பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

பார்கின்ஸன்ஸ் நோய்க்கான அறுவை சிகிச்சை

பார்கின்ஸன்ஸ் நோய்க்கு செய்யப்படும் அறுவை சிகிச்சை DBS ( Deep Brain stimulation ) என அழைக்கப்படுகிறது. 

இதே போன்று சிகிச்சை மேற்கொண்ட பலரையும் சந்தித்து, அவர்கள் சிகிச்சைக்கு பிறகு கண்டிருக்கின்ற முன்னேற்றத்தை உறுதி செய்தே, சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்தோம்.

பெரம்பலூருக்கு அருகில் இருக்கும் பெரகம்பி என்ற கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர், ஒரு வருடத்திற்கு முன்பு இந்த சிகிச்சையை மேற்கொண்டு தற்போது நல்ல நிலையில் உள்ளார். நடக்க இயலாமல், தன்னால் சாப்பிடக்கூட இயலாத நிலையில் இருந்தவர், இன்று குடும்பப் பணிகளை மாத்திமல்லாமல் விவசாயப் பணிகளையும் மேற்கொள்கிறார்.

மூளையின் எந்த பகுதி செயல்படாமல் இருக்கிறதோ, அந்த பகுதி மின் தூண்டுதல் மூலம் செயல்பட வைக்கப்படுகிறது, இந்த DBS அறுவை சிகிச்சை மூலம்.

அந்த மின் தூண்டலை உற்பத்தி செய்யும் brain pacemaker மற்றும் மின் தூண்டலை கொண்டு செல்ல insulated wire மற்றும் மின் தூண்டலை மூளையுள் செலுத்தும் electrode ஆகியவற்றை பொருத்துவதே இந்த அறுவை சிகிச்சை.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பாக அப்பாவை அழைத்து சென்று MRI Scan செய்தனர். அதன் அடிப்படையில் தலையில், அளவுமானிகளுடன் ஒரு மெட்டல் ஃப்ரேம் பொருத்தினர்.



பிறகு மீண்டும் ஃப்ரேமுடன், ஸ்கேன் செய்து எந்த இடத்தில் மின்முனை பொருத்துவது என துல்லியமாக கணக்கிட்டனர். அடுத்து அறுவை சிகிச்சையை துவங்கினர். தலையின் மேல் பகுதியில் துளையிடப்பட்டு அதன் வழியாக மின்முனையை செலுத்தினர்.

லோக்கல் அனஸ்தீசீயா கொடுக்கப்பட்டு, தலையின் மேல்பகுதி மட்டும் வலி தெரியாமல் செய்திருந்தனர். மின் தூண்டலை, மின்முனையில் செலுத்தி, அப்பா உணர்வதை உறுதி செய்து, அதன் மூலம் சரியான இடத்தில் பொருத்தினர்.

இது அறுவை சிகிச்சையின் முதல் பகுதி. இரண்டாவது பகுதியை சிலருக்கு மறுநாள் மேற்கொள்வார்கள். எங்களிடத்திலும் அப்படியே கூறியிருந்தார்கள். ஆனால் முதல் அறுவைசிகிச்சையில் அப்பா அளித்த ஒத்துழைப்பால் உடனே இரண்டாம் பகுதியையும் துவக்கினார்கள்.

இதில் வலப்புற கழுத்து எலும்புக்கு கீழாக, தோலுக்கு கீழாக pacemaker பொருத்தப்பட்டது. பிறகு மூளையில் பொருத்தப்பட்ட மின்முனையிலிருந்து tunnel முறையில் wire மூலம் இணைக்கப்பட்டது.



இந்த அறுவை சிகிச்சை, மயக்க மருந்து கொடுத்து முழு மயக்க நிலையில், கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்றது. அறுவை சிகிச்சை மூளையை ஒட்டி செய்யப்படுவதால், துல்லியம் தான் மிக முக்கியம்.

Dr. Rupam Borgohain தலைமையில் இந்த அறுவை சிகிச்சை மேற் கொள்ளப் பட்டது. இவர் Nizam's Institute of Medical Sciences மருத்துவமனையின், நரம்பியல் துறையின் பேராசிரியர். 


பார்கின்ஸன்ஸ் நோய் குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக இயங்குபவர். தேசிய அளவில் குறிபிடத்தக்க மருத்துவர்களில் ஒருவர். இவர் மேற்பார்வையில் Dr. பிரவீண் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சையினை மேற்கொண்டார்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு ஒரு நாள் ICUல் இருந்து, மறுநாள் அறைக்கு திரும்பினார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு வழக்கமான நிலைக்கு திரும்பினார்கள்.

தற்போது pacemaker-ஐயும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, அதனை அப்பா உடல் நிலைக்கு ஏற்ற அளவிற்கு ஒப்புமை செய்துள்ளார்கள்.

அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு நாளைக்கு 12 மாத்திரைகள் சாப்பிட்ட நிலையில் இருந்து, இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் சாப்பிடக் கூடிய நிலைக்கு வந்துவிட்டார்கள்.

எட்டு அல்லது ஒன்பது மாதத்தில் பார்கின்ஸன்ஸ் நோயின் பாதிப்புகள் படிப்படியாக கட்டுபாட்டுக்குள் வந்துவிடும், மாத்திரையை முற்றிலுமாக நிறுத்திவிடலாம் என்ற உறுதியை அளித்துள்ளார்கள்.

வெள்ளிக்கிழமை 8ந்தேதி மருத்துவமனையிலிருந்து வெளி வந்துவிட்டார்கள். தற்போது நலமாக உள்ளார்கள்.

அப்பாவின் நலம் விசாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய கனிமொழி அவர்கள் கேட்ட கேள்வி, " பார்கின்ஸன்ஸ் நோய்க்கு அறுவை சிகிச்சை இருக்கிறதா ? ". அந்த அளவிற்கு இந்த அறுவை சிகிச்சை முறை இருப்பது தமிழகத்தில் தெரியாமல் இருக்கிறது.

எனவே இதனை படிக்கின்ற நண்பர்கள், உங்களது உறவு மற்றும் நட்பு வட்டாரத்தில் யாராவது இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் தக்க வழி காட்டிடுங்கள்...

2 கருத்துகள்:

  1. Great Sir. Yes. உங்களின் இந்தப் பகிர்வு வரை இணையத்திலோ செய்திப் பத்திரிகைகளிலோ தொலைக்காட்சியிலோ இந்தத் தகவலை அறிந்ததில்லை. கேன்ஸர் ஹெபாடிடிஸ் பியால் பரவும் வைரஸ் நோய் என்று காசு கொடுத்தால் டுபாக்கூர் வைத்திய சிகிச்சைக்கு விளம்பரம் கொடுப்பதற்கு தயாராயிருக்கும் பத்திரிகைகள் இத்தகைய மருத்துவ முன்னேற்றங்களைச் சொல்வதேயில்லை.:(. அப்பா விரைவில் முழுமையாக நலம்பெற ப்ரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் தந்தை முழுமையாக விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்...

    பார்கின்ஸன்ஸ் நோயைப் பற்றிய முதல் பதிவிலிருந்து நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளேன்...

    Dr. Rupam Borgohain அவர்களுக்கும் Dr. பிரவீண் அவர்களுக்கும் நன்றிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு