ஹைதராபாத் Croma showroom சென்றேன், மடிக்கணினிக்கு இணைப்பு சரடு வாங்கினேன்.
பணம் செலுத்துமிடம் வந்தேன். காசாளர் தொகையை சொன்னார், கொடுத்தேன்.
கணினியை தட்டியபடியே கேட்டார், " பேரு செப்பண்டி ? "
" சிவசங்கர் " என்றேன்.
" சர்நேம் ( surname ) ஏமி ? "
( சர்நேம் - சாதி பெயர், ஆந்திராவில் எல்லோருடைய பெயருக்கும் பின்னால் கண்டிப்பாக சாதி பெயர் இருக்கும் )
" சர்நேம் லேது "
" எந்த ஊர் ?"
" தமிழ்நாடு "
" அங்க யாருக்கும் சர்நேம் கிடையாதா ? " என்று கேட்டார்.
" மிகக் குறைந்த பேருக்கு உண்டு "
" அப்போ உங்களுக்கு கிடையாதா ? "
" உண்டு. பெரியார் "
புரியாமல் பார்த்தார்...
பிரபலமான இடுகைகள்
-
விஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...
-
அண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...
-
கார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக