். " அட இதில என்னங்க இருக்கு, என் கட்சிக்காக நான் பேசறேன், உங்க கட்சிக்கு நீங்க பேசறீங்க " என்றார்.
பேசிக் கொண்டிருக்கும் போதே, ஒரு அதிமுக ச.ம.உமவும் முன்னாள் ச.ம.உவும் அங்கு வந்தனர். அவர்கள் என்னை கவனிக்கவில்லை. என்னை காட்டி கேட்டார் "தெரியுதா ?"
ச.ம.உ என்னை பார்த்து, " இப்ப தான் உங்களைப் பற்றி சொல்லிகிட்டு இருந்தேன், சபையில ரொம்ப திமிறா நடந்துக்கறீங்கன்னு, ஆனாலும் எதிர்கட்சின்னா அப்படி தான் இருக்கனும் தில்லா " என்றார்.
அமைச்சரை பார்த்து சொன்னார்," இப்படி ஆளுங்க இருந்தா தான் சபை கலகலப்பா இருக்கு அண்ணே ".
முன்னாள் ச.ம.உ " ஆளுங்கட்சியா இருக்கும் போது ஆள் இருக்கறதே தெரியாது ? " என்று கேட்டார்.
" எதிர்கட்சியாக இருக்கும் போது தானே வேகமா இருக்கணும் " என்றேன். அமைச்சர் தட்டிக் கொடுத்தார்.
அரிதாக இருந்தாலும் இப்படியும் இருக்கிறார்கள் தான். என்ன, நான் பாராட்டினா பதவி போயிடும் !
( ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் என்னோடு நின்ற காரணத்தினால் அதிமுக ஒன்றிய செயலாளருக்கு பதவி போச்சு. நான் தங்கியிருந்த அரசு விடுதியில் தங்கியிருந்ததால் மாவட்ட செயலாளருடைய பொறுப்பு பறிக்கப்பட்டது. )
//நான் பாராட்டினா பதவி போயிடும் !//
பதிலளிநீக்குஅப்படியே அவங்க ஆட்சியும் போய்ட்டா எவ்வளவு நல்லா இருக்கும்
Anne, pls keep sharing!! It's really very interesting!!
பதிலளிநீக்குமூத்த எம்.எல்.ஏ : முன்னாள் அமைச்சர் குளித்தலை பாப்பா.சுந்தரம் உங்க கூட பேசினாரா? அண்ணே பத்தி வைச்சிட்டிங்களே....இதுக்கே அவருக்கு பதவி போய்விடுமா? பொருத்து இருந்து பார்ப்போம்.
பதிலளிநீக்குசட்டசபையில் இருக்கும் போதுமட்டும்தான் ஆளும் கட்சி எதிர்கட்சி என்று இருக்கனும் வெளியே வந்துவிட்டா மனித நேயம் மிக்க மனிதர்களாக அல்லது நண்பர்களாக மாறிவிடனும் .
உங்களை இணையதளம் மூலம்தான் அறிந்து கொண்டேன். நான் அறிந்தவரையில் நீங்கள் மிக எளிமையான ஆளாக இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொண்டேன் அதற்காக எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்