தளபதி இதற்கு முன்பாகவும் தமிழகம் முழுதும் பயணித்திருக்கிறார். "நமக்கு நாமே" பயணத்தை விட கூடுதல் தூரமும் பயணித்திருப்பார். தேர்தல் பிரச்சாரத்தில், இதைவிட சில உள் பகுதிகளுக்கும் போயிருப்பார்.
ஆனால் இந்தப் பயணம் தான் கவனம் ஈர்த்து விட்டது.
இப்போது சந்தித்தது போலவே மக்களை தொடர்ந்து சந்தித்தும் வந்திருக்கிறார். துணை முதல்வராக, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை சந்தித்திருக்கிறார் . சுழல்நிதி வழங்கும் நிகழ்ச்சியில் மகளிரை சந்தித்திருக்கிறார்.
ஆனால் இப்போதைய சந்திப்பு தான் செய்தியாகி இருக்கிறது.
கட்சிக்காரர்களுக்கு பயணத்திற்கு முன்பு வருத்தம். காரணம், வழக்கமாக தளபதி பயணம் என்றால் அலைகடலென திரண்டு வாருங்கள் என்று அழைப்பது வழக்கம். வரவேற்பு அளிக்க அனுமதிக்கப் படுவர்.
ஆனால் இப்போது கூட்டம் கூட்டக் கூடாது, பொது மக்களை இயல்பாக சந்திக்க விட வேண்டும், பொதுமக்களை சந்திக்க இடைஞ்சலாக இருக்கக் கூடாது என அடுக்கடுக்கானக் கட்டுப்பாடுகள்.
இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாகத் தான், சாலையில் இறங்கி நடப்பது சாத்தியமாயிற்று. நினைத்த இடத்தில் நின்று மக்களோடு உரையாடுவது நடந்தேறியது. செல்ஃபி எடுக்கப் பிரியப்பட்ட குழந்தைகளுக்கு வாய்ப்பு கிட்டியது.
இதுவரை அவர் உரையாற்றி தான் மற்றவர்கள் கேட்பது வழக்கம். இந்தப் பயணத்தில் விருப்பப் பட்டோரை எல்லாம் பேச விட்டு காது குளிரக் கேட்டார். அவர் பேசிய நேரத்தை விட, மற்றவர்கள் பேசிய நேரம் அதிகம். மகளிர், விவசாயி, மாணவர், நெசவாளர், தொழிலாளர் என எல்லாத் தட்டு மக்களும் தங்கள் குறைகளை பேசித் தீர்த்தனர்.
இது தான் அத்தனைப் பார்வையையும் இவர் பக்கம் திருப்பி இருக்கிறது.
இதனால் தான் 'விடியல் மீட்புப் பயணம்' மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது மாத்திரமல்ல, அவர்களை கவர்ந்தும் விட்டது. அதனால் தான் எதிர்கட்சிகளின் கண்களுக்கு உறுத்தலாகவும் அமைந்து விட்டது.
தம் குறை கேட்க, காது கொடுக்க ஒரு தலைவன் வந்து விட்டான் என்பதே மக்களின் வருத்தம் போக்கி இருக்கிறது, மகிழ்ச்சி அளித்திருக்கிறது.
அந்த மகிழ்ச்சி தான் இந்த அன்பு, அரவணைப்பு. படத்தில் உள்ள மூதாட்டி ஒரு குறியீடு தான்.
# தமிழகமும் காத்திருக்கிறது, வாரி அணைக்க !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக