செல்போன் ஆப்ரேட்டர்கள் இணைந்து சிண்டிகேட்
அமைத்து ஏலம் இல்லாமல் தவிர்க்கப் பார்க்கிறார்கள், அதற்கு அரசே மறைமுக உதவி என
கூக்குரலிடுகின்றனர்.
இதை தான்யா அன்றைக்கே அண்ணன் ஆ.ராசா
சொன்னார். சிண்டிகேட்டை உடைப்பதற்கே புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கினேன்
என்று சொன்னார்.
ஊரில் சாதாரண கருவேலமரத்தை ஏலம் விட்டால்
கூட , குறைந்த விலைக்கு எடுக்க சிண்டிகேட் அமைப்பது நாட்டு வழக்கம்.
பழைய நிறுவனங்களின் கூட்டு களவானித்தனத்தை
முறியடித்தார். அவர்களது கைகூலியே சி.ஏ.ஜி.
****************** *******************
2G, 3G, 4G என்ற குழப்பம்...
3G, 4G வந்து விட்டதால் தான் 2G ஏலத்தில்
தேக்கம் என்ற செய்தி.
3G ,4G மட்டுமல்ல அதன் அப்பன்
வந்தாலும் 2G தான் அடிப்படை. 2G
யே அலைபேசிக்கு அவசியமானது. மற்றவையெல்லாம் அடுத்தக் கட்ட தொழில்நுட்ப
வளர்ச்சிக்கு தேவையானவை.
எனவே எந்த காலத்திற்கும் இந்த தொழில்
நுட்பமே கோலோச்சும். இதனால் ஏலம் போகவில்லை என்பது அர்த்தமற்ற வாதம்.
************************** *************************
மற்ற உரிமங்களும் ஏலம் போனால் நட்டம்
ஏற்படாது...
122 உரிமத்தில் 22 உரிமமே ஏலம் போயுள்ளது. இதிலேயே 9,400 கோடி வருமானம்
வந்துள்ளது, மீதி உரிமங்கள் ஏலம் போனால் கிட்டத்தட்ட 50,000 கோடி கிடைக்கும் என
நிகழ்தகவு கணக்கு போடுகிறார்கள்.
எல்லாப் பகுதிக்கும் ஒரே அளவு ஏலம் போகாது.
வாய்ப்பு உள்ளப் பகுதிக்கு ஏலம் போயுள்ளது. மற்றப் பகுதிகள் நிலவரம் அப்படி.
அடுத்து அண்ணன் ராசா அவர்கள் காலத்தில்,
வருவாய் பகிர்வு அடிப்படையில் வந்த வருமானம் 10,400 கோடி. இந்த 50,000 கோடி ஐந்து
வருடத்தில் எட்டப்படும்.
அதற்கு பிறகும் வருமானம் தொடரும். அலைபேசி எண்ணிக்கை
கூட கூட வருமானம் உயரும்.
******************
****************************
புரிந்தே குழப்புகிற கூட்டத்திற்கு இது
அத்தனையும் தெரியும்.
# சிறைப்பட்ட காலத்திற்கு பதில் சொல்லப் போகிறவன்
எவன் ?
elderly people alone can understand his value
பதிலளிநீக்குmay his soul rest in peace
சி.பி.அய் கூட எங்கும் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கவில்லை, ஆ(றி)ரிய ஊடகங்கள் கூட்டணி அமைத்து அண்ணன் ராசாவை வீழ்த்தின. சிண்டிகேட்டை உடைத்த ஒரே காரணத்தாலேயே தொலைத் தொடர்பு அரக்கன்கள் ராசாவை சிண்டிகேட் அமைத்து பழிவாங்கினார்களோ என்றொரு எனக்கு சந்தேகமுண்டு.
பதிலளிநீக்கு