மாலை சென்றிருந்த திருமண
வரவேற்பில், இசைநிகழ்ச்சி நடைபெற்றுக்
கொண்டிருந்தது. தொடர்ந்து புதிய பாடல்கள். அப்போது அடுத்த பாடல் ஆரம்பித்தது..
துவக்க இசையின் இதமே இதயத்தை
வருடியது. பப பப... பப பப....
நம் இளையராஜாவின் இசை...
ஜெர்மனியின் செந்தேன் மலரே
தமிழ் மகளின் பொன்னே சிலையே
காதல் தேவதையே...
காதல் தேவதை பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன் ...
மனம் டைம் மெஷினில் ஏறி பின்னோக்கி சென்றாகிவிட்டது. நிகழ்வு
முடிந்து காரில் ஏறினேன். நீண்ட பயணம். மீண்டும் ராஜா, அட....
சித்திரமே செந்தேன் மழையே
முத்தமிழே கண்ணா அழகே
காதல் நாயகனே...
காதல் நாயகன் பார்வை கண்டதில்
நான் எனை மறந்தேன்......
எஸ்.பி.பியும் ஜானகியும் போட்டி போட்டுக் கொண்டு
குரலில் துள்ள, இடைவெளியில் ராஜாவின் இசை பிளிறல், மெல்லிசை என காதுகளை கட்டிப்
போடுகிறது.
கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், வெளிநாட்டில் இருப்பது போன்ற
உணர்வை ஏற்படுத்தும் இசை. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலக்கட்டத்தில் இருக்கின்ற
இசைக் கருவிகளைக் கொண்டு உன்னத இசை.
கேட்கும் போதே நம் மனதை துள்ளச் செய்யும் துள்ளல் இசை.
அதே சமயம் வார்த்தைகளை அழுத்தாத இசை. ராஜாவின் விரலசைவுக்கு வாத்தியங்கள் நம்
காதில் புது வெள்ளமாய் நிறைக்கிறது.
பூஞ்சோலையே பெண்ணானதோ -
இரு பொன்வண்டுகள் கண்ணானதோ
பூங்கோதையின் நெஞ்சோடு நீ -
இனி
என்னாளுமே கொண்டாடலாம்
லா ல லா லா லா குளிர் நிலவின் ஒளி நீயே
லா ல லா லா லா எனதன்பின்
சுடர் நீயே
சுகம் நூறாக வேண்டும் பா பா ப
பா பா
வாத்தியங்கள் மட்டும் இல்லாமல் குரலை
கொண்டு இசைக் கோர்வையாக்கி மனதை வயப்படுத்தும் மாயஜாலம் ராஜாவுக்கு மட்டுமே கைவந்த
கலை.
பாடல் தொடர்கிறது....
பேரின்பமே என்றாலென்ன - அதை
நீயென்னிடம் தந்தாலென்ன
# பேரின்பமே உன் இசைதானய்யா -
அதை
மக்களிடம் தந்தாயய்யா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக