பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

தி.மு.க இணையப் பயிற்சி பாசறை - பாகம் 4



கல்யாண வீட்டின் வீடியோ மிக்ஸிங் டீம் போல, ஒரு டீம் தங்கள் முன் சிஸ்டம், லேப்டாப் என சகல உபகரணங்களோடு உட்கார்ந்திருந்தது. உற்றுப் பார்த்தால் அபிஅப்பா, சரவணக்குமார், இன்னொரு இளைஞர்(எங்கேயோ பார்த்தது போல இருந்தார்).

அபிஅப்பா மேடையை பார்ப்பதும், டைப் செய்வதுமாக பரபரப்பாக இருந்தார். இரவு பார்க்கும் போது தான் தெரிந்தது, சுடசுட பாசறை குறித்து அப்டேட் செய்திருக்கிறார்கள்.

பாசறையின் முக்கியப் பங்கேற்பாளர் ஒருவர் முன் வரிசையில் அமர்ந்து சின்ஸியராக கவனித்துக் கொண்டிருந்தார். சில நேரங்களில் கண் அசந்தாலும், முடிந்தவரை அட்டண்டிவ். நிலா, 8ம் வகுப்பு. அண்ணன் கோவி.லெனின் அவர்களது மகள். அண்ணியார் பிரதிபா அவர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கும், தனி ஒரு பெண்ணாக பங்கேற்றது. இருவருக்கும் பாராட்டுக்களும், நன்றியும்.



அண்ணன் ஜெயின் கூபி அவர்கள் தலைமையில் ஒரு படை மூன்றாவது கண்ணை சிமிட்டியவாறு இருந்தது. யார் பேச எழுந்தாலும் சுவர் வைத்தது போல் 40, 50 பேர் கேமராவும் கையுமாக படம் பிடித்தனர் (ஜெ அரசை நோக்கி இந்த கேமராக்கள் திரும்பும் ஏவுகணையாக). அண்ணன் ஜெயின் கூபி அவர்களது இணையப் புகைப்பட பணியை பாராட்டி சிங்கப்பூர் கழகத் தோழர்கள் ஒரு கேமரா பரிசளித்தனர். இப்போது, 50,000 புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றி சாதனைப் படைத்திருகிறார் அண்ணன் ஜெயின்.

நிறைவுரையாற்ற அய்யா சுப.வீ அழைக்கப்பட்டார். தன்னடக்கத்தோடு "இணையத்தை அவ்வளவாக அறியாதவன் என்பதனால் தான் எனக்கு மட்டும் தலைப்பு தராமல் சிறப்புரை என சொல்லி வீட்டீர்கள் போல..." என்று ஆரம்பித்து ஒரு மணி நேரம் தேனருவி போல் இனிமையாக உரையாற்றினார்.



திராவிட இயக்க பத்திரிக்கைகள் 40 என நாங்கள் சொன்னதை, 134 என திருத்தி அந்தப் பத்திரிக்கைகளை அவர் பட்டியலிட்டப் போது எழுந்த கைத்தட்டல் அடங்க நேரமானது. "2009 வரை புலி எதிர்ப்பாளராக இருந்தவர்கள் இன்று புலி ஆதரவாளராக காட்டிக் கொண்டு கலைஞர் விமர்சனம் செய்வது காலத்தின் கோலம்"

ஈழப்பிரச்சினையில் பலரின் வேடம், நிகழ்கால அரசியல், இணையப் பணி என பல தலைப்புகளை லாகவமாக தொட்டு சென்றார். பேராசிரியர் அல்லவா, எளிமையாக அதே சமயம் அழுத்தமான கருத்துகளை எல்லோர் மனதிலும் பதிய வைத்தார். "இணையத்தில் பணியாற்றுங்கள், ஆனால் இணையத்தில் தொலைந்துவிடாதீர்கள்" என்ற அறிவுரையோடு முடித்தார்.

விழாவை தொகுத்து வழங்கிய சகோதரரையும் குறிப்பிட வேண்டும். ஒவ்வொருவரை பற்றியும் நீண்ட அறிமுகத்தோடே பேச அழைத்தார். நல்ல குரல், உச்சரிப்பு. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள். ஒவ்வொரு நண்பராக மேடைக்கு வந்தார்கள். பலரை எளிதாக அடையாளம் காண முடிந்தது. சிலரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் அருகில் வந்து அறிமுகப்படுத்திக் கொள்ள ஸ்டேடஸ், லைக், கமெண்டில் பார்த்தவர்களை நேரில் பார்க்கும் அரிய வாய்ப்பு.




எனக்கு முன்பாக சிவானந்த அரசன் பேசியிருந்தார். சிங்கப்பூரிலிருந்து வந்த செல்வபூபதி பேச்சு அசத்தல் (திருவாரூர்ல). டான் அசோக் அண்ட் மதுரை டீம் அட்டண்டட். நீண்ட நாட்கள் கழித்து தம்பி கோகுல் பிரெஷாக. போடி காமராஜ் மற்றும் தென் மண்டலம். செந்திலுடன் தஞ்சை. முருகேஷ், சுந்தர், நந்தாவும் சேலம் செட்டும். ரமேஷ், மிதுன் உள்ளிட்ட திருவள்ளூர் மாவட்டம். மாணவரணி சிந்தன் வகையறா. கதிரவன், விஜய், அஜ்மல் உடன் மன்னை, திருவாரூர் டீம். முல்லை முபாரக், அப்பாஸ் உள்ளிட்ட புதுகை இளைஞர்கள். இப்படி....


கீழே உட்கார்ந்திருந்த இளைஞர் இடையில் சில பேருக்கு பரிசு வழங்கினார். நடுவிலும் அங்கும், இங்குமாக ஆக்டிவ்வாக சுழன்றுக் கொண்டு இருந்தார். இவ்வளவு பேர பார்த்தோம், நம் எல்லோரையும் விழாவிற்கு வரவேற்பு விடுத்த தினகரன்.அரசு அண்ணன காணோமேன்னு தேடினேன். அட, அந்த இளைஞர் தான் தினகரன்.அரசு. நிகழ்ச்சி குஷியிலேயே இளைஞரா ஆயிட்டார் போல....




ஊருக்கு கிளம்ப விடை பெறும் பொழுது தான், ஒரு கல்லூரி விழா முடிந்து கிளம்பும் நினைவு...

மொத்தத்தில் அரசு அண்ணன் பெரியார் சுழி போட்டு துவங்கி வச்சுட்டாரு. மாநில அளவில் சிறப்பானதொரு முகாம். வந்தவர்களுக்கும் பயனுள்ள பயிற்சிப் பாசறை. இனி குறைந்த பட்சம் அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் தோழர்களுக்கு ஒரு பயிற்சிப் பட்டறை நடத்துவது அவசியம்.



# அசத்திட்டீங்க அரசு அண்ணே. நன்றி அண்ணனுக்கும், தோழர்களுக்கும் !
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக