கேமரா விரிகிறது. பனிமலை, சிம்லா. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிகப்பு நிற சூட்கேஸோடு ஓடி வருகிறார். பனிமலையை கண்ட ஆனந்தத்தில் கண்கள் விரிகிறது. உற்சாகமாகிறார்...
“ புதிய வானம் புதியபூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது”
உற்சாகம் நம்மையும் தொற்றுகிறது. நாமே சிம்லாவில் இருக்கிறோம். இப்போது நாமே சிகப்பு சூட்கேஸோடு ஓட ஆரம்பிக்கிறோம், ஆட ஆரம்பிக்கிறோம்.
**************************************************
நடிகர் திலகம் சிவாஜி குழந்தையின் தொட்டிலை ஆட்டிக் கொண்டிருக்கிறார். மெல்ல மெல்ல அசைகிறது தொட்டில்.
“ ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வமகனே”
*************************************************
நம்மை அறியாமல் அந்தக் குரல் மெல்ல நம்மை ஆக்கிரமிக்கிறது...
நாமே பாடுவதாக தோன்றுகிறது. மகிழ்ச்சியோ, துக்கமோ நம்மை அதில் ஆழ்த்துகிறது.
எம்.ஜி.ஆர், சிவாஜி மாத்திரமல்ல தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பல நடிகர்களுக்கு உயிர் கொடுத்த குரல் பிரிந்துவிட்டது.
பல மனிதர்களுக்கும் உற்சாகமோ, அமைதியோ தேவைபடுவதை கொடுக்கும் குரல் மருத்துவர்.
*****************************************************
வசந்த மாளிகையில் சிவாஜி சுழல்கிறார்....
“ஒரு சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை
இன்ப சக்கரம் சுத்துதடா
ஹ ஹ ஹ ஹா....
அதில் நான் சக்கரவர்த்தியடா....”
# இன்ப சக்கரம் சுத்துது... ஆம் நீங்கள் தான் எங்கள் சக்கரவர்த்தி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக