பிரபலமான இடுகைகள்

திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திராவிடர் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

எம் தாத்தா

வீட்டில் எங்கும் அவர் படம் கண்ணில் தட்டுப்படும். அவரது தோற்றம் ஒரு தாத்தாவாக மனதில் உருக் கொடுத்தது. பின்னர் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவர் தான் இந்த இனத்தின் தந்தை என்றும், எம் தலைமுறைக்கு தாத்தா தான் என்றும் புரிந்தது.

அவர் போராடியதற்கான பலனை அனுபவிப்பதால், அவரது போராட்டத்தின் வீச்சை உணராமல் போகலாம் பலர். ஆனால் அவர் தேவையை உணர வைப்பதற்கு சிலர் இருப்பது நிம்மதி.

அவர் ஏதோ வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சித்தரித்து, அவரை ஒரு வட்டத்திற்குள் அடைக்க ஒரு கூட்டமே முனைந்து இன்றைக்கும் செயல்படுவது தான் அவரது காலம் கடந்து நிற்கும் வெற்றி.

இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், 1925ல் அவர் எழுப்பிய முழக்கத்தின் பலன். பெண் உரிமைக்கு போராடிய போராளித் தலைவன்.

கள் எதிர்ப்பு போராட்டத்தில் தலைமையேற்க, தன் சொந்த தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்த தீரன்.

செல்வாக்கான, செல்வமிடுக்கான குடும்பத்தில் பிறந்து விட்டு, அவற்றை எல்லாம் துறந்து விட்டு, சிறு வயதில் வகித்த அரசியல் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு, அவமானங்களை தாங்கிக் கொண்டு கடைசி வரை உழைத்த தலைவன்.

இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அனுபவிக்கிற சிலவற்றை ஓராண்டுக்கு முன்பாக சொல்லி இருந்தால்  நம்பியிருக்க மாட்டோம்.  ஆனால் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் சொன்ன சிலவற்றை நினைத்தால் பிரமிப்பு தான்.

"தொலைவில் இருப்போரிடம் பேசுவதற்கான கருவி பையில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வந்துவிடும். ஆணும், பெண்ணும் கூடாமலே குழந்தை பெற்று கொள்ளும் அளவு விஞ்ஞானம் வளரும்". இது அன்றே பெரியார் சொன்னது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தோர் சமூகத்தில் சமய நிலைக்கு வர வேண்டும் என உழைத்து, சமூகநீதி கொள்கை வலுப்பெற அடித்தளம் அமைத்தவர்.

அவர் நினைத்திருந்தால் குடும்ப சொத்தை அனுபவித்துக் கொண்டு, ஈரோட்டில் அத்தனை பதவிகளிலும் கோலோச்சி சொகுசாக வாழ்ந்திருக்கலாம். அடுத்தவர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் வாழ்ந்திருக்கலாம். ஆனால் நாம் தான் வாழ்ந்திருக்க முடியாது, வீழ்ந்திருப்போம்.

#  அவர் என் தாத்தா தான், நம் இனத்தின் தாத்தா தான் !

ஞாயிறு, 10 நவம்பர், 2013

சாவிலும் கொள்கை படித்து சாக வேண்டும்.....

அய்யா கோ.சாமிதுரை மறைவு.

திராவிடர் கழகத்தின் பொருளாளர். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் அணுக்கத் தொண்டர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பர். திராவிடர் கழகத் தொண்டர்களின் விருப்பத் தோழர். 

மெலிந்த தேகம், நெடிய உருவம், பழுத்த அனுபவம், தளராதக் கொள்கை, குன்றாத நகைச்சுவை உணர்வு, எப்போதும் கருப்புச் சட்டை, வெள்ளை உள்ளம், சிறாரையும் மதிக்கும் பாங்கு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. வயது 81. படிக்கும் காலத்திலேயே தந்தைப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். திராவிடர் கழகத்தால் ஆசிரியரோடு நண்பர். சட்டக் கல்லூரியில் இருவரும் நண்பர்கள். அந்த நட்பு வரை கடைசி வரை குன்றாமல் தொடர்ந்தது.

கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் பணி தொடங்கி, அந்தப் பகுதியில் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். தொழில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அதை விடுத்து முழு நேரக் கழகப் பணிக்கு வந்தவர். அவ்வளவு கொள்கையுணர்வு.

என் தந்தை எஸ்.சிவசுப்ரமணியன், அய்யாவிடம் ஜூனியராக வழக்கறிஞர் பணி கற்றவர். சீனியர், ஜூனியராக இல்லாமல் சம தோழராக நட்பு பாராட்டியவர்.

இந்த ஆண்டு தலைவர் கலைஞர் பிறந்தநாள் அன்று, தலைவருக்கு சால்வை அணிவிக்க பெரியார் திடலில் காத்திருந்தார் என் தந்தை. உடல் நலக் குறைவுக் காரணமாக, நிற்க சிரமப் படுவதை பார்த்து விட்டார் அய்யா சாமிதுரை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொடுத்து அமர சொல்ல, என் தந்தை மறுக்க," நீ உட்காருய்யா" என வாஞ்சையோடு சொல்லி அமர வைத்து அவர் நின்றிருந்தார். அவரும் உடல் நலிவுற்று தான் இருந்தார் அப்போது. அது தான் அவர் பண்பு.

09.11-2013 அன்று காலை உடல் நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அய்யா உடலுக்கு தலைவர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இவரது மருமகன் குழந்தை.தமிழரசன், விருத்தாசலம் தொகுதியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர். கழக தீர்மானக் குழு உறுப்பினர்.

உயிர் பிரியும் நேரம் அய்யா செய்து கொண்டிருந்த பணி, புத்தக வாசிப்பு. வாசித்தப் புத்தகம் : "வகுப்புவாரி பிரதிநிதித்துவம்".

# சாவிலும் கொள்கை படித்து சாக வேண்டும், என்றன் சாம்பலிலும்...

                                 Photo: அய்யா கோ.சாமிதுரை மறைவு.

திராவிடர் கழகத்தின் பொருளாளர். பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் அணுக்கத் தொண்டர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உற்ற நண்பர். திராவிடர் கழகத் தொண்டர்களின் விருப்பத் தோழர். 

மெலிந்த தேகம், நெடிய உருவம், பழுத்த அனுபவம், தளராதக் கொள்கை, குன்றாத நகைச்சுவை உணர்வு, எப்போதும் கருப்புச் சட்டை, வெள்ளை உள்ளம், சிறாரையும் மதிக்கும் பாங்கு, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சொந்த ஊர் கள்ளக்குறிச்சி. வயது 81. படிக்கும் காலத்திலேயே தந்தைப் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டவர். திராவிடர் கழகத்தால் ஆசிரியரோடு நண்பர். சட்டக் கல்லூரியில் இருவரும் நண்பர்கள். அந்த நட்பு வரை கடைசி வரை குன்றாமல் தொடர்ந்தது.

கள்ளக்குறிச்சியில் வழக்கறிஞர் பணி தொடங்கி, அந்தப் பகுதியில் சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டவர். தொழில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அதை விடுத்து முழு நேரக் கழகப் பணிக்கு வந்தவர். அவ்வளவு கொள்கையுணர்வு.

என் தந்தை எஸ்.சிவசுப்ரமணியன், அய்யாவிடம் ஜூனியராக வழக்கறிஞர் பணி கற்றவர். சீனியர், ஜூனியராக இல்லாமல் சம தோழராக நட்பு பாராட்டியவர். 

இந்த ஆண்டு தலைவர் கலைஞர் பிறந்தநாள் அன்று, தலைவருக்கு சால்வை அணிவிக்க பெரியார் திடலில் காத்திருந்தார் என் தந்தை. உடல் நலக் குறைவுக் காரணமாக, நிற்க சிரமப் படுவதை பார்த்து விட்டார் அய்யா சாமிதுரை. தான் அமர்ந்திருந்த நாற்காலியை கொடுத்து அமர சொல்ல, என் தந்தை மறுக்க," நீ உட்காருய்யா" என வாஞ்சையோடு சொல்லி அமர வைத்து அவர் நின்றிருந்தார். அவரும் உடல் நலிவுற்று தான் இருந்தார் அப்போது. அது தான் அவர் பண்பு.

இன்று காலை உடல் நலக்குறைவுக் காரணமாக இயற்கை எய்தினார். பெரியார் திடலில் வைக்கப்பட்டிருந்த அய்யா உடலுக்கு தலைவர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார். பல்வேறு கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

நண்பகல் உடல் சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. நாளை (10.11.2013) இறுதி நிகழ்வுகள்.