பிரபலமான இடுகைகள்

திங்கள், 27 மே, 2013

MLA-க்கள் குறித்த சர்வே



புதிய தலைமுறை தொலைக் காட்சியில் MLA-க்கள் குறித்த சர்வேயில் எனக்கு இடம் கிடைக்குமா என நண்பர்கள் விவாதித்து வருகிறார்கள், என்னையும் கேட்கிறார்கள். எனக்கு வாய்ப்பு இல்லை என்பதே என் அனுமானம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பாடு குறித்த மக்கள் மதிப்பீடு நிகழ்ச்சியில் முதல் 50 இடங்களை பிடித்த ச.ம.உக்களில் 11-50 வரை இடம் பிடித்தவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. முதல் பத்து இடங்களுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட இருக்கிறது. இதில் இடம் பெற வாய்ப்புகள் இல்லை. காரணம்...
 

(சர்வே வருமுன் முக நூலில் இட்ட பதிவு )

சாம்பிள் சர்வே எடுக்க வாய்ப்பில்லாத பரந்து, விரிந்த தொகுதி, குன்னம். அள்ளி தெளித்தது போல் திருச்சியிலிருந்து வரும் போது பாடாலூர் அருகே துவங்கும் தொகுதி ஜெயங்கொண்டம் கிட்டத்தட்ட செல்கிறது. இன்னொரு புறம் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வரை . எப்படி பார்த்தாலும் 100கிமீ பயணம் செய்ய வேண்டும்.

குன்னம் முற்றிலும் கிராமங்கள் நிறைந்த தொகுதி. பெரும்பாலான தொகுதிகள் ஒரு நகரத்தை சுற்றி அமைந்திருக்கும். நகரத்தில் அடிக்கடி மக்களை சந்தித்தாலே போதுமானது. 400க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட குன்னத்தில் இது சாத்தியமில்லை.

குன்னம் சென்று கேட்டால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பதில்லை என்ற புகார் சொல்வார்கள். உண்மை தான். செந்துறை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய மூன்று ஒன்றியங்களுக்கும் மையப் பகுதி குன்னம் அல்ல, அரியலூர் தான். அரியலூரில் எனது சொந்த அலுவலகம் செயல்படுகிறது. ( குன்னம் ச.ம.உ-ஆனதால் வசிப்பிடத்தை ஆண்டிமடத்திலிருந்து அரியலூருக்கு மாற்றிக் கொண்டது தனி செய்தி).

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தப் போதே, என்னை அலுவலத்தில் பார்க்க முடியாது என்ற குறை உண்டு. காரணம் அலுவலத்தில் உட்காராமல் சுற்றுப் பயணத்தை விரும்புபவன். நேரில் கிராமத்திற்கு சென்றால் தான் தேவைகளை உணரமுடியும் என்பது என் எண்ணம்.

இது போல இன்னும் சில காரணங்களால்..... வாய்ப்பு இல்லை...


ஆயிரம் காரணம் சொன்னாலும் சர்வேயில் இடம் பெறாவிட்டால் ஃபெயில் தான்.

# இறுதித் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும்....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக