கல்லூரியில் முதல் வருடம், ஒரு விடுமுறை நாள். மாம்ஸ் சங்கர் அழைக்கிறார். "இன்னாடா சொம்மா தான இருக்குற, ஒரு கை குறையுது வா". வேலூர் மாவட்டத் தமிழ்....
சீட்டுக்கச்சேரி சூடுபிடித்திருக்குது. " எனக்கு விளையாடத் தெரியாது மாம்ஸ்" -நான். "இன்னா வெளயாடுறியா, இன்ஞினேரிங் சேந்துட்டு சீட்டாட தெரியாதாம்".
மாம்ஸ் ஒரு வயது மூத்தவர், ஏற்கனவே கல்லூரி அனுபவம் கொண்டவர். ஆனால் நம்ம கிராமத்து நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் சீட்டாட்டம் மிகப் பெரிய குற்றம்.
பள்ளிக்கு பக்கத்திலேயே காவல் நிலையம். அடிக்கடி அங்கு வெளியே கைகட்டி நிற்கும் கூட்டம், சீட்டாடி பிடித்து வரப்பட்டதாகக் கேள்விப்பட்டு அந்த பயம் வேறு இன்னும் மனதில். ( பணம் வைத்து ஆடியதால் பிடித்து வரப்பட்டார்கள் என்பது அப்போது தெரியாது).
வீட்டிலோ அதற்கு மேல், என் மாமா சீட்டாடுவதை பெருங்குற்றமாக அம்மா பஞ்சாயத்து சொல்வதை கேட்டு சீட்டே தூரமாகியிருந்தது.
************
"இல்ல மாம்ஸ், உண்மையா தெரியாது"
"சரி வா, கத்துக்கலாம்"
"அய்யோ வீட்டுக்கு தெரிஞ்சா போச்சு"
"இவன்லாம் காலேஜ் வந்துட்டான்"
**************
சமீபத்தில் ஒன்றாவது படிக்கும் என் மகனுடன், எனது சித்தி அமர்ந்து சீட்டாட என் அம்மா ரசிக்கும் காட்சி காணப் பெற்றேன். இதில் சர்டிபிக்கேட் வேறு," சூர்யா சூப்பரா ஆடுது". ( இப்போ நமக்கும் தெரியும் என்பது வேற விஷயம் )
# காலங்களும் மாறுது, காட்சிகளும்....
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
கடந்த வருடம் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் பயிலும் 20 மாணவிகளுக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. அவர...
-
அனிதாவின் எம்.பி.பி.எஸ் கனவு. அனிதா குழுமூர் கிராமத்தை சேர்ந்தவர். குழுமூர் கிராமம், அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் உள்ள ஊர். ஒடுக...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக