பிரபலமான இடுகைகள்

சனி, 7 மார்ச், 2015

16 லைசன்ஸ்கள் ;தாதுமணல்_ஊழல்‬ 3

தாது மணல் விவகாரத்தில் பத்திரிக்கையாளர் சமஸ், "தமிழ் இந்து" பத்திரிக்கையில் இயற்கை வளம் சூறையாடப் படுவது குறித்து எழுதிய தொடர் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

எனது புகைப்படம்

அப்போது தான் வைகுண்டராஜன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் பத்திரிக்கையாளர்கள் மற்றும் வெளியாட்கள் நுழைவது எவ்வளவு கடினம் என்பது உலகிற்கு தெரிய வந்தது.


அடுத்து அந்தப் பகுதியில் புகுந்து ஆய்வு செய்த எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் வெளிக் கொணர்ந்த தகவல் தான், அந்த அதிர்ச்சியை கொடுத்தது.

"முறைகேடான வழியில் கடற்கரை மணலை கொள்ளையடிப்பதில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல்" இது தான் அந்த செய்தி.

எப்படி இவ்வளவு பெரிய தொகையை இதில் சொல்கிறார்கள், பரபரப்புக்காக சொல்கிறார்களோ என்ற சந்தேகம் சிலருக்கு எழும். ஆட்சியாளர்கள் இப்படி தான் சொல்கிறார்கள்.

இதற்கு சற்று டெக்னிக்கலான விஷயத்திற்குள் நுழைய வேண்டும். இந்த தாதுமணலில் உள்ள கனிமங்கள்: இல்லிமனைட், ரூட்டைல், சிர்கான், லியூகாக்ஸினே, கார்னெட், சில்லிமைனேட்.

மோனோசட் என்ற கனிமத்தை தவிர மீதி இந்தத் தாதுக்களை தனியார் அள்ள மத்திய அரசு 1998-ல் அனுமதித்தது. இதற்கு மாநில அரசின் அனுமதி போதுமானது. மோனோசைட் மாத்திரம் மத்திய அரசுத் துறை மட்டுமே கையாள வேண்டிய கனிமம்.

காரணம், அது அணு சக்தி துறைக்கு பயன்படக் கூடியது. மிகுந்த பொருளாதார மதிப்பு வாய்ந்தது. வெளி மார்க்கெட்டில் கிடைக்காது. இதில் கை வைக்க வைகுண்டராஜன் மற்றும் அதிமுக அரசு கூட்டணி முடிவு செய்தது.

2002-2003 ஆம் ஆண்டு பெறப்பட்ட லைசென்ஸ்களை வைத்துக் கொண்டு அது வரை மற்ற கனிமங்களை ஏற்றுமதி செய்து வந்தார்கள் விவி மினரல்ஸ். அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

விவி மினரல்ஸ் தான், இந்தியாவின் தாதுமணல் துறையில் மிகப் பெரும் நிறுவனம். அவர்கள் வசம் 16 லைசென்ஸ்கள் இருந்தன. இது மோனோசைட்டை தவிர மற்ற கனிமங்களுக்கானது.

2012-13-ல் மீண்டும் இந்த உரிமங்கள் புதுப்பிக்கப்படுகின்றன, தமிழக அரசால். இப்போது ஒரு வித்தியாசம். இதில் மோனோசைட் சேர்க்கப்படுகிறது. இதற்காக ஒரு டன்னுக்கு ரூ.125 ராயல்டி எனவும் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஏற்றுமதி செய்வதற்கான வழியை வகுத்து தந்தது.

இங்கு தான் பிரச்சினையே. மோனோசைட்டை அள்ள அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உரிமை கிடையாது. மத்திய அரசுக்கே அந்த உரிமை உண்டு. Department of Atomic Energy மற்றும் Atomic Minerals Directorate ஆகியவற்றிற்கு இப்படி ஒரு லைசென்ஸ் கொடுக்கப்பட்டதே தெரியாது.

இப்படி மத்திய அரசின் உரிமையை மாநில அரசு கையில் எடுத்துக் கொண்டதற்கு காரணம் வைகுண்டராஜன் மட்டுமல்ல. வைகுண்டராஜன் என்ற போர்வையில் இருப்பவர்கள் தான்.

அவர்கள்….

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக