நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் கலையரசன் சிறப்பாக பேசிக் கொண்டே வந்தார்.
ஒவ்வொரு சப்ஜெக்டாக பேசிக் கொண்டே வந்தவர் மதுவிலக்கை அமல்படுத்த கோரி பேசினார். அவ்வளவு தான், கலால்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் துள்ளி எழுந்தார்.
" முதலில் உங்கள் கட்சியில் இருப்பவர்களை நல்வழிப்படுத்துங்கள். உங்க கட்சித் தலைவர் சொல்வதை உங்கள் தொண்டர்களே கேட்பதில்லை.
கடந்த வருடம் மாமல்லபுரத்தில், நீங்கள் பவுர்ணமி விழா நடத்திய போது, அங்கிருக்கும் டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளில் ஆன வசூல் 50 லட்சம் ரூபாய்." என்று காய்ச்சி எடுத்து விட்டார்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் கருத்து சொல்ல
முயல, அவர்களை பார்த்த நத்தம் “ நம்மை சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் மதுவிலக்கு
கொண்டு வரட்டும், பிறகு பார்க்கலாம். நீங்க ஆளுகிற மாநிலங்களில் அமல் படுத்திட்டு
அப்புறம் சொல்லுங்க” என்றார்
“ குஜராத்தில் மதுவிலக்கு இருக்கிறதே “
என்ற குரலுக்கு, “ நம்ம ஊருல குறிப்பிட்ட நேரம் தான் டாஸ்மாக் கடை
திறந்திருக்கும். குஜராத்ல 24 மணி நேரமும் மது கிடைக்கும். இன்னும் சொல்லனும்னா
ஃபோன் பண்ணினா, வீடு தேடி வரும், டோர் டெலிவரி “ என குஜராத்தை பிரித்து
மேய்ந்தார்.
*************************
மறுநாள் பேசிய இன்னொரு பாமக உறுப்பினரான கணேஷ்குமார், நத்தம் விஸ்வநாதன் அவர்களின் முந்தைய நாள் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க,
மீண்டும் நத்தம் " இந்த வருடமும் நீங்கள் நடத்தும் விழாவன்று எவ்வளவு விற்பனையாகிறது என பார்ப்போம்...மதுவிலக்கை அமல்படுத்துவதன் மூலம் சமூக விரோத சக்திகள் வளர வழி பார்க்கிறீர்களா ? " எனப் பேச, கணேஷ்குமார் எதிர்ப்பு தெரிவிக்க... அனல் தான்.
சமீபகாலமாக இணக்கம் நிலவிய சூழலில், நத்தம் வெடித்தது ஏன் என உறுப்பினர்களுக்குப் புரியவில்லை.
# பாமக மதுவிலக்குன்னாலே, குலுக்கிய பாட்டிலாய் பொங்கிடுறாரு நத்தம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக