அரியலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற உடன், ஆட்சியர் திருமதி. அனுஜார்ஜ் அவர்கள் செய்த காரியம். மாவட்ட தலைநகர் அரியலூரை சுற்றி பார்த்தது தான். உடனடியாக ,எங்கெங்கு போக்குவரத்து நெரிசலோ
, அதனை சீர் செய்ய நடவடிக்கை.
பேருந்து நிலையம் அருகே, கவனிப்பாரற்று கிடந்த செட்டி ஏரி கரையை சீரமைத்து, பூங்கா அமைக்கும் பணியை துவங்கினார், நடைபெற்று வருகிறது. பயனற்ற கிடந்த அரசு புறம்போக்கு இடங்களை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த, மார்க்கெட்டை சீர்படுத்த அரசு நிதியை ஏற்பாடு செய்தார் . மனு கொடுக்க யார் வந்தாலும், காது கொடுத்து கேட்டு, முடிந்த வரை தீர்வு. மாவட்டம் முழுதும் சுற்றுப்பயணம், அரசுப் பணிகள் ஆய்வு. அதிகாரிகளை தண்டிக்காமல், தட்டிக்கொடுத்து வேலை வாங்கும் முறை.
இப்படி சீராக போய்கொண்டிருந்த பயணத்திற்கு தடைகள் முளைத்தன. ஊட்டச்சத்து பணியாளர்களை நியமிக்க நேர்முகத் தேர்வு அறிவிப்பு வந்தது. சிபாரிசுக்கு இடம் கொடுக்காமல், பணி நியமனம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு மாறுதல், பத்திரிக்கைகளில் சர்ச்சையானது.
அரியலூரில், நேர்முகத் தேர்வு நடைபெற்றது. விதவைகளுக்கும், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கும் பணி ஆணை இரவோடு இரவாக வழங்கப்பட்டது, யாருக்கும் பணம் கொடுத்து ஏமாறாதீர்கள் என்ற அறிவுரையோடு.
மாறுதல் வரப்போகிறது என்ற வதந்தி இறக்கைக் கட்டி பறக்க ஆரம்பித்தது. கவலைக் கொள்ளாமல் பணிகளை தொடர்ந்தார். இந்தப் பணிக்கு நேற்று பரிசு வந்துவிட்டது - மாறுதல். அதிமுக-வினர் வழங்கிய பாராட்டு - பட்டாசு வெடிப்பு, தேர்தலில் வென்றது போல.
மாறுதலுக்கு பிறகு மரியாதை நிமித்தம் சந்திக்க சென்றோம். அரியலூர் நகராட்சித் தலைவரிடம் மாவட்ட ஆட்சியர் வைத்த வேண்டுகோள், " பூங்கா அமைக்கும் பணியை விறைந்து முடியுங்கள் ".
என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார், " நிண்ணியூர் கிராமத்தில் ஊட்டச்சத்து மையக் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளது, அதற்கு புதிய கட்டிடம் கட்ட, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி வழங்குங்கள்." மாறுதல் ஆகும் நேரத்தில், ஒரு குக்கிராமத்தை நினைவு வைத்து தனது சொந்த ஊர் போல் நினைத்து கோரிக்கை வைக்கும் மாவட்ட ஆட்சியருக்கு, என்னாலான பரிசாக உடனே நிதி ஒதுக்கி விட்டேன்.
# உண்மையாக உழைப்போருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு காத்திருக்கும்.....

அ.தி.மு.க. அரசைப் பொறுத்தவரை ஐ.ஏ.எஸ். அல்லது ஐ.பி.எஸ். அதிகாரியின் பெயர் பத்திரிகைகளில் வந்துவிட்டால் போதும், அன்றே அவருக்கு மாறுதல் உத்தரவு தயாராகிவிடும்.. இன்று நேற்றல்ல.. 1991, 2001ல்கூட அப்படித்தான்...
பதிலளிநீக்குவழக்கமாக அரசியல்வாதிகளை அதிகாரிகள் பாராட்டுவதைத்தான் பார்த்திருக்கிறோம். மக்களுக்காகப் பணியாற்றும் ஒரு அதிகாரியை அரசியல் பிரமுகராக இருந்து தாங்கள் பாராட்டுவது மனதுக்கு இதமாகவே இருக்கிறது...
பதிலளிநீக்கு