சிறு குழந்தைகள் ஆடும் போது, பாடல் குறித்த நமது கண்ணோட்டமே மாறிவிடுகிறது...
மாலை அரியலூர் அருகே தவுத்தாய்குளம் கிராமத்தில் விஜயதாரணி நர்சரி மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா. பேசி,பரிசளித்த பிறகு கலைநிகழ்ச்சிகள். சின்னக் குழந்தைகளின் நடன நிகழ்ச்சி.
முதலில் பரதநாட்டியம், சிறப்பாக ஆடினார்கள். அடுத்து, “சொய், சொய்...” கிராமிய நடனத்தில் கலக்கினார்கள். பெண்கள் பக்கத்திலிருந்து இசைக்கு ஏற்ப கைதட்டி மகிழ்ந்தனர்.
“வேணாம் மச்சான் வேணாம்” பாடலுக்கு ஆண்கள் பக்கமிருந்து ஏக வரவேற்பு. பிள்ளைகளின் நிகழ்ச்சியில் பெற்றோர் கல்லூரி காலத்திற்கு போய்விட்டார்கள் போல...
“என்னாசை மைதிலியே” பாடலுக்கு குழந்தைகள் ஆடிய போது, பாடலின் விரசம் அடிபட்டு போனது. கந்தசாமியின் “அலக்ரா”, அவன்-இவன் இசைக்கோர்புக்கான நடனத்தை பார்த்த போது, திரைவடிவத்தை பார்க்க தூண்டியது... காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது...
# தன தரனானே தானானே.....
பிரபலமான இடுகைகள்
-
மாறி வரும் இந்திய சூழலும், சட்டமன்ற உறுப்பினர்களும் என்ற தலைப்பில் IIMB -ல் பணிபுரியும் பேராசிரியர் ராஜிவ் கௌடாவின் உரை புதிய தகவல்களை தந்த...
-
“மலரே, குறிஞ்சி மலரே, தலைவன் சூட நீ மலர்ந்தாய்” நடிகர் திலகம் முடிக்க, மக்கள் திலகம் தொடர்ந்தார், ”தொட்டால் பூ மலரும், தொடாமல் நான் மலர்வே...
-
மாவட்டக் கழகக் கூட்டம் நடக்கும் போது சில இணையதளத் தோழர்கள் அலைபேசியை எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியே செல்வதும், மகிழ்ச்சியாக வந்து அமர்வதுமா...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக