பிரபலமான இடுகைகள்

வியாழன், 5 மார்ச், 2015

குழுவின் அறிக்கைய கிடப்பில போடு; தாதுமணல்_ஊழல்‬ 2

தாதுமணல் முறைகேட்டை ஆய்வு செய்வதற்கான ககன் தீப்சிங் பேடி குழு, ஜெ உத்தரவிட்டபடி, ஆனால் அவர் எதிர்பாராத விதமாக, ஒரு மாதத்தில் தன் அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.

        

17.09.2013 அன்று அறிக்கையை பெற்றுக் கொண்ட ஜெ உடனே ஒரு அறிக்கையை வெளியிட்டார். "இதனை பெற்றுக் கொண்ட நான், எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்த சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்பிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன்."

இவ்வளவு அவசரமாக அடுத்த ஆய்வுக்கு உத்தரவிட்டவர், இந்த முறை கெடு விதிக்கவில்லை. காரணம் விவி.

சிறப்புக்குழுவானது ஆய்வுகளை மேற்கொண்டு நவம்பரிலேயே முடித்துவிட்டதாக தகவல். ஆனால் அரசு அந்த அறிக்கையை வாங்குவதில் அக்கறை காட்டவில்லை.

சென்னை உயர்நீதிமன்றத்தில், தாது மணல் கொள்ளைக்கு சி.பி.அய் விசாரணை கோரி வழக்கு தொடுக்கப் பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் வேணுகோபால் அடங்கிய சிறப்பு அமர்வு ஒரு உத்தரவு பிறப்பித்தது.

"மிக விரைவில் அரசிடம் பேடி குழு அறிக்கையை வழங்க வேண்டும்." ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

11.04.2014 அன்று மதுரை உயர்நீதி மன்றக் கிளையில், மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பு 'அறிக்கையை வெளியிடக் கோரி' ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தது. இதில் பதில் மனு தாக்கல் செய்யாமல் வாய்தா வாங்கி தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது.

அதன்பின் 29.05.2014 அன்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா,"ஒரு மாதத்தில் பேடி குழு அறிக்கையை தாக்கல் செய்ய" உத்தரவிட்டார். இதையும் மதிக்கவில்லை தமிழக அரசு.

விவி விஷயத்தில் கடுமையாக நடவடிக்கை எடுக்கிறார் ஜெயலலிதா என நாடும் ஏடும் காத்திருந்தது, நல்ல முடிவிற்காக. அனால் ஜெவும், விவியும் காத்திருக்கவில்லை, தங்களைக் காத்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தனர்.

இந்த கேப்பில் தன் பவரை காட்டினார் வைகுண்டராஜன். சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதன் மீது தீப்பளித்த நீதிபதி பி.ராஜேந்திரன்,"பேடி குழு ஆய்வில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்" என உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்டது. ஏற்கனவே இதில் இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அதை எல்லாம் தாண்டி, விவி இந்த உத்தரவை பெற்றார்.

இதற்கிடையில் டிசம்பர் மாதம் குன்ஹா தீர்ப்பு வந்தது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். அவ்வளவு தான் இந்த விவகாரங்களை கவனிக்க அரசுக்கு நேரமில்லாமல் போனது.

கோவில்களில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யவும், பெங்களூரு சிறைவாசலில் காத்திருப்பதுமே அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பொழுது போதவில்லை. இதில் பேடியாவது, அறிக்கையாவது...

அரசு தூங்கிக் கொண்டிருந்த இந்த நேரத்தில் தான் ஆங்கிலப் பத்திரிக்கையான 

"எக்கனாமிக்ஸ் டைம்ஸ்" ஒரு குண்டை போட்டது...
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக