பிரபலமான இடுகைகள்

சனி, 10 நவம்பர், 2012

திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறை


அண்ணாவும் கலைஞரும் திராவிட இயக்கத்தின் இரண்டு முக்கிய அத்தியாயங்கள்என்று அந்த சிறுவன் துவங்கிய போது எல்லோருடைய கவனமும் அங்கு திரும்பியது. அடுத்த பத்து நிமிடங்கள் அனைவரும் அவன் வசம். கருத்து மழை.

பேசிய தோரணை, குரல் ஏற்ற இறக்கம், முக்கியக் கருத்துகளை சொல்லும் போது வெளிப்படுத்திய உடல் மொழி.... அருமை, அருமை. அரியலூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் தமிழ்செல்வன். முதல் இடம் பெற்றான்.

பேச்சுப் போட்டியில் கலந்துக் கொண்டவர்களின் பேச்சுகளை கேட்டப் பொழுது, பேச்சாளர்களை மிஞ்சக் கூடிய அளவுக்கு இருந்தது. பல புதிய கருத்துகள் வெளிப்பட்டன.

கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்ட மாணவர்கள் எழுதிய கருத்துக் கோவைகளை படித்து நடுவர்கள் பாராட்டினார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களின் 104 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தளபதி அவர்களின் வழிகாட்டுதல் படி இளைஞரணி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் போட்டி  நடைபெற்றது.

தளபதி அவர்களால் நேரிடையாக தேர்வு செய்யப்பட்ட இளைஞரணியின் புதிய நிர்வாகிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. சிறப்பான முறையில் போட்டிகளை நடத்தினர்.

 
# திராவிட இயக்கக் கொள்கைகளை தூக்கிப் பிடிக்க அடுத்த தலைமுறையும் தயார்....

2 கருத்துகள்:

  1. தம்பியின் பேச்சை முடிந்தால் youtube பதிவேற்றம் செய்யுங்கள் அண்ணா.

    பதிலளிநீக்கு
  2. ராஜீவ்காந்தி கொலையுண்ட சமயம். ஊரில் தீவிர திமுகவினரை எல்லாம் குறிவைத்து தாக்கியதால், எங்கள் பெரியம்மா ஊரான திருக்கோடிக்காவலில் போய் நான்கு நாட்கள் தங்கிவிட்டேன். அதேப் போன்று தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நாளிலும் (அவர்கள் வென்றவுடன் கலவரம் அதிகமாகும் என்று) மீண்டும் திருக்கோடிக்காவல் பயணம்.

    ரிசல்ட் எல்லாம் வந்து, முதன் முதலாக ஜெயலலிதா பதவியேற்ற நாள், மீண்டும் ஊர் திரும்புவதற்காக அந்த ஊரில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கிறோம். மாயூரம் வருவதற்காக அதே பஸ்ஸை எதிர்பார்த்து அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிராமணக் குடும்பமும் அங்கு வந்து நிற்கிறது.ஏழெட்டுப் பேர். 80 வயதைக் க்டந்த முதியவர் உட்பட.

    அவர்களிடம் ஒரே குதூகலம். பதவியேற்ப்பைப் பற்றி வாராது வந்த மாமணி கிடைத்துவிட்டது போன்ற சந்தோஷத்தில் அவர்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். அந்த மயக்கத்தோடு அந்த குடும்ப இளைஞன் ஒருவன், ஒரே ஒரு சீட்டு தான் திமுக வந்திருக்கு. இதோடு காலி. இனிமே அந்த கட்சியே காணாமல் போய்விடும் என்று கொக்கரிக்கிறான்.

    அதைக் கேட்டு எங்கள் காதுகளில் ரத்தம் வழியாத குறை தான். 13 வருட வனவாசத்தையே வெற்றிகரமாக முறியடித்தவர் தான் நம்ம தலைவர். இருந்தாலும் இப்படியொரு மோசமான தோல்வியைக் கண்டதில்லை, அபாண்ட பழியும் சுமத்தப்பட்டதில்லையே, இனி என்ன செய்யப் போகிறார் என்ற பயம் அடி மனதில் குடி கொண்டாலும், தலைவர் மேல் இருக்கும் நம்பிக்கையில், ச்சே அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, தலைவர் எதையாவது செய்து மீண்டும் நம்ம கட்சியை அரியணையில் ஏற்றி விடுவார் என்று உள்மனது சொல்லிக் கொண்டிருக்கும் போதே.....

    அந்த குடும்பத்தின் 80 வயது கடந்த முதியவர் பேச ஆரம்பிக்கிறார். “அப்படிச் சொல்லாத குழந்தே, அந்தக் கட்சி இனி அழியவே அழியாது. அண்ணாதொர பெரிய சித்தன், அதனால தான் உதிக்கிற சூரியன சின்னமா எடுத்துருக்கான். வேணும்ன்னா இப்ப அஸ்தமனம் ஆகியிருக்குமே தவிர, திரும்பவும் உதயமாகிவிடும்”.....

    இதைக் கேட்கக் கேட்க, குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த நான் துள்ளிக் குதித்து எழுந்து விட்டேன்.

    ஆகவே இந்தக் கழகமும் அழியாது, கொள்கைச் சிங்கங்களும் அழிய மாட்டார்கள்..... மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு