பிரபலமான இடுகைகள்

சனி, 25 ஆகஸ்ட், 2012

நடிகையின் மறுபக்கம் !

நந்திதா தாஸ்....

நந்திதா தாஸ் என்றால் நமக்கு "அழகி" திரைப்படம் தான் நினைவு வரும். நடிகை என்று தான் அறிவோம். ஆனால் 2012 ஜூலை மாத " உயிர்மை " இதழில் இடம்பெற்றுள்ள அவரது பேட்டியை படித்தால் தான், அவரது இன்னொருப் பக்கம் தெரிகிறது.

நடிகை என்றா
ல் வேறு கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்கள், அவசியம் படிக்கவேண்டிய நேர்காணல்.

மனித உரிமைகள், இலவசக் கல்வி, மாவோயிஸ்டுகள், திரைப்படம், காந்தி, ஃபாசிசம், ஊடகம், கார்ப்பரேட் உலகம் என எல்லா கேள்விகளுக்கும் தெளிவான, செறிவான பதில்கள்.

அவரது நேர்காணலிலிருந்து சில துளிகள் ....

" செய்தித்தாள்களில் கிரமப்புறங்களுக்கான பக்கங்கள் மறைந்து வருகின்றன. பரபரப்பான விஷயங்கள் நடந்தால் மட்டுமே ஊரக விஷயங்கள் வருகின்றன. இல்லையெனில் நாட்டின் மற்ற பகுதிகளில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெரிவதேயில்லை. கிரிக்கெட், பாலிவுட், ஊழல்கள், அரசியல் என்பன மட்டுமே தேசிய செய்திகளாகின்றன."

" இது பெரு வணிக உலகம். எனவே நாம் எழுதுவதில் சஞ்சிகையின் ஆசிரியர் கைவைப்பார். ஆசிரியருக்கு சரி எனப்படுவது ஊடகத்தின் உரிமையாளருக்கு பிடிக்காது.இவை சுதந்திர சமூகத்தின் விளைவுகள் அல்லது பக்க விளைவுகளாகும். ஜனநாயகத்தில் எல்லாவித பயனற்ற கருத்துக் குப்பைகளும் இருக்கும். எனினும் நல்ல விஷயத்தை நீங்கள் கொடுக்கும் போது மக்கள் மெதுமெதுவாக அதைப் பற்றிக்கொள்வார்கள்."

" ஜனநாயகத்தில் நுகர்வியம், பெருவணிக மயமாக்கம், அரசியல் ஃபாசிசம் என பல சிக்கள்கள் இருப்பதனால் உங்களுக்கான குரலை ஒலிப்பதில் பல இடர்ப்பாடுகள் உள்ளன. எனினும் நல்ல ராணுவ அரசை விட கெட்ட ஜனநாயகம் சிறந்ததுதானே ? ஜனநாயகத்தில் நாம் நம்பிக்கை இழக்க முடியாது. ஜனநாயகக் கருவியின் மூலமாகவும் சுதந்திர வெளியின் வாயிலாகவும் மட்டுமே மக்களுக்கு நல்லறிவு நிலையை கொடுக்கமுடியும்."

" என்னிடம் நீங்கள் உன் பெயரென்ன என 20 தடவை அடித்துக் கேட்டாலும் நான் நந்திதா தாஸ் என்று தான் சொல்வேனே தவிர அனிதா என்று சொல்ல மாட்டேனல்லவா ? இதற்கு நான் அஞ்சமாட்டேன் தானே ? இதே போல் தான் நாம் மனித விழுமியங்களிலும் பற்றுறுதியுடன் இருக்க வேண்டும்."

இது தான் ஹைலைட்...

" யாரும் சிக்கலை சந்திக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரும் பாதுகாப்புணர்வுடன் செயல்படவே விரும்புகின்றனர். துணிவுள்ளவர்களால்தான், சிக்கல்களுக்கு முகம் கொடுத்தவர்களால் தான் உலகம் மாற்றங்களை சந்தித்துள்ளதே தவிர, பாதுகாப்புணர்வுடன் செயல்பட்டவர்களால் இல்லை. எல்லைகளை மோதித்தள்ளியவர்களே உலகத்தை மாற்றியுள்ளனர்."

 நடிகையா...இல்லை, சமூகப் போராளி !

1 கருத்து: