2006-11 ஆம் ஆண்டு, ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிறு சமுதாயக்கூடம் , சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டித் தரக் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு நான்கு லட்சம் ரூபாய் நிதி வழங்கி, ஊர் மக்களே கட்டிடம் கட்டும் பணியை மேற்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தேன். அந்தக் கட்டிடப் பணி தற்போது தான் முடிவுற்றது.
நான் தற்போது அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலும், திறந்து வைக்க நான் வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் நான் வருவது, அந்த ஊருக்கு அரசு மூலம் நடைபெற வேண்டிய மற்ற பணிகளை பாதிக்கும் என எடுத்து சொன்னேன்.
இந்தப் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் பெரிய அளவு கிடையாது.
இருப்பினும் நான் கலந்துகொள்ள வேண்டுமென அன்பு கட்டளை இட்டனர். சென்று கலந்து கொண்டேன். மக்களும் அதே அன்போடு கலந்துக் கொண்டனர்.
இது போன்று சமூகப் பணியாற்றுபவர்களை மக்கள் சிறப்பித்தால் , பணியாற்றுவோர் இன்னும் உற்சாகமாக பணியாற்றுவார்கள்.
# நன்றி உற்சாகம் ஊட்டும் , கூட்டும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக