மு.க.ஸ்டாலின்
60,பொருளாளர் , தி.மு.க.
உறுதியான பயணம்
ஏனெனில் வாரிசுப் போட்டியில் சகோதர, சகோதிரிகளை பின்னுக்குத் தள்ளிய
இவரது கையில்தான் இப்போது தி.மு.க. வின் எஞ்சின் இருக்கிறது.
ஏனெனில் மென்மையான அணுகுமுறை கொண்ட இவர் பின்னுக்குத் தள்ளப்படுவார் என்ற பொதுவான பிம்பத்திற்கு மாறாக, உறுதியான முடிவுகளை எடுக்க தலைமைக்கு உதவுகிறார்.
ஏனெனில் தமிழகம் முழுவதும் கட்சியின் இளைஞரமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி அவற்றை ஜனநாயகப்படுத்துகிறார்.
புதிய இலக்கு: சென்னை மாநகராட்சி அது செயல்படவே இல்லை என விமர்சித்து வருகிறார்.
மாற்றம்: சட்டமன்றத்தில் அதிகாரபூர்வமற்ற எதிர்க்கட்சி தலைவராகியிருப்பது
( இந்தியா டுடேயில் செல்வாக்குமிக்க 50 நபர்களில் தமிழகத்தின் டாப் 10 –ல் இரண்டாம் இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ள தி.மு.க.வின்
பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் குறித்து வெளியிட்டுள்ள செய்தி.)
பல சிறகுகளை தாங்கிய கிரீடத்துடன் ஒரு அரசியல்வாதி
மு.க.ஸ்டாலின் எப்போதும் யாரையும் கவரத் தவறுவதில்லை, மேல்தட்டையும் கூட. சமீபத்தில் ஒரு தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் சந்திப்பில், சுறுசுறுப்பான, புத்திசாலியான, ஆர்வலராக இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் குறித்த விவாதம் எழுந்த போது, இவருடைய ஈர்ப்பான ஆளுமை விவாதிக்கப்பட்டிருக்கிறது. சைனீஸ் காலருடன் கூடிய மிடுக்கான வெள்ளை சட்டைகளுடனான இவரது மதிப்புமிகு தோற்றத்திற்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தின் நல்ல தோற்றத்துடனான ஆண் அரசியல்வாதிகளை பட்டியலிட்டால், இவர் எளிதாக முதலிடத்தை பெறுவார்.
( Deccan Chronicle நாளிதழ் )
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
எஸ்.சிவசுப்ரமணியன் தி.மு.க சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர். துணைவியார் : இராஜேஸ்வரி. மகன்கள் : எஸ்.எஸ்.சிவசங்கர் ( நான் ) எஸ்.எஸ்...
-
இணையத் தோழர்களை சந்திக்க பெரியார் திடலில் காத்திருந்த நேரத்தில், சகோதரர் பிரின்ஸ் அவர்கள், திரு.ஒரிசா பாலு அவர்களை அறிமுகப...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக